Friday, October 22, 2010

நாம் காணும் கனவு

http://animewriter.files.wordpress.com/2007/12/the-girl-for-the-dream-world.jpg
நாம் ஒவ்வொருவரும் கனவு காண்கின்றோம் . சிலர் தூங்கி கொண்டு இருக்கும் போதும் , சிலர் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தம்மை மறந்து கனவு காண்கிறார்கள் . நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. அவை சில உண்மை சம்பவங்களாக கூட இருக்கலாம் .

கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது. எதோ கனவு கண்டேன் . நினைவில் இல்லை. மறந்து போய் விட்டேன் என்று தான் சொல்வோம் .
http://fc07.deviantart.net/fs31/f/2008/232/6/d/Dream_World_99_by_sanamey.jpg
கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம். யோசிக்கிறோம் அல்லவா ? . கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

கனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.


http://www.abundancetapestry.com/photos/dreamhouse.jpg
கனவு இல்லம்

நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றியோ, புதிய ஏதேனும் இடங்களைப் பற்றியோ வருகின்ற கனவுகள் ஒருவேளை நம்முடைய எதிர்காலத்தைக் குறிக்கும் கனவுகளாக அமையலாம் . உலகப் புகழ் ஓவியர் ஸல்வேடர் லெவி தன்னுடைய ஒரு பிரபல ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அது கனவில் கண்ட ஒரு காட்சி என்று சொல்கிறார். இது எனது கனவில் தோன்றிய கவிதை என்று சொல்லும் கவியர்களும் உண்டு .
http://www.teluguone.com/funtime/imagesnew/DreamGirl/DreamGirl2.jpg
நமது வாழ்வில் நிகழ்ந்த ஆனந்தமான, சோகமான நிகழ்வுகளை மீண்டும் அனுபவிக்கும் விதமாக கனவுகள் நிகழ்வதுண்டு. பெரும்பாலும் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் ஆசைகளும், நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் செயல்களும் ஏதோ ஒரு இடத்தில் உரசிக் கொள்ள நேர்ந்தால் உண்மை போலவே இருக்கும் . காதலன் தனது காதலியை கனவில் நினைத்து தனது துன்பங்களை மறப்பதுண்டு . விட்டு பிரிந்த காதலியை/ காதலனை  கனவில் நினைத்து உருகுவதுண்டு .

இவ்வாறாக ஒவ்வொருவரும் கனவு காண்கிறார்கள் . சிலருக்கு நல்ல கனவுகள் வரும் . சிலருக்கு பயங்கரமான கனவுகளும் வருவதுண்டு . தன்னை ஒருவன் கத்தியால் குத்துவது போன்றும் , வெருட்டுவது போன்றும் வரும் கனவுகளும் உண்டு . மனிதருக்கு மனிதர் ஒவ்வொருவருக்கும் கனவுகள் வந்து போகின்றன .



















2 comments:

Anonymous said...

nalla pathivu......



suba

Pavi said...

நன்றி சுபா