Wednesday, November 3, 2010

வாழை இலையில் சாப்பிட்டால் ........

http://chattahbox.com/images/2009/07/banana-leaf.jpg
நமது தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு முக்கிய பங்குண்டு . எமது விசேச தினங்களுக்கும் , பண்டிகைகளுக்கும் , விரதங்களுக்கும் நாம் மிகவும் பயன்படுத்துவது வாழை இலையை தான் . முன்னோர்கள் விட்டு சென்ற சில மரபுகளில் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதில் வாழை இலையும் ஒன்று .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsgF7OzY_CrIA0zEdO4aPULtlXb8pZuFe4h5Dsa6Kkh2wSI5_3IHZVNAA3GEtN367yvk5tpdA4T5g9q82GVW-MJdZYbtYtuWm1n3Fogfx4i2CSg7Sv2Uj1TbRRV2O9ysN1wtb2nyzz0eZP/s400/P3251369.JPG
விருந்துகளுக்கும் , கோவில்களில் படைப்புகளுக்கும் பயன்படுத்துவது வாழை இலை தான் . நாம் வாழை இலையில் சாப்பிடும் போது பல நல்ல பயன்களை பெறுகின்றோம் . வாழை இலையில் நாம் சாப்பிடும் போது அது உடம்புக்கு வலிமையை தருகிறது . மிகவும் சுத்தமானது . குளிர்மையானது . இலகுவானது . எமக்கு பசியை இன்னும்  தூண்டுகிறது . விச தோஷத்தை போக்குகிறது .  மந்தம் வராது. உடலுக்கு நல்லது.இப்படி பல நன்மைகள் கிடைக்கும் போது நாம் வாழை இலையை ஏன் ஒதுக்கி வைப்பான் . அது மிகவும் கூடாது .
http://www.5nongringos.com/wp-content/uploads/2009/08/banana+leaf+meal.jpg
அதுவும் கிராமங்களுக்கு சென்று வாழை இலையில் சாப்பிடும் போது அது ஒரு தனி ருசி தான் . அதை நகரங்களில் வசிப்போர் இந்த பாக்கியங்களை இழந்து விடுகின்றனர். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வாழை மரங்கள் நிற்கும் . எந்த நிறமும் இலைக்கு பஞ்சம் இருக்காது . நகரத்தில் வசிப்போர் அந்தரத்துக்கு வாழை இலையை தேடினால் கூட கிடைக்காது . அப்படியும் தேடினால் இருபது ரூபாய் , முப்பது ரூபாய்க்கு சில வேளைகளில் கிடைக்கிறது .

சில உணவகங்களில் வாழை இலையில் தான் சாப்பாடு பரிமாறுவார்கள் . ஒரு சிலர் விரும்பி உண்கிறார்கள் . ஒரு சிலர் தட்டுகளிலும் , கோப்பைகளிலும் சாப்பிடுவதை விரும்புகிறார்கள் . அவர்களுக்கு வாழை இலையின் மகிமை பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள் போலும் . நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இலையில்  சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.  தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது. சாப்பாடும் அதிகமாக நாம் சாப்பிடலாம் . வடிவாக சாப்பிடலாம் .
http://farm1.static.flickr.com/24/43006095_955e42c2e9.jpg
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சாப்பாடு வாழை இலையில் பொதி செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். வாழை இலையில் சாப்பிடாதவர்கள் ஒரு தடவை நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் . உங்களுக்கும் புரியும் .













.

5 comments:

'பரிவை' சே.குமார் said...

வாழை இலையில் சாப்பிட ரொம்ப பிடிக்கும்... அது குறித்த உங்கள் பகிர்வு அருமை.

Muruganandan M.K. said...

வாழையிலையில் சாப்பிடுவது எனக்கும் ரெம்பப் பிடிக்கும்.
உங்கள் பதிவும் பிடித்தது.
ஆனால் வாழையில் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடும் எனச் சொல்லப்படுபவை வெறும் நம்பிக்கைகளே. ஆதார பூர்வமானவை அல்ல. இருந்தபோதும் மகிழ்ச்சிகாக ஆவது அதில் சாப்பிடலாம் எனத் தோன்றுகிறது.

r.v.saravanan said...

வாழை இலை பற்றிய உங்கள் பகிர்வு அருமை

எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள் பவி

Pavi said...

நன்றி

Dr.எம்.கே.முருகானந்தன் ஐயா அவர்களே

Pavi said...

நன்றி சரவணன்
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்