Monday, August 23, 2010

இலங்கை அணி அபார வெற்றி


இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நேற்று தம்புள்ள மைதானத்தில் பகலிரவு, ஆட்டமாக ஆரம்பமானது . நாணய சுழற்ச்சியில் வென்ற தோனி முதலில் துடுபெடுத்தாட தீர்மானித்தார் .
இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கையும், இறுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இந்தியாவும் களமிறங்கின.
http://nimg.sulekha.com/sports/original700/india-sri-lanka-cricket-2009-12-18-11-11-45.jpg
முதலில் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக், சேவாக் இருவரும் நேற்று நம்பிக்கைதரும் விதத்தில் ஆடவில்லை . சேவாக்கின் அதிரடியை காண இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது . சேவாக், 12 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார். குலசேகராவின் வேகத்தில் வெளியேறினார் .  தினேஷ் கார்த்திக் 9 ஓட்டங்களுக்கு நடையை கட்டினார் .
India's captain Mahendra Singh Dhoni walks back after Sri Lanka defeated India by 8 wickets during the Tri Series ODI cricket match in Dambulla. Photo: AP

பின்பு வந்த வீரர்களும் குலசேகர , மலிங்க , புதுமுக வீரர் பெரேரா ஆகியோரின் வேகத்துக்கு நின்று பிடிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுக்கே வெளியேறினர் . யுவராஜ் மட்டுமே நம்பிக்கைதரும் விதத்தில் விளையாடினார் . ஏனையோர் ஒருவரும் பிரகாசிக்க தவறினர் .
ஜடேஜா, பிரவீண் குமார் ஆகியோர் ஓட்டங்கள் பெறாமலே வெளியேறினர் . கடைசி 5 விக்கெட்டுகளுக்கு 7 ஓட்டங்களை மட்டுமே இந்தியா சேர்த்தது. அணியின் பின்னடைவுக்கு இது காரணமாயிற்று . பெரேரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார் . இந்திய அணி 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டையும் பறிகொடுத்தது .
http://i.ytimg.com/vi/qhAA6v991gA/0.jpg
104 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய மஹேல, டில்ஷான் ஜோடி அபாரமாக விளையாடியது . 35 பந்துகளைச் சந்தித்த மஹேல  6 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களை  எடுத்து சர்மாவின் பந்து வீச்சில் வெளியேறினார் .  டில்ஷான் 35 ஓட்டங்களை பெற்று சர்மாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர் . http://www.sports.lk/wp-content/uploads/cache/1766_thumbzoom.jpg
பின்பு நிதானத்துடன் ஆடிய சங்ககார , தரங்க இருவரும் சேர்ந்து இலங்கை அணியை வெற்றி பெற செய்தனர் . 15.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலங்கை அணி வெற்றி பெற்றது . ஆட்ட நாயகனாக பெரேரா தெரிவானார் . இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது . இலங்கை அணியுடன் மோதும் மற்றைய அணி எது ? இந்தியாவா , நியூசிலாந்து அணியா எனபொறுத்திருந்து பார்ப்போம் .





 

6 comments:

S Maharajan said...

அம்பயரின் தவறான முடிவு இந்தியாவுக்கு தோல்வி பவி!

Anonymous said...

srilankaavin panthuveechchu palamaka ullathu.


vino

Pavi said...

என்ன நீண்ட நாட்களாக ஆளை காணவில்லை .
தவறான தீர்ப்பும், பொறுப்பற்ற துடுப்பாட்டமும் தான் .
நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி வினோ

'பரிவை' சே.குமார் said...

பவி...
இந்தியா தோற்றது மனசுக்கு வருத்தம்தான்.
ஒரு தலைப்பட்ச தீர்ப்பு பலியாகிவிட்டனர். அவ்வளவுதான். பாவம் நடுவர்களும் என்ன செய்வார்கள். இலங்கைக்கு வாழ்வா சாவா போட்டி அது. இந்தியாவுக்கு நாளைய போட்டியில் வெற்றி கிட்டட்டும்.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்
நன்றி குமார்