Monday, August 2, 2010

அன்னாசி அன்னாசி

http://www.onogelatocompany.com/i/flavors/pineapple.jpg
எனது ஒவ்வொரு பதிவிலும் நான் பழங்கள் பற்றி எழுதுவதுண்டு . இன்றும் ஒரு பழம். அதுதான் எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது .

மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த பழம் வெளியில் முட்கள் மாதிரி இருக்கும் . அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை  விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது . தினம் ஒரு பழம் சாப்பிட வேண்டும் . அது போல அன்னாசியை வாங்கி சாப்பிடலாம் .
http://www.mrbigben.com/food/twin-fruit-pineapple-719390.JPG
எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு. ஒரு நாளைக்கு பப்பா பழம் , ஒரு நாளைக்கு வாழை பழம் , பலாப்பழம் என்று ஒரு நாளைக்கு அன்னாசிப் பழத்தையும் வாங்கி சாப்பிடுங்கள் . எல்லோருக்கும் உகந்தது . பல பயன்களை கொண்டமைந்தது . பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அன்னாசிப்பழம் .

100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு
http://image.made-in-china.com/2f0j00RvpaZKPyCuco/Canned-Pineapple-Chunk.jpg
நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன்  இதன் சக்தியை .
http://image.made-in-china.com/2f0j00lesTficFHQWV/Canned-Pineapple.jpg
 அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
http://www.theleevalley.co.uk/wp-content/uploads/2009/12/pineapples.jpg

தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல்  இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். 

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள் .
http://www.bayvalleyfoods.com/products/foodservice/recipes/Pudding/Vanilla%20Pineapple%20Smoothie.jpg
அன்னாசிப் பழத்தில் ஜாம் , ஜூஸ், வற்றல் என்பன தயாரிக்கப்படுகிறது . அன்னாசி பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும் . அன்னாசி பழம் சப்பிடாதோர் ஒருமுறை சாப்பிட்டு தான் பாருங்களேன் .


















16 comments:

Sivatharisan said...

அன்னாசி பற்றிய மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

Anonymous said...

enakku romba pidikkum annasippalam pavi. suvaiyaana thakavalkal.


kala

Pavi said...

நன்றி சிவதர்சிகன்

Pavi said...

நன்றி கலா

'பரிவை' சே.குமார் said...

அன்னாசி பற்றிய மிக அருமையான பதிவு.

ம.தி.சுதா said...

சகோதரி எனக்கு அன்னாசி என்றாலே ஒவ்வாமை இருக்கிறது. சத்தியமாக சாதுவாக சொறிகிறது. கட்டுரையில் அன்னாசி வாசனை கமழ்கிறது

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

Sivatharisan said...

உங்களுடைய வலைப்பூ மிகவும் அழகாக உள்ளது.ஆனால் என் நீங்கள் எதுவித ஓட்டளிப்புப் பட்டையும் இணைக்காமல் உள்ளிர்கள்.உங்கள் வலைப்பூவிற்கு வோட்டிங் செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

Pavi said...

சிலருக்கு ஒத்துவராது . அலேர்ஜி என்று நினைக்கின்றேன் .
நன்றி சகோதரி சுதா

Pavi said...

நன்றி மணிகண்டன்
இணைகிறேன்

Pavi said...

எனக்கும் பிடித்து இருக்கிறது .
இதோ சில ஓட்டளிப்பை நிறுவி உள்ளேன் .
அவற்றில் கூடிய கவனம் செலுத்துவதில்லை .
நன்றி சிவதர்சிகன் உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் .
உங்களது விமர்சனங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் . அவற்றை நிவர்த்தி செய்ய காத்து இருக்கிறேன்

RAGUNATHAN said...

ANNASI PARRI NALLA PATHIVU. ANNACI SAAPIDANUM POL IRUKKU.. :)

Pavi said...

நன்றி ரகுநாதன்