Thursday, March 18, 2010

உறக்கம்

 http://iamchiq.fooyoh.com/iamchiq_beauty_health/files/attach/images/613/463/467/001/sleepmyths.jpg

எல்லோருக்கும் ஓய்வு தேவைப்படுகின்றது . அந்த ஓய்வை உறக்கத்தின் மூலம் தான் பெற முடியும் . உறக்கம் ஒரு சுகமே. இது ஒரு மருந்தும் கூட. பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள் ஒரு நல்ல உறக்கத்தில் மறைந்து விடுகின்றன.

சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய உடல் பாதிப்பு ஏற்படுகிறது. நெஞ்சுவலி, கால்மூட்டுவலி, மனச் சோர்வு, தினசரிக் கடமைகளைச் செய்ய இயலாமை போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
http://www.psfk.com/wp-content/uploads/2009/02/sleep-reclaim-the-night-bbc.jpg
உறங்குவதற்கு மூன்று மணத்தியாலங்களுக்கு முன்பதாக கோப்பி, தேநீர் போன்ற விழிப்பை ஏற்படுத்தக் கூடிய பானங்களை அருந்தக் கூடாது. சாதார ணமாக ஒரு மனிதனுக்கு 8  மணித்தியால உறக்கம் உடல் ஆரோக்கியத் திற்கு போதுமானது .

மனித வாழ்க்கையில் உறக்கத்திற்கு பாரியதொரு பங்கிருக்கிறது. அதுதான் பகல் முழுவதும் உடல் ரீதியாக, சிந்தனை ரீதியாக, உள ரீதியாக மனிதன் அடைகின்ற களைப்புகளை ஈடுசெய்கின்றது. உறக்கத்திற்கான நேரத்தை வரையறுத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண் டும். குறிப்பாக இரவிலே அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.  பகல் வேளை களில் ஏற்படும் சிறு தூக்கத்தை புறக்கணித்து விடக் கூடாது. 
http://www.thinkbaby.co.uk/news/images/a_to_z_of_sleep0.jpg
நமது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த உறக்கம் உதவுகிறது என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தின் போதுதான் செல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதத்தை நமது உடல் தயார் செய்கிறது. உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு உறவாடும் நடவடிக்கைகளையும் மூளையில் கட்டுப் படுத்தும் பகுதிக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால் விழிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. 


ஏமாற்றத்திற்கும், நம்பிக்கைக்கும் ஒரு பாலம் உண்டு என்றால் அது ஒரு முழுத் தூக்கமேயன்றி வேறில்லை. ஆனால், சிலருக்குப் படுத்தால் தூக்கம் வராது. எவ்வளவுதான் புரண்டுப் படுத்தாலும், சில மணி நேரங்கள் ஆனாலும் தூக்கம் வராது. எழுந்திருந்து குளியலறைக்குச் சென்று திரும்பினாலும் கூட தூக்கம் வராது. தூக்கம் வராத வேளையில் எரிச்சலும், களைப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.
http://factoidz.com/images/user/sleep.jpg
ஆரோக்கியமான உறக்கத்தைப் பேணிக் கொள்வதற்கு உடல் ரீதியான ஓய்வு,  சிந்தனா ரீதியான ஓய்வு,  உள ரீதியான ஓய்வு என  மூன்று வகைகளில் உண்டு . இவற்றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டாலும் உறக்கமின்மைக்கு அதுவே காரணமாகிவிடும். சுவாசத்தில் ஏற்படுகின்ற சிரமம், ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி சிந்தித்தல், குடும்பப் பிரச்சினைகள் போன்றன உறக்கத்தை பாதிக்கக் கூடியனவாகும். 

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்லது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்றநிலையை விட பெரிய பிரச்சனை வேறொன்றும்  இல்லை . 
http://fromtherough.files.wordpress.com/2009/11/sleep-schedule.jpg


நித்திரை குளுசை குடித்தால் தான்  தூக்கம் என்றநிலை சிலருக்கு இருக்கிறது . ஆனால் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கண் மூடியதும் தூக்கம் வருகிறது. உடற்பயிற்சி என்பது ஒர் இயற்கை தூக்க மாத்திரை என்பதில் சந்தேகமில்லை.


சிலர் நித்திரை கொள்வார்கள் . வீட்டுக்கு யார் வந்து போனாலும் அவர்களுக்கு தெரியாது . அவர்களை கும்பகர்ணன் போல நித்திரை கொள்கிறாயே என வீட்டில் உள்ளோர் கூறுவார்கள் . இப்படியானவர்களும் உண்டு . 
http://www.topnews.in/health/files/sleep.jpg
இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் தூக்கத்தின் அருமை நன்கு தெரியும் அதிகாலை யில் தூக்கம் தானாக வரும். ஒரு சில நேரங்களில் எவ்வளவோ போராடியும் இறுதியில் முடியாமல தூங்கிவிடுவார்கள். விபத்து நேரிட்டு மரணமே ஏற்படும் என்று தெரிந்தும் தூங்கிவிடுவார்கள். 


நெஞ்செரிச்சல் அல்லது நெஞ்சுவலி, மூட்டு வலி,  புற்று நோய்,  டிமன்சியா என்றமறதி நோய்,  மனநிலைப் பாதிப்பு என்று இருப்போர்களுக்கு தான் அதிகம் தூக்கம் வருவதில்லை . இவை தூக்கம் வராமல் இருப்பதற்க்கான காரணங்களாக கூறப்படுகின்றன .
http://www.topnews.in/health/files/Less-Sleep.jpg
தூக்கத்தைக் கெடுக்கும் சிகரெட், புகையிலை, மது போன்றபழக்கங்களைக் கைவிட்டு விட வேண்டும். 

தூக்கம் வராதபோது முகத்தில் உள்ள தசைகளைத் தளர்த்தும் பயிற்சி எடுங்கள். திடீரென்று உங்களது முகத்தில் உள்ள தசைகளின் இறுக்கத்தைச் சோதித்துப் பாருங்கள். கண்களைப் பாதி அடைத்து, சில நிமிடங்கள் வைத்துப்பாருங்கள் தூக்கம் தானாக வரும். கீழ் இமைகளின் அடிப் பகுதியை விரல்களால் தொட்டு மென்மை யாக மேல்நோக்கி உயர்த்தி ஒரு சில வினாடிகள் பிடித்தால் கூட தூக்கம் வந்துவிடும்.

ஓய்வு நமக்கு முக்கியம் தேவை . உடம்பில் உள்ள எல்லா நரம்புகளும் ஓய்வு எடுப்பதற்க்கு உறக்கம் இன்றியமையாதது .



 







 



















.

5 comments:

Anonymous said...

super..........


kopi

Anonymous said...

enakku urakkam varuthilla.


siva

Anonymous said...

thookkam kudiyai kedukkum .


vino

Pavi said...

நன்றி கோபி

Pavi said...

நன்றி வினோ