Tuesday, July 27, 2010

இலங்கை அணி அபாரம்

Tharanga Paranavitana and Kumar Sangakkara hit centuries to help Sri Lanka to a strong 312 for 2 on the opening day at the SSC

இலங்கை , இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி நேற்று ஆரம்பமானது . 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களை எடுத்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்து  ஆடிய   இலங்கை அணிக்கு தில்ஷன் அதிரடி தொடக்கம்  தந்தார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 4 வது ஓவரில், தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்து அசத்தினார் தில்ஷன். இவருடன் இணைந்த பரனவித்தாறன , பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வழக்கம் போல இந்திய அணியின் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது. டெஸ்ட் அரங்கில் 15 வது அரை சதம் கடந்த தில்ஷன், ஓஜா சுழலில் வெளியேறினார். இவர் 10 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 54 ஓட்டங்களை  விளாசினார்.
Kumar Sangakkara celebrates his century with Tharanga Paranavitana

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த பரனவித்தாறன , சங்ககரா ஜோடி இந்திய பந்து வீச்சை, நாலாபுறமும் சிதறடித்தது. அடிக்கடி பந்து வீச்சாளர்களை  மாற்றியும், இந்திய அணியால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. டெஸ்ட் அரங்கில் இரண்டாவது சதம் அடித்து அசத்திய பரண இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். இவர் 10 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 100 ஓட்டங்களை எடுத்தார் . . மறுமுனையில் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 23 வது சதம் கடந்தார். சங்ககரா, பரணவிதனா ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 174 ஓட்டங்களை குவித்தது.
Suresh Raina and Rahul Dravid look on during the morning session

முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி . இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்படலாம்.2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி அபாரமாக ஆடி 312 ஓட்டங்களை  குவித்துள்ளது.
Pragyan Ojha and Harbhajan Singh had a tough day

இந்திய அணி பந்து வீச்சில் போதிய கவனம் செலுத்தாததே காரணம். இனி வரும் நாள்களிலாவது இலங்கை அணியின் ரன்களை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.கம்பீர், யுவராஜ் விளையாடவில்லை .  2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 312 ஓட்டங்களை எடுத்திருந்தது. சங்ககரா (130), ஜெயவர்தனா (13) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த், ஓஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Kumar Sangakkara goes on the offensive
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி ஆடி கொண்டு உள்ளது . தற்போது 365 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டை இழந்து சங்ககாரவும் , மகேலவும் களத்தில் ஆடிக்கொண்டு உள்ளனர் . முரளிக்கு பதில் மென்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் .




 

5 comments:

டிலான் said...

இங்க மச் பார்க்க முடியலை. கிரிக்இன்போவில போட்டுட்டு லைவ் ஸ்கோர் பார்ப்பேன். தங்கள் தகவல்கள் உபரி. பதிவுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

thiramai ullavan vetri perattum pavi...

vilaiyattilum Arasiyal ullavarai ithuthaan natakkum.

vidunnka

Pavi said...

நன்றி டிலான்

Pavi said...

திறமையாக ஆடும் அணி வெற்றி பெறும்.
நன்றி குமார்

Pavi said...

இணைகிறேன் . நன்றி உங்கள் அழைப்புக்கு