உனது மழலை சிரிப்பை
நான் ரசிக்கிறேன் ,
ஆனந்தப்படுகின்றேன்.
உன் சிரிப்பை யார் தான்
விரும்ப மாட்டார்கள் .
பெற்றோர்கள் துன்பத்திலும்
தமது குழந்தையின் ஆனந்த
சிரிப்பை பார்த்து ஆனந்தம்
அடைகின்றனர் அல்லவா ?
இதுதான் உண்மையான சந்தோசம் .
மழலையின் சிரிப்பில்
ரசித்தால் துன்பமில்லை ,
கவலை இல்லை ,
யோசனை இல்லை
இவ்வளவும் மழலையின்
அந்த காந்த சிரிப்பில்
இருக்கிறது .
உனது ஆனந்த சிரிப்பில்
பத்து மாதம் சுமந்து
கஷ்டப்பட்டு உன்னை இந்த
உலகுக்கு கொண்டு வந்த
உனது தாய் கூட தனது
வலியை, கஷ்டத்தை
மறக்கிறாள் அல்லவா ???
நாம் ரசிக்கும் செல்லங்கள்
இந்த புன் சிரிப்பை எப்போதும்
தவள வேண்டும் , மகிழ்வுடன்
வாழ வேண்டும் ...
6 comments:
குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்பார்கள். மழலையின் சிரிப்பில் உலகையே மறக்கலாம். அழகழகான குழந்தைகளின் படங்களோடு வந்த உங்கள் பதிவு பிரமாதம்...
நாமும் குழந்தையாக வேண்டும் என்றால் சிறிது நேரம் குழந்தைகளோடு பழகினாலே போதும்.
ஒரு குழந்தை மழலைப்பேசுகிறது...
மழலைபேசி தாங்களும் குழந்தையாகிவிட்டீர்கள்...
தொடர்பதிவுக்கு வாழ்த்துக்கள..
நன்றி கணேஷ்
உண்மைதான். நன்றி பாலா
நன்றி சௌந்தர்
Post a Comment