ஆணுக்கும் பெண்ணுக்கும்
கல்யாணம் பேசுகிறார்கள்
அதில் பொருத்தங்கள்
பார்க்கப்படுகின்றன .
ஆனால் கல்யாணம்
வரை செல்ல வேண்டுமாயின்
அதனை தீர்மானிப்பது
சீதனம் எனும் பேச்சில் தான் .
ஆயிரம் செருப்புகள்
தேய்ந்து ஒரு நல்ல
வரனை தேடி கண்டு
பிடிக்காமலே இருக்கிறார்கள் .
ஏனெனில் ஆயிரத்தில்
ஒன்றுதான் உருப்படியாய்
உள்ளதாம் - அதிலும் சில
காது குத்தினதும் , தலைக்கு
கலர் பூசியதுதான் அதிகமாம்
என்கிறார்கள் கல்யாண
புரோக்கர்மார் .
இருப்பவர்கள் பணத்தை வாரி
தன் பிள்ளைக்கு என்று சீதனமாக
அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள் .
பணம் இல்லாதவர்களின் நிலை
என்ன ஆவது ? அவர்களுடைய
பிள்ளைகளும் வாழத்தானே
வேண்டும் ? என்ன உலகமடா
இது ? இவர்கள் மாற
மாட்டார்களா ?திருந்தமாட்டார்களா ?
இதுவும் சொல்வார்கள்
சீதனத்தை என் பொண்ணுக்கு
குடுத்து அனுப்பினால் என்
பொண்ணு போற வீட்டில்
சந்தோசமாக இருப்பாள் .
அவளும் தைரியமாக
இருக்கலாம் , பேசலாம்
ஒருவரும் வால் ஆட்ட
இயலாது - ஆனால்
என் பொண்ணுக்கு
சீதனம் இல்லாமல்
வெறும் கையோடு
அனுப்பினால் அவளை
ஒரு வேலைகாரி மாதிரி
தான் அங்குள்ளவர்கள்
நடத்துவார்கள் அவளுக்கு
அங்கு மரியாதையே
கிடைக்காது என்று
சொல்பவர்களும் இருக்கிறார்கள் .
அதனைவிட மணமகன்
தானே முன்வந்து
எனக்கு சீதனம்
ஒன்றும் வேண்டாம் .
உங்கள் பெண்ணுக்கு
நல்ல மனமும் , குணமும்
இருந்தால் சரி வேறு
ஒன்றுமே எனக்கு வேண்டாம்
என்று சொல்லும் நல்ல
மனமகன்மாரும் உண்டு ,
மாமி மாமா மாறும் உண்டு
என்பதனையும் சொல்லித்தான்
ஆக வேண்டும் .
ஒருசிலர் சீதனத்தை
வாங்கி கல்யாண
தம்பதியினரின் வங்கி
கணக்கில் போட்டு
விடுகிறார்கள் . உங்களுக்கு
கஷ்டம் என்று வந்தால்
மட்டும் அந்த பணத்தை
எடுங்கள் . அவசர தேவைக்கு
மட்டும் பயன் படுத்துங்கள்
என்று இருவீட்டாரும்
சொல்கிறார்கள் - அதுகும்
பருவாயில்லை தானே ....
7 comments:
அசத்தல் ,அருமை
//உங்கள் பெண்ணுக்கு
நல்ல மனமும் , குணமும்
இருந்தால் சரி வேறு
ஒன்றுமே எனக்கு வேண்டாம்
என்று சொல்லும் நல்ல
மனமகன்மாரும் உண்டு ,//
உண்டுதான். ஆனால் அதை பலர் தவறாக எண்ணி விடுகிறார்கள். மாப்பிள்ளைக்கு என்ன குறையோ தெரியலையே.. இப்படி பேசி மணமகனை எதுக்கும் லாயக்கில்லை என்று கூறிவிடுகிறார்களே என்ற அச்சத்தில் வரதட்சணை கேட்கும் ஆண்களும் உண்டு. அதே சமயம் பேராசையால் சீதனம் கேட்பவர்கள்தான் அதிகம் என்பதை நான்ஒப்புக்கொள்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கருத்தை மையமாக வைத்து நான் எழுதிய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது. நேரமிருந்தால் இங்கே சென்று பார்க்கவும். கதை வெளி வந்த இதழின் பக்கத்தை அப்படியே ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன். அதனால் அந்த படத்தின் மீது க்ளிக் செய்தால் நன்றாகபடிக்கலாம்.
http://tiruvarurtalkies.blogspot.com/2009/11/blog-post.html
நல்ல சிந்தனை. எழுத்தும் நன்றாக இருக்கிறது.
நன்றி ஜெய்லானி
உங்கள் வருகைக்கு .
நீங்கள் சொல்வது உண்மை தான் சரவணன் .
மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை . என்னதான் செய்வது ?
நல்லவர்களுக்கு காலம் இல்லை .
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் Dr.எம்.கே.முருகானந்தன்.
என்னுடைய நண்பர்களின் ஊக்கம் தான் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது .
நல்ல கருத்துக்கள். அவ்ற்றிக்கும் மேலாக..
பெற்றோரிடம் எப்படியாவது சீதனத்தை கறந்துகொண்டு சந்தோசமாக வாழநினைக்கும் பெண்களும் இருக்கின்றார்கள்.
அத்துடன், சீதனம் பெற்றுக்கொள்ளும் ஆண்களின், தாய்மாரும், சகோதரிகளும் பெரும்பாலும், வரப்போகும் பெண்களிடம் சீதனம் கறப்பதில் விடாப்பிடியாக இருக்கின்றார்கள்.
முதுகெலும்பில்லாத ஆண்கள், சீதனத்தை எதிர்பார்த்தே எதிர்கால வாழ்வை ஓட்டலாம் என்று எதிர்பார்த்திருப்பார்கள்.
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலையையும் தேடாமல், சீதனத்தை வாங்கிக்கொண்டு சந்தோசமாக, அல்லது ஒரு ஸ்பொன்ஸர் பொம்பிளையை கட்டிக்கொண்டு சந்தோசமாக காலத்தை ஓட்டலாம் எண்றிருக்கும் ஆண்கள் பலரை கண்டிருக்கின்றேன்.
இன்னும், சீதனம் வேண்டாம் என்று சொல்கின்ற ஆண்களை கேவலமாக பார்க்கும் பெண்வீட்டார்களையும் கண்ண்டிருக்கின்றேன்.
ஒட்டு மொத்தத்தில் இது ஒரு சிக்கலான பிரச்சினை.
எங்கள் சமூக, கல்வி அமைப்பு முறைகள் சுயநலமான மனிதர்களை உருவாக்குவதே,இந்த சீதனம் என்ற சமூக விரோதச் செயலை பலர் உணராததற்கு காரணம்.
ஆனாலும், கன்முன்னே காணும் சிறிய சிறிய முற்போக்கான மாற்றங்கள் நம்பிக்கை தருவனவாகவே இருக்கின்றன.
Post a Comment