38 வயதான இவர் ஆடம்பரமில்லாத அமைதியான ஒரு வீரர், இவரது இழப்பு ஏற்கமுடியாத ஒன்று. இவரது தன்னடக்கமும் , தன்னம்பிக்கையும், எந்த நிலையிலும் மனம் தளராத குணமும் தான் இவரை உலக சாதனை நாயகனாக உயர்த்தியிருக்கிறது. ஒரு சாதனையாளருக்கு உரித்தான பண்புகள் எல்லாம் முரளியிடமும் உள்ளது.டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல தடைகளைத் தாண்டி தனக்கென தனிமுத்திரை பதித்திருக்கும் முரளி எந்த ஆடுகளத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர் ஆவார் .

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 1972 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த முரளி இலங்கை கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரணகர்த்தாவாக உள்ளார் . தனது சுழல் பந்து வீச்சு மூலம் பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்து ஆட்டம் இழக்க வைத்தவர் .
மனிதாபிமானம் மிக்கவரான முரளி 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார் .

டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தவர், இதுவரை 132 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 792 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நேற்று இந்தியாவுக்கு எதிராக காலியில் தொடங்கிய டெஸ்ட் தான், முரளிதரனுக்கு கடைசி போட்டி. இத்துடன் ஓய்வு பெறுகிறார். இவரை கௌரவிக்கும் விதமாக தங்க நாணயத்தில் நேற்று "டாஸ்' போடப்பட்டது. இதில், ஒரு புறம் முரளிதரனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
![]() |
தனது மனைவியுடன் முரளி |

துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டார் . ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இப்படியே முரளியின் சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம் . இன்னும் நீண்டு கொண்டே போகும் .
ஓய்வு குறித்து முரளிதரன் கூறியதாவது : கிரிக்கெட் அரங்கில் சாதனை படைப்பது எளிதல்ல. என்னைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். எனது செயல்பாடுகளில் குறை ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். இதனால் நான் ஓய்வு பெறும் தருணமும் மகிழ்ச்சியாகவே அமைந்து விட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக "இவர் எப்பொழுது ஓய்வு பெறுவார்' என மக்கள் எதிர்பார்ப்பதற்கு முன்னே, இம்முடிவை எடுத்து விட்டேன். இதையே பெரும் சாதனையாகக் கருதுகிறேன். கிரிக்கெட் அரங்கில் இனி நான் சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் இளம் வீரர்களுக்கு வழிவிட விரும்புகிறேன். இவ்வாறு முரளிதரன் கூறினார்.

முரளிதரன் குறித்து இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறுகையில்,"" முரளிதரன் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் .அவரது ஓய்வு இலங்கை அணிக்கு மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் உலகிற்கே இழப்பு. கிரிக்கெட் அரங்கில் நான் நுழைவதற்கு அவரே காரணம். அவருக்கு நிகரான சுழற் பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை,'' என்றார்.

முரளியின் சாதனைகள் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடியன . அவற்றை அடைவது சாதாரண விடயமல்ல . ரசிகர்கள் எல்லோருக்கும் முரளியின் ஓய்வு கவலை அளிப்பதாக தான் உள்ளது . எனினும் அவரின் முடிவு ஏற்கத்தக்கது . அவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் சாதனை சுழல் பந்து வீச்சாளனாக...............நல்ல மனிதனாக .

2 comments:
நண்பர்களே !சீர்காழி பற்றி அறிய செய்திகள் தெரிந்து கொள்ள இதை கிளிக் பண்ணுங்க
http://sirkaliarea.blogspot.com/
நன்றி மணிகண்டன் உங்கள் வருகைக்கு .
நாங்களும் அறிந்து கொள்கிறோம் சீர்காழியை பற்றி .
Post a Comment