Thursday, October 14, 2010

குடியை நிறுத்து


குடியை நிறுத்து
நிறுத்து என்று சொன்னால்
கேட்கிறாயா? இல்லை
ஈரல் கருகியதும்
வருந்தி என்ன பயன் ???

உன்னை நம்பி திருமணம்
ஆகாத இரு பிள்ளைகள்
இருக்கிறார்கள் - அவர்களை
கொஞ்சம் யோசித்து  பார்த்தாயா ?

அவர்களின் எதிர்காலம்
பற்றி சிந்தித்தாயா?
உணர்கிறாயா ? ஒன்றும்
இல்லையே - தினமும்
ஒரு போத்திலோடு
வீட்டுக்கு வருகிறாய்
குடிக்கிறாய் - மனைவியை
திட்டுகிறாய் - பிள்ளைகளை
கண்டபடி பேசுகிறாய் ?
http://img.tfd.com/wn/89/68F09-drunk.gif
தினம் தினம் குடித்து
உடம்பை நீயே
அளிக்கிறாய் - கருகிபோகும்
உன் உயிரை நினைத்து
தினமும் மனைவி
பதைபதைகிறாள் அதை
நீ அறிவாயா ?

நீயும் திருந்துவதாக இல்லை
உன் பிள்ளைகளை
மற்றவர்கள் நக்கல் , நையாண்டி
பண்ணுகிறார்கள் உன் நிலை  பார்த்து
அவர்களின் மனம் புண்படும்படி
பேசுகிறார்கள் அயலவர்கள்

உன் கொடூர தாண்டவம்
எப்போது அடங்குவது
சட்டி , பானைகளை
அடித்து நொறுக்குகிறாய்
உணவு சமைப்பது எப்படி
என்பதை நினைத்தாயா?

குடித்தால் என்ன செய்வது
என அறியாது இந்த
தாண்டவம் ஆடுகிறாய்
எப்போது நீ எல்லாம்
திருந்துவது ?????

நல்ல கணவனாய்
உன் பிள்ளைகளுக்கு
ஒரு நல்ல தகப்பனாய்
இருப்பதானால் இரு
அப்படி இல்லாவிட்டால்
நீ இந்த உலகில்
இருந்தும் என்ன
பயன் ? என்ன பயன் ?
உயிரை விட்டுவிட
துணிந்திடு ????

2 comments:

'பரிவை' சே.குமார் said...

Kudikararkal mela payangara kopam pola...

Pavi said...

சமூகத்தில் நடக்கும் பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று தானே .
அதுதான் எனது பதிவிலும் இதை எழுதினேன் .
நன்றி குமார்