பாடறியேன் படிப்பறியேன் பாடலா அல்லது கண்ணாளனே பாடலா என்று அடுக்கி கொண்டே போகலாம் . சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது.எப்போதும் சிரித்த முகம் தான் . தன்னடக்கமான , இயல்பானவர் . வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாக காண்பவரை வசீகரிக்கிறது. ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர் . பல பாடகிகள் வந்து போனாலும் எல்லா ரசிகர்களாலும் மறக்க முடியாத பாடகிகளில் ஒருவர் சித்ரா .
இந்தியாவின் திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் பிறந்தார் . சிறு வயதிலே பாடல்களை பாடி அபரிதமான திறமை படைத்தவராக திகழ்ந்தார் . தென்னிந்தியாவின் வானம்பாடி, சின்னக்குயில் என்று பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார் சித்ரா .
தான் ஒரு முழு நேரப் பின்னணி பாடகியாவோம் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றுரைக்கிறார் சித்ரா. பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் திரு.கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பின்பு ஒவ்வொரு பாடல்களாக பாட ஆரம்பித்தார் .
இளைய ராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக்குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடலும், 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ' துள்ளி எழுந்தது பாட்டு சின்னக்குயிலிசை கேட்டு' , வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. சிறந்த உச்சரிப்பு , நல்ல குரல் வளம் கொண்ட சித்ராவின் குரலில் பாடல்கள் உயிர் பெற்றன .
அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து' , 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று .
பாலசுப்ரமணியம் ,எஸ்.பி.பி, மனோ , ஜெயச்சந்திரன், ஹரிஹரன் , உன்னி கிருஷ்ணன் , உன்னிமேனன் போன்ற பாடகர்களுடன் சேர்ந்து பல பாடல்களை பாடி உள்ளார் .12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா S.P.சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலை முறை பாடகர்களுடனும் பாடுகிறார். தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை காலை நேரத்தில் சில பாடசாலைகளில் பிரார்த்தனைகளின் போது பாடுகிறார்கள் . மிகவும் அர்த்தமுள்ள , வாழ்க்கைக்கு தேவையான வரிகளை கொண்டமைந்த பாடல் . எல்லோருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்க கூடிய பாடல் .
பல இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள சித்ரா ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ' புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ஊ லலலா,எங்கே எனது கவிதை போன்ற பல வெற்றிப்பாடல்களை பாடி உள்ளார் .
அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம், ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே, தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும் என்று எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் . இந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .
இவரின் சாதனைகள் எண்ணற்றவை . விருதுகள் எண்ணற்றவை . தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பின்னணிப்பாடகி இவர் தான். ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும் , நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. எல்லோரும் தேசிய விருதுக்கு ஏங்குகிறார்கள் . ஆனால் சித்ராவுக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. விராசத் ஹிந்தி படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து ஹிந்தி மொழியில் பாடி தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார். அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 'பத்ம ஸ்ரீ' விருது கூட பெற்று உள்ளார் சித்ரா .
இப்போது பல பாடகிகள் வந்து ஐந்து , ஆறு பாடல் பாடியதும் காணாமல் போய் விடுகிறார்கள் . திறமையானவர்கள் நிலைத்து நிற்கிறார்கள் . தற்போது வெளிவந்த நாணயம் படத்தில் கூட "நான் போகிறேன் மேலே மேலே " என்ற சூப்பர் ஹிட் பாடலை நீண்ட நாட்களுக்கு பின் சித்ராவின் குரலில் கேட்க கூடியதாக இருந்தது . அன்று போல் இன்றும் அதே தொனியில் அழகாக பாடி இருந்தார்கள் சித்ராவும் , எஸ். பி .யும் .
எல்லோர் மனதையும் தனது வசீகர குரலால் இழுத்த சித்ரா அவர்கள் என்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருப்பார் . இன்னும் வாய்ப்புகள் வரும் போது பாடல்களை பாடி கொண்டு இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் அவா .
9 comments:
superrrrrrrrrrrrrrrrrrr
mano
superrrrrrrrrrrrrrrrrrr
mano
Pavi...
Nalla Pakirvu...
ungal valaipoo open avathil enakku mattum pirachinaiyaa.. allathu ellarukkuma theriyavillai....
udamppu sugamillathathaal nangu natgalaka valaippakkam varavillai. ellam padiththean eppavum pola arumai.
good article
nice article. I want to tell u something about Chitra.நானும் சித்ராவும் ஒன்றாக ஒமன குட்டி டிச்சரிடம் கர்நாடிக் ச்ங்கிதாம் கற்று கொண்டோம். நான் ஜஸ்ட் 3 மாதம் தான் கற்றுகொண்டேன். பின் நான் மியூசிக் காலேஜில் கற்றுகொண்டேன்.
இப்ப சித்ராவுக்கு என்னை நினைவு இருக்குமா என்று தெரியாது.
நன்றி மனோ
நன்றி குமார்
நன்றி சரவணன்
நன்றி விஜி
Post a Comment