Monday, September 27, 2010

சம்பியன் லீக் போட்டியிலும் கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி

ஐ.பி.எல். சம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சம்பியன் லீக்கிலும் வெற்றி ஈட்டி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது .  இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணியை வென்று கிண்ணத்தை  கைப்பற்றியது .
முதலில் துடுப்பெடுத்து ஆடிய  வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை  எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ஓட்டங்களை  எடுத்து வெற்றி பெற்றது. முரளி, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான , துல்லியமான பந்துவீச்சால் வாரியர்ஸ் அணி குறைந்த ஓட்டங்களுக்கே கட்டுப்படுத்தி இருந்தது சென்னை அணி.

முரளி விஜய், மைக்கேல் ஹசியின் உறுதிமிக்க துடுப்பாட்டமும் , அஸ்வின் , முரளியின் சிறப்பான பந்து வீச்சாலும் சென்னை அணி வெற்றி பெற வழிகோலியது . சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அசத்தலானதொடக்கம்  தந்தனர். நிடினி ஓவரில் விஜய் பவுண்டரிகளாக விளாசினார். போயே பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, அரைசதம் எட்டினார். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க முயன்ற விஜய் 58 ஓட்டங்களுக்கு (6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு விஜய்-ஹசி 103 ஓட்டங்களை  சேர்த்தனர்.


சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை  கைப்பற்றிய சென்னை அணி ரூ. 12 கோடி பரிசுத் தொகையாக தட்டிச் சென்றது. இரண்டாவது இடம் பெற்ற வாரியர்ஸ் அணி, ரூ. 6 கோடி பரிசாக பெற்றது. தங்க பேட், ஆட்ட நாயகன் ஆகிய இரு விருதுகளை பெற்றார் முரளி விஜய். விஜய் 6 போட்டிகளில் 294 ஓட்டங்களை டுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் வாரியர்ஸ் அணியின் டேவி ஜேக்கப்ஸ் 286 ஓட்டங்களை பெற்று உள்ளார்.தொடர் நாயன் விருது 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. தங்கப் பந்து விருதையும் அவர் வென்றார்.
http://blog.emman.in/wp-content/uploads/2010/03/dhoni-ipl.jpg
தோனிக்கு அதிஸ்டம் அடிக்கிறது . எல்லாவற்றிலும் வெற்றி சூடி கொண்டு இருக்கிறார் . இந்திய அணிக்கு 2007ல் உலக கோப்பை பெற்று கொடுத்து ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்தார் .   சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கிண்ணத்தை  பெற்று தந்தார். தற்போது சம்பியன்ஸ் லீக் தொடரிலும் கிண்ணம் வென்று காட்டியுள்ளார். அவரின் சாதுரியமும் , அணியை அவர் வழிநடத்தும் விதமும் , வீரர்களின் ஒற்றுமையும் தான் இந்த வெற்றிகளுக்கு காரணம் .

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

4 comments:

Praveenkumar said...

கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை அணிக்கு வாழ்த்துகள்..! தெளிவான கட்டுரை தொகுப்பு பகிர்வுக்கு நன்றி..!

Anonymous said...

chennai super kings is best.


vino

Anonymous said...

chennai super kings is best.


vino

Pavi said...

நன்றி பிரவின்குமார்