Wednesday, June 15, 2011

காய்கறிகளின் பங்கு அளப்பெரியது

http://runthreeseven.files.wordpress.com/2011/04/vegetables.jpg

சைவ உணவை உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்பார்கள் . சத்தான மரக்கறி வகைகள் எமக்கு மிகுந்த பயனை தருகின்றன . 
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. 
எமது உடம்பில் உள்ள நச்சு தன்மையை அகற்றி உடலை சுத்தம் செய்கின்றன . 
அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.


சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். இதனால் எமது உடலுக்கு உகந்த சக்தியை கொடுத்து உடனே சமிபாடு அடைகின்றது . கொழுப்பும், புரதமும் நிறைந்த உணவுகளை உண்ணும்போது எளிதில் சமிபாடு அடையாது . இதனால் தேவையில்லாத வயிற்றுக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு . மீன் , இறைச்சி வகைகளை உண்ணும்போது இப்படியான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு .
http://1.bp.blogspot.com/-1jVZ27DI3GE/TcgnKCcD_SI/AAAAAAAAAGA/MDPPsSPmljg/s1600/vegeteble.jpg
சைவ உணவுகளை நாம் உண்ணும்போது உடம்பும் லேசாக இருக்கும் . உடனே செரிமானம் அடையும் . தேவையான ஊட்டச்சத்துகளும் , விட்டமின்களும் , கல்சிய சத்துகள் என்பனவும் கிடைக்கும் . நாமும் நீண்ட நாட்களுக்கு நோய்  நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம் . கீரை வகைகளை ஒவ்வொரு நாளும் எமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . 

பீற்றுட், தக்காளி , பூசணி , பாகற்காய் போன்ற உணவுகள் எமது குருதியை நன்கு சுத்திகரித்து எமது தோலுக்கு பளபளப்பையும் , மினுமினுப்பையும் கொடுக்கின்றது . மிடுக்கான தோற்றத்தையும் கொடுக்கிறது இந்த காய்கறி வகைகள் . அத்தோடு காய்கறிகளுடன் நின்றுவிடாது பழ வகைகளையும் உண்ண வேண்டும் . அப்போதுதான் எமக்கு தேவையான எல்லா சத்துகளும் எமக்கு சரிசமமாக கிடைக்கும் . 

 http://international.stockfood.com/images-pictures/Shopping%20basket%20full%20of%20fruit%20and%20vegetables-407377.jpg
என்ன இனி காய்கறி வகைகளை ஒதுக்காது அவற்றையும் எமது உணவில் சேர்த்துக் கொள்வோம் . ஒவ்வொரு நாளும் ஒரு காய்கறி வகைகளையும் , கீரை வகைகளையும் சேர்த்து சத்துள்ள உணவுகளை உண்டு நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்வோம் . வீணாக மருந்து வகைகளுக்கு கொடுக்கும் பணத்தை குறைத்து நல்ல சத்துள்ள உணவுகளை உண்போம் .





 


















































1 comment:

Anonymous said...

this is correct............



vino