Saturday, July 31, 2010

கால்களுக்கு ஏற்ற செருப்பு அணியுங்கள்


  • இப்போதெல்லாம் உடை நிறத்துக்கு ஏற்ற செருப்பு அணிகிறார்கள் . அது எல்லோராலும் முடியாத காரியம் . அதனால் கருப்பு நிறத்தில் அமைந்த செருப்பாகவும் , தற்போதைய நாகரிகத்துக்கு ஏற்ற மாதிரியான செருப்பை தேர்ந்து எடுங்கள் .
http://www.sergecantininc.com/med_r/bata_2.jpg
  • கால்கள் சுத்தமாக இருப்பது போல் உங்கள் செருப்பையும் சுத்தமாக வைத்திருங்கள் .
  • ஆண்களும் சரி பெண்களும் சரி எப்பொழுதும்  செருப்பு வாங்கினாலும் அழகு, அளவு மற்றும் தரமான செருப்பாக கவனித்து வாங்கவும்.
http://www.boston.com/yourlife/home/stylephile/Marilyn%20Monroe%20P02-131.jpg
  • மற்றவர்களின் செருப்பு நல்லதாக இருக்கிறதே என்று வைபவங்களுக்கு செல்லும் இடத்தில் உங்களது செருப்பை விட்டுவிட்டு மற்றவர்களுடைய செருப்பை களவாக போட்டு கொண்டு வராதீர்கள் . இப்படி பல இடங்களில், பலர் இதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள் . அதை தவிருங்கள் .

  • கால்களுக்கு அதிக இறுக்கமான செருப்புகள் வாங்கக்கூடாது.
  • செருப்பினை கால்களில் போட்டு பார்த்து 4,5 அடி தூரம் நடந்து பார்த்து உங்கள் காலுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே வாங்கவும். அதுதான் சிறந்தது .
  • விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமான கம்பெனி தயாரிக்கும் செருப்பு வாங்கவும்.
http://bi.gazeta.pl/im/6/5500/z5500796X.jpg
  • அதிக உயரம் கொண்ட பாத அணிகளை அணியாதீர்கள் . அதாவது  ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதனை குறைத்துக்கொள்ளவும்.பாதங்களுக்கு ஓடும் இரத்தம் கட்டுப்படும் .
  • அதிக நேரம் தண்ணீரில் செருப்புகளை நனைய விடாதீர்கள் .
  • வயதானவர்கள் அதிக கனமில்லாத செருப்புகளை வாங்கவும்.

  • மழை காலத்தில் இறப்பர் செருப்புகள் அணிய வேண்டாம்.
  • பிளாஸ்டிக் செருப்புகளை வாங்குவதை விட தோல் செருப்புகள் வாங்குவது நல்லது.
  • வீட்டில் அணியும் இறப்பர்  செருப்புகள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் . தினமும் கழுவி பயன்படுத்தவும் .














2 comments:

ப.கந்தசாமி said...

நல்ல அறிவுரை.

Pavi said...

நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்