Monday, November 1, 2010

இலங்கை அணி அசத்தல் வெற்றி

 


அவுஸ்டேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் தில்ஷன், சங்ககரா அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சிறந்த வெற்றிகளில் ஒன்றாக அவுஸ்டேலிய மண்ணில் பதிவு செய்தது . இலங்கை அணி ஒரு "டுவென்டி-20' மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது அவுஸ்டேலிய மண்ணில் .


அவுஸ்டேலிய  அணிக்கு வார்னர் (2), மைக்கேல் கிளார்க் (16) வாட்சன் (4), டேவிட் ஹசி (7), காமிரான் ஒயிட் (8) உள்ளிட்ட முக்கிய வீரர்கள்  ஏமாற்றினர். பின் பிராட் ஹாடின், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 66 ஓட்டங்களை சேர்த்த போது ஸ்மித் (34) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹாடின் (35) நம்பிக்கை அளித்தார். ஹாஸ்டிங்ஸ் (15) ஓரளவு கைகொடுக்க, அவுஸ்டேலிய  அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை மட்டுமே பெற்றது .
Mahela Jayawardene battered 59 off 35 balls (file photo)
இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய இலங்கை அணி மிகவும் சிறப்பாக விளையாடியது . ஜெயவர்த்தன , சங்க , டில்ஷான் பொறுப்பாக ஆடி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர் .  ஜெயவர்தனா 24 ஓட்டங்களை எடுத்தார் . சந்திமால் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்றார் . பின்பு வந்த சங்க , டில்ஷான் ஜோடி அபராமாக விளையாடினர் . அவுஸ்டேலிய  பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, 3வது விக்கெட்டுக்கு 71 ஓட்டங்களை சேர்த்த போது டில்ஷான்  (41) அவுட்டானார்.  பொறுப்பாக ஆடிய அணித்தலைவர் சங்க 44 ஓட்டங்களை பெற்றார் .
Sri Lanka skipper Kumar Sangakkara stumps Steven Smith of Australia in a T20 international between Sri Lanka and Australia at Perth. Sri Lank won the encounter by seven wickets.
இலங்கை அணி 3 விக்கட்டுகளை மட்டுமே இழந்து 16.3 ஓவரில் 135 ஓட்டங்களை பெற்று வெற்றி ஈட்டியது . இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . தொடரட்டும் இலங்கை அணியின் வெற்றி அவுஸ்டேலிய மண்ணில் .



4 comments:

பொன்கார்த்திக் said...

அருமை பவி, இன்னும் தெளிவகா மற்றும் வரலற்று சம்பங்களை தொகுத்து எழுதினால் இன்னும் அருமையாக இருக்கும்..


http://ponkarthiktamil.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

கிரிக்கெட் குறித்த உங்கள் பகிர்வு அருமை பவி.

Pavi said...

நேரம் இன்மையால் பதிவை குறைத்துவிட்டேன் .
நன்றி கார்த்திக் .

Pavi said...

நன்றி குமார்