Friday, October 29, 2010

சிங்கம் புலி ஜீவா

http://www.indiangossips.com/wp-content/uploads/2009/05/tamil-actor-jeeva.jpg
தமிழ் திரை உலகில் தனக்கென தனி  இடத்தை பிடித்து மெல்ல மெல்லமாக முன்னேறி கொண்டு வரும் ஒரு நடிகர் தான் ஜீவா . படத்துக்கு படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக மாறி விட்டார் .

தன்னை பற்றி புகழ்வதும் , பட்டப்பெயர்கள் சூடி , இரண்டு படங்கள் நடித்தவுடன் தலைக்கனம் ஏறி சம்பளத்தை அதிகரிப்பதும் , கதை இப்படி இருக்கணும் , அப்படி இருக்கணும் என்று சொல்லி கொண்டு இருக்கும் நடிகர்கள் மத்தியில் ஜீவா மிகவும் வித்தியாசமானவர் . தானுண்டு தன வேலை உண்டு என்று இருக்கின்றார் . அதனால் நல்ல படங்கள் அவருக்கு கிடைக்கிறது . பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
http://mimg.sulekha.com/jeeva/stills/jeeva-actor-stills42.jpg
ராம் படம் ஜீவாவுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது . எல்லோருக்கும் பிடித்து இருந்தது . ஈ படம் நல்ல கதையம்சம் கொண்டமைந்த படம் . இப்போது ஜீவா இரு வேடங்களில் நடித்து வெளிவர இருக்கும் படம் தான் "சிங்கம் புலி ". 'கற்றது தமிழ்' படத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தார்  ஜீவாவின் படங்களில் அது ஒரு வித்தியாசமான படம் . 'ஈ', 'ராம்' ஆகிய படங்களில் மிகவும்  ஆர்வமாக நடித்தும் இருந்தார் .
http://hindia.in/tamilcinema/wp-content/uploads/2010/08/Jeeva1.jpg
கே.வி.ஆனந்த் இயக்கம் "கோ " படமும் முடியும் தறுவாயில் உள்ளது . அதில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுடன் ஜோடியாக ஜீவா நடித்து உள்ளார் . அடுத்து'ஜெயங்கொண்டான்', 'கண்டேன் காதலை' ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு கண்ணன் இயக்கும் படம் 'வந்தான் வென்றான்' என்ற படம் நடித்து கொண்டு இருக்கிறார் . நடிகையாக தப்ஸி நடித்து கொண்டு இருக்கிறார் .

படங்கள் வெளியானதும் பாப்போம் ஜீவாவின் அசுர வளர்ச்சியை நாமும் ............

2 comments:

மங்குனி அமைச்சர் said...

நல்ல படங்கள் தந்துள்ளார், தலைக்கனம் இல்லாத நடிகர்தான்

Pavi said...

உண்மைதான் அமைச்சரே .
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்