எல்லோரும் கேட்பார்கள் சிறு குழந்தையை பார்த்து நீங்க அம்மா செல்லமா , அப்பா செல்லமா என்று அது அறியா வயதில் ஒரு குழந்தை அப்பா செல்லம் என்று சொல்லும் , ஒரு குழந்தை அம்மா செல்லம் என்று சொல்லும் . கொஞ்சம் வளர்ந்ததும் நீ யாருடைய செல்லம் என்று கேட்டால் நான் இரண்டுபேரினதும் செல்லம் தான் என்று சொல்லும் .
சரி பெரியவர்களை நாம் கேட்டால் கூடுதலாக ஆண்கள் தாங்கள் அம்மா செல்லம் என்று கூறுவார்கள் . அதே பெண்கள் கூடுதலாக அப்பா செல்லம் என்று சொல்வார்கள் . சிலர் வேறுபடுபவர்களும் இருக்கிறார்கள் . சிலரிடம் கேட்டால் நான் யாருடைய செல்லமும் இல்லை என்கிறார்கள் .
சிலர் தமது அம்மாவை எதிரியாகப் பார்க்கிறார்கள். பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு அவள் குழந்தையை பெற்று எடுக்கிறாள் . அதோடு முடிந்து விட்டதா கடமை . அரவணைத்து , பராமரித்து , சீராட்டி , பாராட்டி அவலப்படும் துன்பங்கள் அதிகம் . அவள் அவற்றை துன்பமாக கருதாது சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்கிறாள் .
தந்தை கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்காக உழைத்து குடும்பத்தை கவனிக்கிறார் . வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் ஒருபோதும் அம்மா உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் அம்மா. இந்த அம்மாவை புரிந்து கொண்டாலே இருவருக்கும் இடையில் ஒரு அழகான சிநேகம் பூத்துக்குலுங்கத் தொடங்கி விடும்.
நமக்கு இந்த உலகை காட்டி , நம்மை ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு சென்றிருக்கும் அம்மா , அப்பா இருவரையும் நம் தெய்வங்களாக என்றும் மதித்து நடக்க வேண்டும் . சிறு வயதில் இருந்தே அவர்களை நாம் மதித்து நடக்கும் போது நமது பிள்ளைகளும் அதை பார்த்து நம்மை மதிப்பார்கள் . நாம் எல்லோருக்கும் செல்லமாக இருப்போம் . சந்தோசமாக வாழ்வோம் .
6 comments:
மொத்தத்தில் எல்லோரும் பெற்றோரின் செல்லமாக இருக்க வேண்டும் என்று அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
நாங்கள் நான்கு சகோதரர்கள். கடைக்குட்டி பிள்ளை என்பதால் என்மீது பெற்றோர் அதிக செல்லம் கொடுப்பதாக ஊரார் சொல்லக்கேட்டிருக்கிறேன.இது போல குறிப்பிட்ட பிள்ளைக்கு செல்லம் கொடுக்க பல காரணங்கள் உள்ளது.பதிவுக்கு நன்றி.
பிரச்சினை பார்வைகளில் இருக்கிறது... பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாக பார்ப்பதும் தவறு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று நினைப்பதும் தவறு..
நன்றி பாலா .உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
நன்றி செழியன் .உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
நன்றி ஜீவா .உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
Post a Comment