இந்தியா , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது . லட்சுமணன்- இஷாந்த் சர்மாவின் அசத்தலான ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லட்சுமணனின் பொறுப்பான , பொறுமையான ஆட்டத்தின் மூலம் இந்த அபார வெற்றியை அடைந்தது இந்திய அணி .
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 428, இந்தியா 405 ஓட்டங்களை எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 192 ஓட்டங்களை எடுத்தது.வெற்றிக்கு 216 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பதிலெடுத்து ஆடிய இந்திய அணி 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது . வெற்றிக்கு மேலும் 161 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், டெண்டுல்கர் அடிக்க வேண்டிய பந்துகளை தேர்ந்தெடுத்து பவுண்டரிகளாக விளாச, ஜாகிர் கான் பொறுமையாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார். 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹெüரிட்ஸ் பந்து வீச்சில் ஜாகிர் கான் ஆட்டமிழந்தார். லட்சுமணன்- டெண்டுல்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர் .38 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாரதவிதமாக போலிங்கர் பந்து வீச்சில் ஹசியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் டெண்டுல்கர்.
பின்னர் வந்த வீரர்கள் பெரிதும் பிரகாசிக்கவில்லை . எனினும் சர்மா பொறுமையாக நிதானத்துடன் ஆடினார் . வெற்றிக்கு 92 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 124 ஓட்டங்களை எடுத்து திணறியது. இந்நிலையில் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 வது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களை சேர்த்த நிலையில், இஷாந்த் சர்மா (31) ஓட்டங்களுடன் வெளியேறினார் .
பின்னர் வந்த வீரர்கள் பெரிதும் பிரகாசிக்கவில்லை . எனினும் சர்மா பொறுமையாக நிதானத்துடன் ஆடினார் . வெற்றிக்கு 92 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 124 ஓட்டங்களை எடுத்து திணறியது. இந்நிலையில் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 வது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களை சேர்த்த நிலையில், இஷாந்த் சர்மா (31) ஓட்டங்களுடன் வெளியேறினார் .
இதனால் , போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . ஒஜாவும் , லட்சுமணும் களத்தில் நின்றனர் . இன்னும் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவையாக இருந்தது . எனினும் இருவரும் பொறுமையாக ஆடி 9 விக்கெட்டுக்கு 216 ஓட்டங்களை எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது இந்திய அணி . லட்சுமணன் 79 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களை பெற்று இறுதிவரை போராடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார் .
ஆஸ்திரேலிய தரப்பில் ஹில்பெனாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாகிர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லட்சுமணனின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அணியை வெற்றி பெறச் செய்வதற்கான முழு பொறுப்பையும் சுமந்து, அற்புதமாக விளையாடினார் அவர். இஷாந்த் சர்மாவின் சிறப்பான பங்களிப்பும் வெற்றிக்கு காரணம் என்று புகழாரம் சூட்டினார் தலைவர் தோனி. "கடைசி நேரத்தில் லட்சுமணன் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். மேலும் இரு விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக வீழ்த்தியிருக்க வேண்டும். எனினும், சிறப்பான ஆட்டமாக இது அமைந்ததில் திருப்தி. அடுத்த டெஸ்டில் வெற்றி பெற முழு முயற்சி செய்வோம்' என்றார் ஆஸ்திரேலிய தலைவர் பொண்டிங்.
இந்திய அணிக்கு ரசிகர்கள் அனைவரினதும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
3 comments:
லட்சுமணனுக்கும்
ஆஸ்திரேலியாவுக்கும்
அப்படி ஒரு ஏழாம் பொருத்தம்.
நல்ல இடுகை.
உங்கள் தளத்தைத் திறக்க
அதிக நேரம் எடுக்கிறது.
கொஞ்சம் கவனியுங்கள்.
thiril vetri enru ithai thaan solvathu...
mano
நன்றி கிருஷ்ணன்
Post a Comment