Wednesday, October 12, 2011

கடும் குளிரில் கஷ்டப்பட்டு உழைக்கும் நம் உறவுகள்

http://www.stuffintheair.com/images/SnowHouse.jpg
வெளிநாடுகளில் இப்போது குளிர் தொடங்கி விட்டது . கஷ்டப்பட்டு எப்படியாவது எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும் . வேலைக்கு சென்றால் தான் சம்பளம் கிடைக்கும் . சம்பளம் கிடைத்தால் தான் குடும்பத்தின் செலவுகளை ஈடு செய்யலாம் .

இரவு நேர வேலை , பகல் நேர வேலை என்று அல்லும் பகலும் சம்பாதித்து கஷ்டப்படுகிறார்கள் நம் உறவுகள் . அவர்களுக்கு இரவும் ஒன்றுதான் பகலும் ஒன்றுதான் . என்ன கிழமை என்று கூட தெரிவதில்லை . ஐரோப்பிய நாடுகளில் நம் உறவுகள் பல கஷ்டப்பட்டு சம்பாதித்து உழைக்கிறார்கள் .
http://www.its.caltech.edu/~ph76a/japantour/part2/snow.jpg
அவர்கள் அனுப்பும் பணத்தை நாம் இங்கு மாற்றி தண்ணி போல் செலவழிக்கின்றோம் . எம்மவர்களுக்கு அவர்கள் படும் கஷ்டங்கள் புரிவதில்லை . என்ன தேவையோ உடனே கண்டபடி , தேவையில்லாத செலவுகளை செய்கின்றோம் . 

எல்லோருக்கும் அவர்கள் படும் கஷ்டங்கள் புரிவதில்லை . அண்ணா காசு முடிந்து விட்டது . பணம் அனுப்பு என்று ஒரு தொலைபேசியில் கதைத்து விட்டு வைக்கிறான் ஊரில் உள்ள தம்பி . அண்ணன் பெற்றோர்களுக்கு அனுப்பிய காசு முடிந்து விட்டது . சம்பளம் வந்ததும் காசு அனுப்புகிறான் . 
http://4.bp.blogspot.com/_elG77RDcYKk/TTZcUl82WGI/AAAAAAAAAA8/iYRGCmwps_A/s1600/riga-in-the-snow.jpg
இப்படித்தான் இந்த வெளிநாட்டில் உள்ள நம் உறவுகள் கஷ்டப்படுகிறார்கள் .

4 comments:

'பரிவை' சே.குமார் said...

மறுக்க முடியாத உண்மை.
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

இன்னும் கஷ்டங்கள் நிறைய இருக்கும், அவை அனைத்தும் வடித்திருந்தால் கனமான பதிவை இருந்திருக்கும்... ஒரு ஆங்கில படம் உண்டு, தயவு செய்து பாருங்கள் "in pursuit of happiness"

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

இன்னும் சோகங்கள் உண்டு . அதைவடித்தால் மனம் வேதனைப்படும் .
நன்றி ஜீவா