Monday, May 3, 2010

ரெய்னாவின் அபார ஆட்டம் தொடர்கிறது

 http://cdn.wn.com/ph/img/40/a4/6f991ec9b9ae320f3b8bf9c7a6d6-grande.jpg
 
ஐ . பி . எல் போட்டியில் கலக்கிய ரெய்னாவின் ஆட்டம் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டியிலும் தொடர்கிறது .  நேற்று நடந்த போட்டியில் அபார சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.
http://www.cricrepublic.com/wp-content/uploads/2009/11/ICC-World-Cup-T20-Logo-060709.jpg
நேற்று நடந்த 3வது உலகக் கிண்ண  டுவென்டி 20 போட்டியில், தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது இந்தியா. முதலில் துடுப்பாட சென்ற  இந்தியா தொடக்க வீரர்களான முரளி விஜயையும், திணேஷ் கார்த்திக்கையும் அடுத்தடுத்து இழந்தது. இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது .
ICC World Twenty20 2010: India ease into Super Eights after 
defeating South Africa
இந்த நிலையில், ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் இணைந்தனர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். இருவரும் இணைந்து 88 ஓட்டங்களை  சேர்த்து இந்தியாவின் ஸ்கோரை வலுப்படுத்தியதோடு, தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தையும் தகர்த்தனர்.
http://stbjp.msn.com/i/72/49EE73D8E6D89C7477E2422ED82CA.jpg
யுவராஜ் சிங் 30 பந்துகளில் 37 ஓட்டங்களை  குவித்து ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி 101 ஓட்டங்களை  குவித்து ஆட்டமிழந்தார். டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சதம்  பெற்ற  3வது வீரர் என்ற பெயரையும் பெற்றார் ரெய்னா. அதேசமயம், முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.
http://cdn.wn.com/ph/img/9b/a7/da461e243752dd791e4607632b0d-grande.jpg
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டனகளை  குவித்தது இந்தியா. பின்னர் ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கலிஸ் சற்று நம்பிக்கை தரும் வகையில் ஆடினார். மற்றையோர் சொப்பிக்கவில்லை . யூசுப் பதானும், ஆசிஷ் நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினர்.
http://www1.pictures.gi.zimbio.com/India+v+Bangladesh+ICC+Twenty20+World+Cup+1BQyUQCzac5l.jpg
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை  மட்டுமே தென் ஆப்பிரிக்காவால் எடுக்க முடிந்தது.  இந்தியாவிடம் தோல்வியை தழுவியது .

கிளெயன்வெல்ட் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் யூசுப் பதான் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம்  எடுத்தார். பின் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த ரெய்னா, கடைசி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மொத்தம் 25 ஓட்டம்  எடுக்கப்பட்டது. யூசுப் 11 ஓட்டங்கள்  எடுத்தார்.

நேற்றைய போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற ரெய்னா 60 பந்துகளில் , 9 பவுண்டரி, 5 சிக்சர் அடித்து அசத்தினார் . வான வேடிக்கை நடத்தினார் .டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில் சதம் கடந்த முதல் இந்தியர் என்ற மேலும் ஒரு புதிய சாதனை படைத்தார். முன்னதாக காம்பிர் (75) அதிகபட்ச ஸ்கோரை பெற்றிருந்தார். இதேபோல உலக கிண்ண அரங்கில் இச்சாதனை படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (117) இச்சாதனை படைத்தார்.

 இதன்மூலம் ரெய்னா, சர்வதேச "டுவென்டி-20' கிரிக்கெட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2009ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களே  எடுத்தார்.
http://cdn.wn.com/ph/img/b8/e6/71aaa55d2dc5682bb5d66be1eb94-grande.jpg
சதம்  குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், ""சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் முதன்முறையாக சதமடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு சகவீரர் யுவராஜ் சிங், நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஐ.பி.எல்., தொடரை அடுத்து, உலக கோப்பை தொடரிலும் 3வது வீரராக களமிறங்கி அசத்தி வருவது உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடி காட்டும் பட்சத்தில், மேலும் பல சதம் கடந்து சாதிக்க முடியும்,'' என்றார்.  நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ரெய்னா  தெரிவு செய்யப்பட்டார் . தொடரட்டும் உங்கள் அதிரடி ரெய்னா .

8 comments:

ரவி said...

கிண்ணத்த வாங்கிடுவார் கவலைப்படாதீங்க

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு. ரெய்னாவின் வாண வேடிக்கைகளை நானும் ரசித்தேன்.

Madumitha said...

Rain a?

Bala said...

எனக்கு ரெய்னாவை பார்த்தால் 90 களின் ஆரம்பத்தின் சச்சினை பார்ப்பது போலுள்ளது. மனதில் எந்த பயமோ, கவலையோ இல்லாமல் விளையாடுகிறார்.

Pavi said...

நம்பிக்கை இருக்கு பார்ப்போம் .
நன்றி ரவி

Pavi said...

நன்றி சரவணகுமார்
நானும் ரசித்தேன்

Pavi said...

இல்லை மழை இல்லை .
ரெய்னா சுரேஷ் ரெய்னா

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் சாதுவாக வந்து மிரட்டுகிறார் எதிரணியை .
நன்றி பாலா