நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணியின் வெற்றி மிகவும் சந்தோசமாக இருந்தது . முன்பொரு காலத்தில் நான் நினைப்பதுண்டு இந்த அவுஸ்டேலியா அணியுடன் இலங்கை அணி வெற்றி பெறுகிறார்கள் இல்லையே . தொடர்ந்தும் தோல்வி அடைகிறார்களே என நினைப்பதுண்டு . அப்போது ஹைடன் , கில்க்ரிஸ்ட் இருந்த காலம் அது . இப்போது எல்லாம் எந்த அணி தனது முழுத்திறமையையும் அன்றைய தினத்தில் வெளிப்படுத்துகிறதோ அந்த அணி வெற்றி பெறுகிறது .
நாம் சில போட்டிகளில் இந்த அணி வென்றுவிடும். இந்த அணி தோல்வி அடையும் என்று முதலிலே ஆருடம் சொல்வதுண்டு தானே . இப்போதெல்லாம் நாம் எதிர்பார்க்காத அணி சில வேளைகளில் வெற்றி பெற்று விடும் . அப்படித்தான் நடக்கும் என நேற்று சில நண்பர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள் .
அவுஸ்டேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மாத்யூஸ், மலிங்காவின் அபார ஆட்டம் கைகொடுக்க, இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.நாணய சுழற்ச்சியில் வென்ற அவுஸ்டேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார் .
முதலில் ஆடிய அவுஸ்டேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது .ஆரம்ப வீரர் வாட்சன் 10 ஓட்டங்களும் , மைக்கேல் கிளார்க் (27), மார்ஷ் (31), ஸ்மித் (12), ஜான்சன் (10), ஹேஸ்டிங்ஸ் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.மைக் ஹசி 91 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஒரு பவுண்டரியுடன் 71 ஓட்டங்களும் , பிராட் ஹாடின் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்களும் எடுத்தனர் திசேர பெரேரா அபாரமாகப் பந்துவீசி 46 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய இலங்கை அணி ஆரம்பத்திலே விக்கட்டுகளை மள மளவென இழந்தது . உபுல் தரங்கா (3), தில்ஷன் (7), ஜெயவர்தனே (19), சமர சில்வா (4) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர் . அணித்தலைவர் சங்ககார நிலைத்து நின்று ஆடினார் . அவர் 49 ஓட்டங்களை பெற்றார் . அதன் பின்பு களமிறங்கிய பெரேரா (0), ரந்திவ் (10), குலசேகரா (0) சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இலங்கை அணி 25.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது .
இலங்கை அணி தோல்வி அடைய போகிறது என்று நினைத்த நேரத்தில் அபாரமாக களமிறங்கி தமது திறமையால் தமது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற சிங்கங்கள் மலிங்கவும் , மாத்யூஸ் இருவரும் தான் . வெற்றிநாயகர்கள். இருவரும் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 18.2 ஓவர்களில் 132 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். மலிங்கா (56) ஓட்டங்களை பெற்றார் . ஒரு கட்டத்தில் ஒரு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு விக்கட்டை இழந்தால் தோல்வி என்ற நிலையில் இருக்கும் போது முரளிதரன் ஒரு பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 44.2 ஓவரில் 243 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.மாத்யூஸ் 84 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உட்பட 77 ஓட்டங்களை பெற்று கடைசிவரை களத்தில் இருந்தார் . போட்டியின் ஆட்டநாயகனாக மாத்யூஸ் தெரிவானார் .
நேற்றைய போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 132ஓட்டங்களை சேர்த்த இலங்கையின் மலிங்கா, மாத்யூஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 9வது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக இந்தியாவின் கபில் தேவ், கிர்மானி ஜோடி இருந்தது. கடந்த 1983ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஜோடி 9வது விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களை எடுத்து இருந்தனர் . 27 ஆண்டு சாதனை நேற்றைய தினம் முறியடிக்கப்பட்டது .

4 comments:
mmmmmm asaththal vetri thaan pavi
mano
தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....
நன்றி மனோ
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி வெறும்பய
Post a Comment