Wednesday, June 15, 2011

அப்பிள்..... அப்பிள்

http://www.themarysue.com/wp-content/uploads/2011/04/apples.jpg


பழங்களில் அப்பிளுக்கு ஒரு தனி கிராக்கி உண்டு . எப்போதும், எந்த நேரத்திலும் , எங்கும் சாப்பிடலாம் . எத்தனை பலன்களும் சாப்பிடலாம் . ஏற்கனவே நான் ஒரு பதிவு அப்பிள் பற்றி எழுதி இருந்தாலும் அப்பிள் பழத்தின் மகிமைகள் என்னில் அடங்காதவை . 


நாம் நோய்கள் இன்றி வாழ்வதற்க்கு அப்பிள் பழத்தை உண்ணலாம் . இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த அப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான். An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு அப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். 
http://www.wallpaperpimper.com/wallpaper/Food/Fruit/Red-Apples-7-IZRLRRWZI4-800x600.jpg
நம்மில் எத்தனை பேர் அப்பிள் பழத்தை விரும்பி உண்கிறார்கள் . சிலருக்கு அப்பிள் பழத்தையே சாப்பிட பிடிக்காது . கேட்டால் திராட்சை பழம் தான் எனக்கு பிடிக்கும் என்பார்கள் . எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று இந்த அப்பிள் பழம் ஆகும் . 
அப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://2.bp.blogspot.com/_uqBx13aymCE/TC704swH-7I/AAAAAAAACjc/qG2n3U4Frvg/s1600/3458436097_2a23292044.jpg

நம்மில் சிலர் வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் . அப்பிள் பழத்தை ஒதுக்குகிறார்கள் . அது தவறு . அப்பிள் பழத்தையும் ஒவ்வொரு நாளும் தவறாது சாப்பிட்டு பாருங்கள் . 
அப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு என்பனவற்றை கட்டுப்பாட்டின் கிழ் வைத்திருக்கக் கூடியது. 



ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான்.அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டொக்டர். கிறிஸ்டோபர் அடம்ஸ் தெரிவித்துள்ளார். அப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது.
http://1.bp.blogspot.com/_YroD456lLGo/S4ORoDxjOGI/AAAAAAAAAG8/MKrnCb_yapA/s320/ap2.jpg
முதுமை அடைகின்ற போது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது. இதற்க்கு எல்லாம் ஒரு தீர்வு அப்பிள் தான் .இனிமேல்  அப்பிள் பழத்தின் தோலை சீவ வேண்டாம். சீவி எறிய வேண்டாம் .அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் .எல்லோருக்கும் நல்லது . 




6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவையான செய்தி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாயிற்று..

Prabu Krishna said...

ஆப்பிள் நல்லது. நெல்லி அதை விட மிகவும் நல்லது. நம்மவர்கள் நெல்லியை அதிகம் உண்பதில்லை என்பதும் உண்மை.

Pavi said...

நீங்கள் சொல்வது சரிதான் .
நன்றி பிரபு

Admin said...

நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

Pavi said...

நன்றி சந்ரு
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்