Tuesday, January 4, 2011

நமது மூளை

http://topnews.in/files/brain-speaks-paralysis.jpg

எமது உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை . கண் பார்க்கவும் , காது கேட்கவும் , வாய் பேசவும் இப்படி ஒவ்வொரு உறுப்புகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் . அது போல் இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது நமது மூளை தான் .ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g ஆகும் . 

நாம் சிந்தனை செய்யும் பொழுதோ, கோவப்படும் பொழுதோ, தியானம் செய்யும் பொழுதோ, நமது மூளை ஒருவித அதிர்வலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும். இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் கோவப்படும் பொழுதோ அல்லது சந்தோஷமாக இருக்கும் பொழுதோ, அந்த அதிர்வலைகளின் ஓட்டம்(Hz) அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வெளியாகும் அலைகளை Beta (14-30 Hz) என்று கூறுகிறோம்.
http://www.morphonix.com/software/education/science/brain/game/specimens/images/wet_brain.gif
சில உறுப்புகள் நமது கண்ணுக்கு தெரிந்து இருக்கும் . ஆனால், சில உறுப்புகள் நமது கண்ணுக்கு தெரியாதவை . நுரையீரல் , சிறுகுடல், மூளை என்று பல உறுப்புகள் நமது கண்ணுக்கு தெரியாதவை . அவற்றை படங்களில் பார்க்கும் போது இவை எல்லாம் நமது உடம்புக்குள் இருக்கின்றனவா என்று நாம் அதிசயப்படுவதுண்டு . நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஒட்சிசனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது. மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.
http://static.arstechnica.com/Science/human-brain.jpg
நம் மூளை வினாடிக்கு 14 முதல் 40 முறை சுழலுகிறது. இதை EEG என்ற கருவி மூலம் கண்டு பிடிக்கலாம். நமது மூளை / மன அலைச்சுழல் எந்த வேகத்தில் இருக்கும் போது பதிகிறதோ அதே அலை இயக்கம் வரும்போது தான் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர முடியும். அமைதியான மன நிலையில் பதிவானவைகள் பதட்டப்படும்போது நினைவுக்கு வராது. எனவே 14க்கும் கீழ் மன அலைச்சுழல் வேகத்தைக் கொண்டு வந்துவிட்டால் மனம் நம் வயப்படும்.
http://1.bp.blogspot.com/_PC3aIMjVWm8/SQBXi5eff9I/AAAAAAAAARw/Q2VO_tCzzBY/s400/human_brain.jpg
 ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது . தூக்கம் தொலைவதனால் வரும் இன்னொரு முக்கியமான பிரச்சனை மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு தொடர்பானது. தூக்கமில்லாமல் இருப்பவர்கள் சோர்வாகவும், கவனக் குறைவாகவும் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் அவர்களுடைய மூளை புதிய செல்களை உற்பத்தி செய்வதும் குறைகிறது . சிறு பிள்ளைகள் அதிகம் நித்திரை கொள்வார்கள் .  அவர்களை அப்படியே நித்திரை கொள்ள விட வேண்டும் . அப்போதுதான் அவர்களின் மூளை வளர்ச்சி அடையும் .

நமது மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால்நிரப்பப்பட்டுள்ளது.மூளையானது பகலில் சிந்திக்கும் திறனை விட இரவில்சிந்திக்கும் திறன்கூடியது. இதனால் தான் நாம் இரவில் நித்திரைக்கு செல்லும் முன் படிப்பது அதிக நாட்கள் மனதில் நிற்கின்றது. மனதில் பதிகிறது . உடனே யாபகத்துக்கு வருகிறது . நாம் எல்லாம் பரீட்சை என்றால் முதல் நாள் இரவு தூங்கி தூங்கி படித்து தானே அடுத்த நாள் பரீட்சை எழுதுகிறோம் . ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம் .
http://www.wright.edu/academics/honors/institute/images/brain_diagram.jpg
மூளையின் எடை உடலின் எடையில் வெறும் 2% மட்டுமே,ஆனால் உடலின்மொத்த சக்தியில் 20% ஐ தனது தேவைக்கு எடுத்து கொள்ளுகின்றது. நாம் எமது மூளைக்கும் அதிக வேலை கொடுக்க கூடாது . அதற்கும் ஓய்வு தேவை. நமக்கும் ஓய்வு தேவை . அதனால் தான் இரவில் நாம் தூங்க வேண்டும் . நாம் தூங்கும் போது தான் எல்லா உறுப்புகளும் ஓய்வு எடுத்து கொள்கின்றன. வேலை வேலை என்று இரவு பகல் பாராது உழைத்தால் உறுப்புகளும் சோர்வடைந்து விடும் . பிற்காலத்தில் ஒவ்வொரு வியாதிகளுக்கு வித்திடும் .

நாம் அதிக சத்துள்ள உணவுகளையும், பழ வகைகளையும் உன்ன வேண்டும் . ஒட்சிசன்  இல்லாமல் மூளை நான்கு முதல் ஆறு நிமிடம் வரை உயிர்வாழும். அதன் பிறகு செல்கள் இறக்கத்தொடங்கிவிடும். நமது மூளை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இடது மூளை உடலின் வலது பக்கத்தினையும் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது என்றால் பாருங்களேன் . தத்தம் தொழில்களை தாமே செய்கின்றன . நமது மூளைக்கு உலகிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணங்களை சேமித்து வைக்கும் 
ஆற்றல் உள்ளது.

மனித மூளை 25 watts அளவு சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு குமிழ் விளக்கை (Light Bulb) பிரகாசமாக ஒளிரச் செய்ய போதுமானதாகும். 
http://www.adpic-images.com/data/picture/detail/Human_Brain__Front_Side_View__62042.jpg
ம்ம்ம் நமது மூளை எம்மை விட எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறது . நாம் தான் சோம்பேறிகளாக இருக்கின்றோம் . நமது உறுப்புகள் திறம்பட இயங்கி கொண்டு இருக்கின்றன . ஒரு உறுப்பு இயங்காவிட்டால் கூட நமக்கு , எம் உயிருக்கு ஆபத்துத்தான் . ஈரல் கருகுகிறது புகை பிடிக்கும் போது , மூளை காச்சல் என்று பல வித நோய்களும் மனிதனை ஆட்டி படைத்து கொண்டு இருக்கின்றன . 

.2 comments:

sakthistudycentre.blogspot.com said...

It is a very useful Article for Students.
Wish You Happy New Year

Thanks for giving useful article.

http://sakthistudycentre.blogspot.com/

Pavi said...

நன்றி சக்தி