Thursday, December 16, 2010

தூக்கம் வரவில்லையா ???




http://cdn.womenshealthmag.com/files/images/0812-sleep-myths_0.jpg
மனிதனுக்கு உணவு, உடை , உறையுள் , சுகாதாரம் என்பன அத்தியாவசியமாக இருந்தாலும் அவனுக்கு தூக்கமும் இன்றியமையாததொன்று . நல்ல தூக்கமும் , மகிழ்ச்சியும் இருந்தாலே மனிதன் மிகவும் சந்தோசமாகவும் , இளமையுடனும் இருப்பான் . வயிற்று பசிக்காக நாள் முழுதும் வியர்வை சிந்தி உழைக்கின்றான் . மனதாலும் , உடலாலும் வருந்துகிறான் . அப்போது அவனுக்கு ஒரு ஓய்வு கட்டாயம் தேவை . அந்த ஓய்வு என்கிற தூக்கம் அவனுக்கு கட்டாயம் தேவை . உடம்பு இளைப்பாற அவனுக்கு தூக்கம் அவசியம் . 
http://www.sciencedaily.com/images/2008/04/080407160748-large.jpg
நாம் எல்லோரும் அழகாகவும் , ஆரோக்கியத்துடனும் இருப்பதற்க்கு நாம் இரவில் ஒழுங்காக தூங்கினாலே போதும் . வேறொன்றும் தேவையில்லை . இப்போதைய நவீன யுகத்தில் பணம், பதவி என்று மனிதன் அலைகின்றான். நிம்மதி என்பதே இல்லை . எத்தனையோ பேருக்கு தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து விட்டது . பணம் சேர்த்து வைத்திருப்பவனுக்கு திருடர்கள் வந்தால் கவனமாக இருக்க வேண்டும் . களவாடிக்கொண்டு போய் விடுவார்கள் என்று அதை நினைத்து நினைத்து தூக்கமே வராது . கடன் பட்டவனுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் வரைக்கும் அவனுக்கு நித்திரை வராது . இதுதான் நிலைவரம் .

உறக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஒரு இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை உயிர்வாழுவதற்கு அவசியமாகும். நித்திரை கொள்ளாது விட்டால் அன்றைய நாள் முழுதும் சோம்பலாகவும் , அசதியாகவும் , ஞாபக மறதியுடனும் இருப்பர்.
http://hometestingblog.testcountry.com/wp-content/uploads/2010/11/sleep.jpg
பொதுவாக எல்லோருக்கும் தூக்கம் வராமல் இருப்பதற்க்கு காரணம் மனநிலை காரணமாக, உடல் நோயின் காரணமாக, தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் இருக்கிறது . பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. 
தூக்கமின்மையால் தொற்றுநோய்கள், இதய நோய்கள், மன அழுத்தம்,உயர் குருதி அழுத்தம், உளநோய்கள், பக்கவாதம், நீரிழிவு, உடல் பருமனடைதல்இப்படியே பட்டியல் போடலாம். இந்த வரிசையில் சமீபத்தைய ஆய்வில் இரவில் தூக்கமின்மை அழற்சி நோய்களை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் இதய நோய்கள், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு (Stroke) என்பதனை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.
http://www.deprivationofsleep.com/images/health-iq-how-to-manage-sleep-apnea-01-af.jpg
தூக்கம் வராமல் இருப்பதற்க்கான காரணங்கள் பல இருக்கின்றன . காதலில் ஈடுபட்டிருப்பவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள், நல்ல நண்பர்களை இழந்தவர்களுக்கும் , திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கும் ஆண்- பெண் இருபாலருக்கும், நன்றாகப் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் இருக்கும் ஆண்-பெண் இருவருக்கும், பெற்றோர்களால், ஆசிரியர்களால் மற்றும் மேலதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட அல்லது பேச்சால் அவமானத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு , இரவில் மர்ம நாவல் படித்தவர்களுக்கும், திகலூட்டும் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கும் பயம் காரணமாக தூக்கமின்மை ஏற்படும்.  திருமணத்தை நடத்தவிருக்கும் பெற்றோர்களுக்கு , வியாபாரத்தில் நஷ்டமடைந்த அல்லது கூட்டாளியால் ஏமாற்றப்பட்ட நபர்களுக்கும் தூக்கமின்மை ஏற்படும். கணவனை பிரிந்து வாழும் மனைவி அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களுக்கு, பரீட்சை எழுதபோகும் மாணவனுக்கு என பல காரணங்களை சொல்லி கொண்டு போகலாம் . 
http://media.nowpublic.net/images//ef/3/ef37428a269209d05dde80ad8a6bbe43.jpg

தூக்கம் வராமல் இருப்பதற்க்கு சிறந்த காற்றோட்டம் இல்லாமல் இருப்பது, தலையணை கல்லு போன்று இருப்பது , சரியான இடவசதி இல்லாமை போன்றனவும் காரணமாகவும் இருக்கின்றன .

சரி நித்திரை / தூக்கத்தை எப்படி வரவழைக்கலாம் .  அதற்க்கும் வழிகள் உண்டு . சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. தூங்க செல்லும் முன்பு அறிவு பூர்வமான புத்தகங்களை படிக்கலாம் , குளிர்ந்த நீரால் கண்களை கழுவி விட்டு தூங்க செல்லலாம் , உடல் பயிற்சி செய்து சிறிது ஆறி விட்டு தூங்க செல்லலாம் , நேற்று நடந்த துக்கமான , தோல்வியான விடயங்களை நினைக்காது அவற்றை மனதில் இருந்து விலக்கி விட்டு தூக்கத்துக்கு செல்லலாம் , கணணியை இரவு நேரங்களில் பார்ப்பதை தவிர்த்து விட்டு நித்திரைக்கு செல்லலாம் .
http://www.hilarytopper.com/wp-content/uploads/2010/11/GirlSleeping.jpg
தூக்கம் இன்றியமையாததொன்று .எல்லோருக்கும் ஓய்வு தேவை . நிம்மதி தேவை . தூக்கம் அவசியம் . உழைத்தால் மட்டும் போதாது . நிம்மதியான தூக்கமும் வாழ்க்கைக்கு தேவை . தூக்கமே வாழ்க்கையும் இல்லை . உழைக்காமல் தூங்கி கொண்டே இருந்தால் சோம்பேறி ஆகத்தான் இருக்க முடியும் . 

 
 















2 comments:

Sivatharisan said...

மிகவும் பயனுள்ள தகவல்

Pavi said...

நன்றி சிவதரிசன்