அவலை பெண்ணின் உள்ளத்தில் ....................
உழைக்கிறார் உழைக்கும் பணத்தில்
குடிக்கிறார் - வீட்டு செலவுக்காவது
பணம் தருவதும் இல்லை.
எப்படி பிள்ளைகளை நான்
வளர்ப்பது என்றிருந்தேன்
தேயிலை தோட்டத்தில் ஒரு
வேலை காலியாக இருந்தது
அங்கே வேலைக்கு சேர்ந்தேன்
வேலைகேற்ற கூலி இல்லை
என்றாலும் பிள்ளைகளின் நிலைமையை
எண்ணி வேலைக்கு போகின்றேன்
குடிகாரன் குடித்து விட்டு
என்னையும் எனது பிள்ளைகளையும்
அடிக்கிறான் , பணம் தரச்சொல்லி
கேட்கிறான் - என்ன செய்ய
ஏது செய்ய - பிள்ளைகள் அப்பாவை
கண்டால் பயப்படுகின்றார்கள்
அப்படித்தான் அதிக போதையில்
வந்தார் என் கணவர்
என்னை அடித்தார் , தள்ளினார்
என் மூத்த பையன் அவரை முறைத்தான்
அவனையும் தள்ளி விட்டார்
எனக்கு கோபம் வந்தது
அருகில் பார்த்தேன் விறகு
கட்டை கிடந்தது -உடனே
கையில் எடுத்து போட்டேன்
அவரின் தலையில் மூன்று
அடி -அவ்வளவுதான் ஆள்
கீழே பொத்தென்று விழுந்தார்
கோபத்தில் என்ன செய்வது என்று
தெரியாமல் இப்படி பண்ணி விட்டேன்
என்று பரிதவித்தேன் எனது
நிலையை எண்ணி கவலை உற்றேன்
பின்பு நினைத்தேன் அவர் இருந்தால்
தினம் தினம் கவலை - இல்லை எனில்
ஒரு நாள் கவலை என்றெண்ணினேன் .
என்ன செய்ய செய்த குற்றத்துக்காக
இப்போது சிறை வாசம் அனுபவித்து
பொது மன்னிப்பின் கீழ்
வீடு செல்கிறேன் - என் பெற்றோர்
எனது பிள்ளைகளை பார்த்து
கொண்டு இருப்பார்கள் என்ற
அசராத நம்பிக்கையில்
செல்கிறேன்- என் விதி
இப்படி ஆகி விட்டதே
என்ற ஏக்கத்தில் ...................
6 comments:
படத்துடன் படிக்க சுவரசியமாக உள்ளது
இந்த பாணியைத் தொடரலாம்.வாழ்த்துக்களுடன்..
உங்கள் நடையில் உண்மை பதிந்திருக்கிறது அருமை
அருமை...
நன்றி ரமணி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி தினேஷ்குமார்
நன்றி குமார்
Post a Comment