Friday, October 1, 2010

உலக சிறுவர்கள் தினம் இன்று

http://www.composedvolcano.com/wp/wp-content/uploads/2009/11/children.jpg
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்க வேண்டும் .

இன்று அதிகமாக உலகில் கஷ்டப்படுபவர்கள் சிறுவர்கள் தான். பல சிறுவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள். தாய், தந்தையை இழந்து அனாதைகளாக நிற்கும் சிறுவர்கள் ஏராளம் . அன்றாடம் உணவுண்ண பிச்சை ஏந்தி பிழைக்கும் நிலைமை . அடியாட்கள் சொல்லும் வேலைகளை செய்து அவர்கள் கொடுப்பதை உண்ணும் நிலைமை இப்படி நீண்டு கொண்டே செல்கிறது சிறுவர்களின் இன்றைய நிலைமை .
http://www.gatewaycommunityepc.com/clientimages/39437/images/childrens.jpg
சிறுவர்கள் துன்புறும் சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் நடக்கிறது தான் . ஆனால், சில வெளிச்சத்துக்கு வருகின்றன. சில வருவதில்லை . சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி அவன் கொண்டு வரும் பணத்தை தந்தை பறித்து மது அருந்த கொண்டு போவதும் , சிறுவர்களை கடத்தி பெற்றோர்களிடம் கப்பம் பெறுவதும் இப்போதெல்லாம் நடக்கிறது .
http://www.globalenvision.org/files/trashpickers.jpg
அறியா வயது , அவனுக்கு ஒன்றுமே தெரியாது . அவன் என்னதான் செய்ய முடியும் . பெற்றோர் சிறுவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பழக்க வேண்டும் . சிறு வயதிலே அவனை கண்டித்து வளர்க்க வேண்டும் . பாடசாலையில் ஆசிரியர்களும் பிள்ளைகளை அன்புடனும், கண்டிப்புடனும் பாடங்களை சொல்லி கொடுத்து நல்ல விடயங்களை கற்பித்து கொடுக்க வேண்டும் .
http://www.ungift.org/images/ungift/stories/ILO-UNICEF-inside.jpg
நாளைய தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உண்டு. நீங்கள் மாணவர்களுக்கு கற்பித்து கொடுக்கும் விதத்தில் உள்ளது . அதே போல் பெற்றோர்களின் கையிலும் உள்ளது . ஒருவன் நல்லவனாவதும் , கெட்டவனாவதும் அவன் இருக்கும் சூழல் , குடும்ப நிலைமை , அவனுடைய நண்பர்கள் போன்ற காரணங்கள் ஆகும் .
http://www.globalenvision.org/files/Child_Labor07.10.08_0.jpg
இன்று சர்வதேச ரீதியாக பல்வேறு வகைகளில் சிறுவர்கள் பாதிப்பை அடைந்து வருகிறார்கள்.  பாடசாலை இடைவிலகல், வறுமை, போஷாக்கின்மை, பாலியல் வன்முறைகள், தொழிலுக்குச் செல்லும் இடத்தில் கொடுமைகள், எனச் சிறுவர்களின் பாதிப்பு நீண்டு கொண்டே செல்கிறது . மாமனால் கொடுமை , தந்தையால் கொடுமை , உற்றார் உறவினர்களால் கொடுமை . 
http://www.ngfl-cymru.org.uk/sgwind21.jpg
இன்று வறுமையின் காரணமாக தாய்மார்கள் வெளியூர் வேலைக்குச் செல்வதால் சிறுவர்கள் அந்நியரால் பல்வேறு கொடுமைகளை அனு பவிக்கின்றனர்.  போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் விற்பனை அல்லது அந் நட வடிக்கைகளில் ஈடு படுவதில் இருந்து விலகியிருப்பதற்கான உரிமை சிறுவர்களுக்கு உண்டு. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல், அல்லது பாலியல் ரீதியாகத் தவறான பயன்களைப் பெறுதல், மற்றும் சட்டவிரோத பாலியல் நடவடிக் கைகளுக்காக தூண்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு. 
http://www.thewe.cc/thewe_/images_5/-/child-labor/children-brick-factory-fatullah-dhaka-bangledesh.jpe
சிறுவர்களுக்கான பல தொண்டு நிறுவனங்கள் பல உதவிகள் செய்தாலும் அவை எல்லோரையும் சென்றடைவதில்லை . வசதி உடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சின்ன வயதிலே சேமிப்பு கணக்கை ஆரம்பித்து மாத  , மாதம் பணத்தை வைப்பில் இடுகின்றனர். அவர்கள் வளர்ந்ததும் அவர்களின் தேவைக்கு பயன்படும்படி பெற்றோர்  வைப்பில் இடுகின்றனர். இது ஒரு நல்ல விடயம் . ஆனால் எல்லா பெற்றோர்களும் வசதி உடையவர்களா ? இல்லையே .  


போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் விற்பனை அல்லது அந் நட வடிக்கைகளில் ஈடு படுவதில் இருந்து விலகியிருப்பதற்கான உரிமை சிறுவர்களுக்கு உண்டு. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல், அல்லது பாலியல் ரீதியாகத் தவறான பயன்களைப் பெறுதல், மற்றும் சட்டவிரோத பாலியல் நடவடிக் கைகளுக்காக தூண்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு.
http://www.childrenshomeofrdg.org/images/626000sm.jpgநாம் அன்று சிறுவர்களாக இருந்தோம் . இன்று பெரியவர்கள் ஆனோம் . நாளை முதியவர்கள் ஆவோம் . இதுதான் இயற்கையின் நியதி . இப்படித்தான் நடக்கும் . இதுதான் மனித வாழ்க்கை சுற்று வட்டம் . சிறுவர்கள் அனைவருக்கும் எனது சிறுவர்தின வாழ்த்துக்கள் .


8 comments:

துளசி கோபால் said...

இன்னிக்கு புரட்டாசி 15
ஐப்பசி அடுத்த மாசம்தான்

றமேஸ்-Ramesh said...

பதிவு அருமை. தொடருங்கள்.
படங்கள் மனதை நெருக்கிக்கொள்கிறன.

Pavi said...

உங்களுக்கு அக்டோபர் என்று சொன்னால் தான் விளங்கும் போல ........
அது தமிழுக்கு .
நான் சொல்வது இங்கிலீசுக்கு
நன்றி துளசி

Pavi said...

நன்றி ரமேஷ்

r.v.saravanan said...

நன்றி பவி நல்ல இடுகை க்கு

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று பாட தோன்றுகிறது

Pavi said...

நன்றி சரவணன்

சி.பி.செந்தில்குமார் said...

சமூக சிந்தனை சார்ந்த பதிவு,உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வும் சிறக்க வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

கட்டுரை வடிவமைப்பு,அதற்கான புகைப்படங்கள் அனைத்தும் அழகு