பேராண்மை வெற்றிக்குப்பின் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பெயர் தான் தில்லாலங்கடி . ஜனரஞ்சகமான படமாக உருவாகிவரும் தில்லாலங்கடி படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க, முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ஷாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வடிவேலு, சந்தானம், மனோபாலா, மன்சூரலிகான், லிவிங்ஸ்டன் போன்றோரும் கௌரவ வேடத்தில் ராதாரவி நடிக்க, ஜெயம் ரவியின் தந்தையாக, மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருக்கிறார்.
பொறுப்பான வனத்துறை அதிகாரியாக ‘பேராண்மை’ யில் நடித்த ஜெயம் ரவி, படு ஜாலியான சாக்லேட் பையனாக‘தில்லாலங்கடி’ யில் மாறிவிட்டார். தமன்னாவும் , ஜெயம் ரவிக்கும் நல்ல பொருத்தம் . இருவரும் அசத்தல் அழகாக இருக்கிறார்கள் . பட காட்சிகளும் , உடை அலங்காரங்களும் ரொம்பவே அழகாக இருக்கின்றன . இப்போது போட்டோவை பார்க்கவே அழகாக இருக்கிறார்கள் . பட ஸ்டில்கள் ரொம்பபே அழகு தான் . படம் எப்போது வெளிவரும் பார்க்க வேண்டுமே என்ற ஆவலாக உள்ளது .
ஜெயம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை எம் குமரன் , சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எம்.ராஜா இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு இசையமைப்பவர் யுவன்சங்கர்ரராஜா. ஜெயம் ரவி, தமன்னா, ஷாம் மூவரைச் சுற்றி வருகிறது கதை. படத்தி்ன் இரண்டாம் பாதி முழுக்க மலேசியாவில் படமாக்கப்படுகிறது.
இயக்குநர் எம்.ராஜாவும், யுவன்சங்கர்ராஜாவும் முதன்முறையாக இப்படத்தில் இணைகிறார்கள். இப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் யுவன். பாடல்களும் அழகிய இடங்களில் சூட் பண்ணி இருக்கிறார்கள் . ஆக மொத்தத்தில் சூப்பர் ஹிட் பாடல்களும் , காட்ச்சிகளும் இருந்து ரசிகர்களை அதிர வைக்க இருக்கிறது தில்லாலங்கடி.
இன்னும் ஒரு செய்தி .சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் கோழி வெடக்கோழி பாடலைப்போல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எம்.ராஜா அந்தப்பாடலை யாரை பாட வைப்பது என்று ஆலோசித்தபோது, சிம்புவைப் பாட வைக்கலாம் என்று யோசனை சொன்னார் ஜெயம்ரவி. உடனே சிம்புவும் அந்த பாடலை உடனே பாடி முடித்து விட்டார் .
நான், அண்ணன் ரவி மற்றும் அப்பா எடிட்டர் மோகன் மூவரும் இணைந்தாலே அந்தப் படம் சூப்பர் ஹிட் என்று பெயர் கிடைத்துள்ளது. ‘தில்லாலங்கடி’ யும் அந்த வெற்றிக்கணக்கில் சேரும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜெயம் ரவி .உங்களின் நடிப்பில் ரசிகர்களும் ஒரு நல்ல படத்துக்காக காத்து இருக்கிறார்கள் . பேராண்மை வெற்றிக்கு பிறகு நடிக்கும் படம் என்பதால் பலரின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது .
"நாயகனை காதலிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில், தன்னையே புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் தமன்னா" . இப்பாடலில் ஒரே ஷாட்டில் பதினைந்து ஜெயம் ரவியும், ஐந்து தமன்னாவும் தோன்றுவதுபோல காட்சி அமைக்கப்பட்டது.
அதற்காக "நீரோ மோஷன் கண்ட்ரோல்" என்ற நவீன கேமராவைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்ச்சியே . ரசிகர்களை கவரும் வகையில் அந்த பாடல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
ரசிகர்கள் அனைவரையும் கவரும் விதத்தில் தில்லாலங்கடி படம் இருக்கும் என்று கூறுகிறார்கள் . பொறுத்திருந்து பார்ப்போம் .
11 comments:
"பேராண்மை" தவிர வேறே எந்த
ரவி படமும் நான் பார்த்ததில்லை.
ஆனா உங்க REVIEW படம், வந்த உடன் பார்க்கலாம் போலிருக்கு.
பவி,
படத்தப் பத்துன build-up ok. தமன்னாவைப் பத்தி எதுவுமே சொல்லலயே! ஏன்?
ஸ்ரீ....
padankal arumai.
raviyum, thamannavum alakaaka irukkiraarkal.
vishnu
padam eppothuvarum ena kaaththu irukkiren
suba
padankal arumai.
jayam raviyum, thamannavum alakaaka irukkiraarkal.
vishnu
super hit aakum padam paarunko.
enakku pidiththa jayam raviyum, thamannavum nadikkiraarkal enraal summaava?
thool kilappuvaanka.
mano
நன்றி மகாராஜன் .
ம்ம்ம்ம்ம்ம் பார்ப்போம்
தமன்னா தானே இப்போது முன்னணி நடிகை ஆகி விட்டார் . அவரை பற்றி மட்டுமே ஒரு பதிவு இட்டு இருந்தேன். பிறகும் ஏன் அலசுவான் என விட்டு விட்டேன் .
நன்றி ஸ்ரீ
ம்ம்ம்ம் ரொம்பபும் அழகாக இருக்கிறார்கள் .
நன்றி விஷ்ணு
எல்லோரும் காத்து கொண்டு இருங்கள் . படம் வரும் வரை .
நன்றி சுபா
ம்ம்ம்ம் தூள் கிளப்புவாங்களா என்று பார்ப்போம் மனோ
Post a Comment