கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அஞ்சலி . படம் பெரிதாக வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அஞ்சலி என்ற புது முகத்தை அறிமுகப்படுத்தியது அந்தப் படம் தான் . அதன் பின்பு அவர் நடித்த அங்காடித்தெரு படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது .
எல்லோரும் அஞ்சலியின் நடிப்பை பற்றி புகழ்ந்தார்கள் . அஞ்சலியும் சிறப்பாக நடித்து இருந்தார் . படமும் நல்ல கதையம்சமுள்ள, யதார்த்தமான படம் என்று அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டது . அவரின் அழகிய தோற்றமும் , சிறப்பான நடிப்பும் அருமை . அந்த படத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் . அதன் பின்பு அஞ்சலியின் அடுத்த படங்கள் பெரிய அளவிற்கு பேசப்படவில்லை .
இப்போது அவருக்கு மிகவும் பேசப்படும் படங்களாக பல படங்கள் அமைந்து கொண்டு இருக்கின்றன . அஜித், அர்ஜுன் இணைந்து நடித்த மங்காத்தா படத்தில் அஞ்சலியும் நடித்து இருந்தார் . படமும் வெற்றி படமாக அமைந்தது . அஜித் படத்தில் நடிப்பதுக்கு அஞ்சலிக்கு அதிஸ்டம் அடித்திருந்தது . சிறிய வேடமாக இருந்தாலும் பெரிய படமாச்சே என்று சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்து நடித்து இருந்தார் .
மகிழ்ச்சி படத்தில் கலக்கல் நடிப்பையும், கூடவே கவர்ச்சியையும் கொடுத்து நடித்திருந்தார் . ஆனால், மங்காத்தா வெற்றி படம் . அதன் பின்பு அஞ்சலி நடித்திருந்த எங்கேயும் எப்போதும் படமும் வெற்றிப் படம் தான் . எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து நடித்து இருந்தார் . படம் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படுகிறது . படம் சூப்பர் ஹிட் படம் . நல்ல கதையம்சமுள்ள , நல்ல திரைக்கதையுடன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .
இப்போது நான்கு , ஐந்து படங்களை கையில் வைத்திருக்கும் நடிகை அஞ்சலி காட்டில் அடைமழை தான் . பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க ஆசைப்படு கொண்டு இருக்கிறார் . அதுவும் விரைவில் நிறைவேறி விடும் . ம்ம்ம்ம்ம்ம் வெற்றி படங்களை கொடுத்தால் நல்லது தான் . ரசிகர்களின் கனவுக்கன்னியாக அஞ்சலி மாறி விட்டார் .
2 comments:
தொடரட்டும் வெற்றி
நன்றி காக்கை
Post a Comment