Monday, January 10, 2011

எனக்கு பிடித்த பாடல்

அழகான வரிகள் , எனக்கு பிடித்த படம் , எனக்கு பிடித்த பாடகர் . 

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
http://www.cafeboys.com/wp-content/uploads/2007/03/mozhy.jpg
பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)

6 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பாடல் அறிமுகம். பாடலுக்கான லிங்க் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

S Maharajan said...

நல்ல பாடல்

பாலா said...

உங்களை கேட்காமலேயே உங்கள் பெயரை இங்கே பயன்படுத்தி இருக்கிறேன். மன்னிக்கவும்

http://blogintamil.blogspot.com/2011/01/1.html

Pavi said...

நன்றி குமார் .
போட்டதுக்கு பிறகுதான் அந்த யோசனை வருகிறதே எனக்கு .
இனி திருந்த செய்கிறேன் .

Pavi said...

பாலா அது ஒரு பிரச்சனையே இல்லை . நல்ல விடயத்துக்கு தானே .
உங்கள் பதிவில் எனது தளத்தையும் பற்றி குறிப்பிட்டு கூறியது எனக்கு சந்தோசமே .
நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை .
இன்னொன்று தெரியுமா?
நீங்கள் இப்படி கூறியபடியால் தான் நான் என்ன பதிவு இட்டுள்ளீர்கள் என்று பார்க்க கிடைத்தது .
மிகவும் நன்றி பாலா

பாலா said...

மிக்க நன்றி சகோ.