Saturday, April 30, 2011

மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்


அரச குடும்ப திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது . எல்லோரும் எதிர்பார்த்திருந்த இந்த அரச திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது . மிகவும் ஆடம்பரமாக நடந்த இத் திருமணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர் . நேரடியாக தொலைக்காட்சி மூலமும் பல கோடி மக்கள் கண்டு களித்தனர் . 
சாள்ஸ் - டயானா திருமணமும் மிகவும் கோலாகலமாக தான் நடந்து முடிந்தது . அப்போது நாங்கள் இந்த உலகத்ஹ்டில் பிறக்கவே இல்லை . எனினும் நாம் வில்லியத்தின் இந்த அரச குடும்ப திருமணத்தை இப்போது கண்டு கழிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது . நாம் பலர் கதைகளில் , படங்களில் தான் இந்த அரச குடும்ப திருமணங்களை கேள்விப்பட்டு , பார்த்து இருப்போம் . இப்போது உண்மையில் இப்படி நடந்த திருமணத்தை பார்க்க ஆவலாக எல்லோரும் இருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை . 
இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதல் தீவிரமாகியதும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்து உள்ளது. இளவரசரை திருமணம் செய்ததன் மூலம் கேத் மிடல்டன் இப்போது இங்கிலாந்து இளவரசி ஆகி விட்டார். ராணி எலிசபெத்துக்கு பிறகு பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராவார். சார்லசுக்கு பிறகு அடுத்த பட்டத்து இளவரசரான வில்லியம் இங்கிலாந்து மன்னராகி விடுவார். அப்போது கேத்மிடல்டன் இங்கிலாந்து ராணி ஆக இருப்பார். கேத் மிடல்டன் வயிற்றில் பிறக்கும் முதல் குழந்தைதான் வில்லியமுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டு மன்னராக வரும். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. இந்த விஷயத்தில் கேத்மிடல்டன் மிக மிக அதிர்ஷ்டமான பெண் என்றே சொல்ல வேண்டும்.
நேற்று உலகம் முழுவதும் பாரம்பரிய ஊடகங்ளாயினும் சரி, நவீன ஊடகங்களாயினும் சரி அவற்றை ஆக்கிரமித்திருந்த ஒரே விடயம் பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணம் தான். இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் காதலியான மிடில்டன் ஆகியோருக்கு எமது திருமண வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . 

No comments: