Wednesday, April 20, 2011

மனம் கவர்ந்த பாடகிகளில் ஒருவர் சுஜாதா

http://www1.sulekha.com/mstore/voxmedia/albums/default/Sujatha.jpg

சில பாடல்களை எப்போதுமே கேட்க பிடிக்கும் . சில பாடல்கள் காட்சி அமைப்புக்காக பிடிக்கும் , சில பாடல்கள் பாடிய பாடகிகளின் அருமையான குரல் வளத்தால் பிடிக்கும் , சில இசைக்காக பிடிக்கும் . இப்படி பாடல்கள் பிடிப்பதற்க்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும் . 

பாடகிகள் பலர் நமது தமிழ் சினிமாவில் வந்து போகிறார்கள் . அதில் சிலர் தான் பல பாடல்களை தமது குரல்களினால் மிகவும் சிறப்பாக பாடி ரசிகர்களை கட்டி போடுகிறார்கள் . அப்படி தந்து கணீர் என்ற , கரகரப்பு இன்றி , அழகான தமிழில் , அதன் தரம் குறையாது பாடும் வல்லமை கொண்டவர்கள் சில பாடகிகள் தான் . எனக்கு தெரிந்தவகையில் அப்படி பாடும் பாடகிகள் என்றால் சுசீலா , சித்ரா , சுஜாதா , அனுராதா. ஆனால், இப்போது பல பாடகிகள் வந்துள்ளனர் . அவர்களில் சிலரை தான் குறிப்பிட்டு சொல்லலாம் . 
http://98.130.166.20/gallery/a123/large/925.gif
"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது " பாடல் மிகவும் எனக்கு பிடிக்கும் . சுஜாதாவின் குரலில் மிகவும் அழகான பாடல்களில் ஒன்று . இப்படி பல பாடல்கள் என் மனதை திருடியவை . சுஜாதாவும் , சித்ராவும் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் . இது யார் பாடிய பாடல் என உடனே கண்டு பிடித்து விடுவேன் . அதுவும் சுஜாதா உன்னி கிருஷ்ணன் , ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து பாடும் பாடல்கள் எல்லாம் ஹிட் தான் . 

நேற்று இல்லாத மாற்றம், ஆத்தங்கரை மரமே, என் வீட்டுத் தோட்டத்தில், சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால், சந்திரனைத் தொட்டது யார், பூ பூக்கும் ஓசை, பூவுக்குள் ஒளிந்திருக்கும், முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்,  என்று பல பாடல்களைப் பாடினாலும் இளையராஜாவின் இசையில் ’ஒரு பட்டாம்பூச்சி’ பாடல் என் மனதிற்கு மிகவும் பிடிக்கும் .
http://www.jointscene.com/ahtees/admin/customer/content/361_17_Sujatha%20singer.jpg
பாடகி சுஜாதா பல விருதுகளுக்கு சொந்தக்காரி . தமிழ், தெலுங்கு , மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடி உள்ளார் . இந்த மொழிகளில் பல விருதுகளை பெற்று இருந்தாலும் தமிழ் சிறந்த பாடகிக்கான விருதுகளில் "நேற்று இல்லாத மாற்றம் ", பூ பூக்கும் ஓசை ", உன் சமையல் அறையில் " போன்ற பாடல்களுக்கு விருதுகளை பெற்று உள்ளார் . 
http://4.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SzI7eUW6yBI/AAAAAAAAGlw/7DU_eoGBDpY/s320/Playback+Singer+Sujatha+Photos,+Stills,+Images,+Gallery,+Stills,+Photos,+Wallpaper,+new+project,+new+songs,+new+album,+new+devotional+songs+(4).jpg
முத்து படத்தில் "தில்லானா தில்லானா ", சந்திரனை தொட்டது யார் ", நட்ச்சத்திர ஜன்னலில் "ஏதோ ஒரு பாட்டு , முதல் முறையே கிள்ளி பார்த்தேன் , சில் சில் சில் சில்லலா , போன்ற பாடல்களை எனக்கு எப்போதுமே கேட்க பிடிக்கும் . அதோடு மொழி படத்தில் "காற்றின் மொழி " பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் . ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று . 

இளையராஜா , ரஹ்மான் , வித்யாசாகர் , யுவன் , ஹரிஷ் என எல்லா இசை அமைப்பாளர்களுடனும் சேர்ந்து பல பாடல்களை பாடி உள்ளார் . இப்போதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றுகிறார் .  அதே குரல் , அதே இளமையான தோற்றம் என அன்று போல் இன்றும் அழகாக இருக்கிறார் . 
http://www.stateofkerala.in/kerala%20celebrities/images/sujatha.jpg
இப்போது சுஜாதாவின் மகளான சுவேதா இப்போது பாடகியாக அறிமுகமாகி பாடல்கள் பாடிக் கொண்டு இருக்கிறார் . எனக்கு பிடித்த பாடகிகளில் ஒருவராக சுஜாதா என்றும், இன்றும் இருக்கிறார் என்றால் அவரின் குரலின் இனிமை தான் அதற்க்கு காரணம் . 







5 comments:

சித்தாரா மகேஷ். said...

எனக்கும் மிகப் பிடித்த பாடகிகளில் ஒருவர்..

சித்தாரா மகேஷ். said...

அவர் புன்னகைக்கு என்றும் நான் அடிமை...

என் உயிரே.

பாலா said...

மேடைப்பாடகியாக இருந்து சினிமா பின்னணி பாடகியானவர். அதனால் பெரும்பாலான இசையமைப்பாளர்களின் கச்சேரிகளில் இவரை பார்க்கலாம். மிகவும் வாலடைல் பாடகி.

Pavi said...

நன்றி மகேஷ்

Pavi said...

நன்றி பாலா