Thursday, April 28, 2011

நடிகர் கார்த்திக்கு திருமணம்

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/01/Karthi-sivakumar-conect-indya.jpg

நடிகர் சிவகுமாரின் மகனும் , சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்திக்கு ஜூலை 3 ஆம் திகதி சென்னையில் திருமணம் நடக்க இருக்கிறது . பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமாகி பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி . மிகச் சிறந்த நடிப்பின் மூலம் முன்னேறி வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் . தற்போது நடித்து வெளியான சிறுத்தை படமும் எல்லோரிடமும் நல்ல வரவேற்பும் , வசூலையும் வாரி குவித்தது . இந்த படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் கார்த்தி .

பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்த்தி . கார்த்தியுடன் காஜல் அகர்வால், தமன்னா போன்ற வட மாநில நடிகைகளை இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. ஏற்கனவே சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் . ஆனால், கார்த்தி பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறி வந்தார் . 
http://2.bp.blogspot.com/-2xzJ8TT97y4/TbjwilG29eI/AAAAAAAAAXE/VAn5AU-V_h4/s320/Actor+Karthi+and+Ranjini+Marriage+Pictures+1.jpg
இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். மணப்பெண் ஈரோட்டைச் சேர்ந்தவர்.  இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார் கூறுகையில், "ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி, ஜோதி மீனாட்சி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ரஞ்சனி சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். கார்த்தி சென்னை கிரசன்ட் கல்லூரியில் பி.இ முடித்தார். அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிப்பில் எம்.எஸ் பட்டம் பெற்றார். சினிமா ஆர்வம் காரணமாக மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அமீரின் பருத்திவீரன் படம் மூலம் நாயகனாக அறிமுகவானவர் என்பது நாம் அறிந்ததே . 
http://photogallery.indiatimes.com/celebs/indian-stars/karthik-sivakumar/karthik-sivakumar/photo/5142812/karthik-sivakumar.jpg
வருங்கால மனைவி குறித்து கேட்டபோது கார்த்தி தான் கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார்.முதல்முறை ரஞ்சனியை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன் என்றார் கார்த்தி.
http://2.bp.blogspot.com/_nFGA60KV6pc/TRyIUhKGlCI/AAAAAAAABNU/jIRQrJqfTOE/s1600/Karthi+0.jpg
முற்கூட்டிய வாழ்த்துகளை கார்த்தியின் ரசிகர்கள் அனைவரும் தெரிவித்து கொள்கின்றோம் . இன்னும் பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பது எல்லா ரசிகர்களின் ஆவல் .

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

முற்கூட்டிய வாழ்த்துகளை கார்த்தியின் ரசிகர்கள் அனைவரும் தெரிவித்து கொள்கின்றோம்

Pavi said...

ஆமாம்.
நன்றி ராஜேஸ்வரி அவர்களே

அன்புடன் மலிக்கா said...

நல்லத்தேர்வு அதுவும் கிராமத்து பெண்ணை தேர்வுசெய்திருப்பது சூப்பர். ஜோடியும் மிக அருமையாக இருக்கிறார்கள் அட்வாஸ் வாழ்த்துக்கள்.