தமிழ் திரை உலகில் கமலுக்கு பின்பு அதிகம் மினக்கெட்டு கெட்டப் மாற்றி படத்துக்கு படம் வித்தியாசனமாக நடித்து கொண்டு வருபவர் விக்ரம் . பாலாவின் சேது படம் மூலம் அறிமுகமானார் . சேதுவில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் விக்ரம் . படம் மிகவும் சிறந்த படமாக இருந்தது . பெரும் வெற்றி பெற்றது . எல்லோரும் விக்ரமின் நடிப்பை பாராட்டினார்கள் .
அதன் பின்பு பலபடங்கள் நடித்து இருந்தார் . பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் , விக்ரமும் சேர்ந்து நடித்து இருந்தனர் . அதிலும் தனது வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் மூலம் அசத்தலாக நடித்து இருந்தார் . காசி படத்தில் கண் தெரியாத குருடன் வேடம் ஏற்று நடித்து இருந்தார் .
சங்கரின் அந்நியன் படத்துக்காக பல வருடங்கள் கஷ்டப்பட்டு மூன்று வேடம் ஏற்று நடித்து இருந்தார் . மூன்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களாகவும், மூன்று வேடமும் வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்து இருந்தார் . அந்த படமும் மிகப்பெரும் வெற்றி அடைந்தது .
அடிதடி , ஆக்ரோசம் , குடும்ப பின்னணி என எல்லாம் சேர்ந்த மசாலா படங்களும் நடித்து இருக்கிறார் . தூள் படத்தில் அதிரடியாக நடித்து அசத்தி இருந்தார் . சாமி படத்தில் பொறுப்பான போலீஸ் அதிரடியாக நடித்து இருந்தார் .
இப்போது அதிகம் மினக்கட்டு , கஷ்டப்பட்டு நடித்து முடித்து இருக்கிறார் மணிரத்தினத்தின் ராவணன் படம் .
மணிரத்தினத்தின் படம் ஒன்றிலாவது நடிக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கி இருக்கிறார் விக்ரம் . மணிரத்தினத்தின் படங்கள் எல்லாம் எல்லோரும் பார்க்க கூடிய குடும்ப படமாகவும் , மென்மையான காதல் , சிறந்த கதை அம்சம் , சிறந்த பாடல்கள் என்று இன்னும் சொல்லி கொண்டு போகலாம் . அவருடைய படங்களில் எல்லாம் சிறப்பாக இருக்கும் . ராவணன் பட பாடல்கள் எல்லா இடங்களிலும் சக்கை போடு போடுகின்றன . படம் எப்போது வெளிவரும் என்று எல்லோரும் ஆவலாக உள்ளனர் .
மனித உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் திரையில் காண்பிப்பதில் 'கிங்' மணிரத்னம். அதை, 'ராவணன்' படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே மிக சிறந்த படம் என்று படத்தை பார்த்தவர்கள் சொல்கிறார்கள். வீரா, நான் இதுவரை நடித்திராத சவாலான கதாபாத்திரம். முதல் முறையாக இந்தியில் நடித்து இருக்கிறேன் என்று கூறுகிறார் விக்ரம்
ராவணனுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு 150 நாட்கள் காட்டுக்குள் இருந்து நடித்து உள்ளார்கள் ராவணன் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் . ஒவ்வொரு காட்சியிலும் ரிஸ்க் எடுத்து நடித்து உள்ளார்கள் . மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும். பாலா, தரணி ஆகியோரின் இயக்கத்திலும் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் விக்ரம் .
இன்னும் உங்களிடம் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் , ராவணன் படம் எல்ப்போது வெளிவரும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள் .
10 comments:
wht.. Vikram introduced in film Sethu?
நல்ல நடிகர்
பவி பாலாவின் சேது முலம் மீண்டும்
அறிமுகமானார் என்பது தான் பொருத்தமாக இருக்கும்,ஏனென்றால்
அவர் அறிமுகபடுத்தபட்டது இயக்குனர் மேதை
ஸ்ரீதர் அவர்களால்,
poorman's kamal?
mmmmmm super article
suba
iam a vikram fan
raja
தன்னை வருத்தி நடிக்கும் ஒரு நடிகர் விக்ரம். இராவணன் படத்தை எதிர்பார்ப்பதற்கு விக்ரம் மட்டுமா? இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றதே :)
அவர் முதலில் பல படங்கள் நடித்து இருந்தாலும் அவரை விக்ரம் என்ற நடிகர் இருக்கிறார் என்று அடையாளப்படுத்திய படம் தான் சேது . அதை தான் நான் குறிப்பிட்டுள்ளேன் .
நன்றி நண்பரே
எல்லோராலும் அறியப்பட்டது சேதுவில் தான் . ம்ம்ம்ம்ம்ம் நன்றி மகாராஜன்
நன்றி மதுமிதா
அதென்றால் உண்மைதான் .
ராவணன் படத்தை எதிர்பார்க்க பல காரணம் உண்டு தான் . மணிரத்தினத்திட்காக , ஐஸுக்காக என்று நீண்டு கொண்டு செல்லும் பட்டியல் .
நன்றி உங்கள் வருகைக்கு சுபாங்கன் .
எனது தளத்துக்கு நீங்கள் வந்ததையிட்டு மகிழ்ச்சி
Post a Comment