Saturday, January 16, 2010

என் மனம் கவர்ந்த பாடகர்கள்

எனக்கு பொதுவாக எல்லா பாடல்களும் பிடிக்கும் . மெலடியான பாடல்கள் , குத்து பாடல்கள் , சோக பாடல்கள் என எல்லா வகையான பாடல்களும் பிடிக்கும் . அதுவும் தமிழை தமிழாக உச்சரித்து பாடுபவர்களை ரொம்பவும் பிடிக்கும் எனக்கு . பாலசுப்ரமணியம் , ஜேசுதாஸ் கால பாடகர்களில் இருந்து இன்றைய இளைய , புதிய பாடகர்களையும் பிடிக்கும் .

http://www.bharatwaves.com/portal/uploads/original_Balasubramanium_46f1001b1a081.jpg பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் பல பாடல்கள் உள்ளன . சிறந்த குரல்வளமும் , பாடல்களை உயிர் ஓட்டத்துடனும் , உணர்ச்சிகளுடனும் , ஏற்ற இறக்கக்ன்களுடனும் பாட கூடியவர். இவர் பாடிய பாடல்களில் நிலாவே வா , சத்தம் இல்லாத தனிமை , உன்னை பார்த்த பின்பு நான் , என்பன எனக்கு பிடித்த பாடல்கள் ஆகும் .

http://2.bp.blogspot.com/_7sZuUtAtiRw/SlHuPIeuUUI/AAAAAAAADTs/rucxq8OSru0/s320/yesudas090108_2.jpg 
ஜேசுதாஸ் சோக பாடல்கள் பாடுவதற்க்கு மிகவும் பொருத்தமான பாடகர் . பூங்காற்று சுகமானது என்ற பாடல் எனக்கு எப்போதும் கேக்க பிடிக்கும் .
http://www.nilacharal.com/enter/celeb/images/hariharan.jpg
ஹரிஹரனை பிடிக்காதோர் எவரும் இருக்க முடியாது . எல்லோருக்கும் பொதுவாக பிடித்த பாடகர் . காந்த குரலுக்கு போருத்தமானவரும் கூட . உன்பேர் சொல்ல ஆசைதான் , உருக்கு சிரித்தவளே , டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா , தொடுதொடு நிலவே ,என எல்லா பாடல்களுமே பிடிக்கும் . எப்போதும் கேட்பதற்க்கு ஏற்ற குரல் வளம் . என்னை மிகவும் கவர்ந்த பாடகர் .

http://www.vanavil.com/musicadmin/film_photogallery/UnniKrishnan.jpg 
உன்னி கிருஷ்ணனும் ஒரு சிறந்த பாடகர் . சங்கீத மேடைகளில் இவருக்கு கூட்டம் அதிகம் . நல்ல குரல் வளம் . சுரவரிசைகளை நீண்ட நேரம் இழுத்து பாட கூடியவர் . இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை , என்னவளே அடி என்னவளே , தாய்தானே அன்புக்கு ஆதாரம் , உயிரும் நீயே , கண்ணோடு கண்ணோடு வந்த காதல் என பாடல்கள் அருமையோ அருமை .


http://www.hinduonnet.com/thehindu/mp/2005/02/24/images/2005022401490201.jpg 
ஸ்ரீநிவாஸ் நல்ல பாடகர் . ஆப்பிள் பெண்ணே பாடலுக்கு சொந்தகாரர் . ஒரு பொய்யாவது சொல் கண்ணே , எட்டில் அழகு பாடல் அருமை .


http://www.india-forums.com/images/celebrity/l_1862.jpg 
உன்னிமேனனும் ஒரு சிறந்த பாடகர் . உச்சஸ்தாயி பாடல்களை மிகவும் நன்றாக பாட கூடியவர் . என்னவிலை அழகே பாடலுக்கு குரலுடன் இனிமை கொடுத்தவர் . நதியே நதியே காதல் நதியே , ஏய் நிலவே பாடல்கள் இவர் பாடிய பாடல்களில்  எனக்கு பிடித்தவை .


http://www.hindu.com/mp/2005/10/29/images/2005102902190601.jpg 
சங்கர் மகாதேவன் ஒரு கலக்கலான பாடகர் . குத்து பாடல்கள் என்றாலும் சரி மெலடி பாடல் என்றாலும் சரி எல்லாவகையான பாடல்களுக்கும் ஏற்ற குரல் . கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததம்மா , சந்தன தென்றலை , வாடி வாடி நாட்டுக்கட்ட , நான் அடிச்சா தாங்கமாட்டா போன்ற பாடல்களும் எனக்கு பிடிக்கும் .


http://userserve-ak.last.fm/serve/252/388692.jpg 
திப்புவையும் எனக்கு பிடிக்கும் . உம்சுக்கட்ட , தாய்மடியே உன்னை தேடுகிறேன் , காதல் வந்தால் சொல்லி அனுப்பு போன்ற பாடல்கள் எனக்கு பிடிக்கும் 

http://rajahasanfanclub.files.wordpress.com/2009/07/karthik_super.jpg 
கார்த்திக் இளைய தலைமுறை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடகர் தான் இவர் . அவள் யாரவள் , ஒரு மாலை இளவெயில் நேரம் , சக்தி கொடு , என பல பாடல்கள் பிடிக்கும் .
http://www.aneetaa.com/images/singer_prasanna.jpg 
பாடகர் பிரசன்னாவேட்டைக்காரன் பாடல் கரிகாலன் காலமிது பாடலுக்கு சொந்தகாரர் . 

பாலாஜி , முகேஷ் போன்ற பாடகர்கள் பாடிய பாடல்களும் எனக்கு பிடிக்கும் .இவர்கள் எனக்கு பிடித்த பாடகர்கள்.
 


4 comments:

கே.ரவிஷங்கர் said...

நல்ல பதிவு.நீங்கள் இளைய தலைமுறையாக இருப்பதால் எல்லாப் பாட்டுமே 85க்கு பிறகு வந்த பாடல்கள்.

குறிப்பாக பாலுவின் பழையப் பாடல்களை,குறிப்பாக MSV இசையில் கேட்டுப்பாருங்கள்.பிறகு ராஜாவின் இசை.”கம்பன் ஏமாந்தான்”(MSV)


//நந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்//

http://raviaditya.blogspot.com/2008/12/spb.html

இசை: வி.தக்‌ஷிணாமூர்த்தி.

ஜேசுதாஸ் -”தங்கத்தில் முகம் எடுத்து” படம்-மீனவ நண்பன்

புலவன் புலிகேசி said...

என்னங்க மனோவை விட்டுட்டீங்க...

Pavi said...

பழைய பாடல்கள் கேட்பதுண்டு . யார் பாடியது , எந்த நடிகர் நடித்தது , அது என்ன படம் என்றெல்லாம் தெரியாது . ஆனால் இப்போதைய படங்கள் என்றால் என்ன படம் , யார் பாடியது என்றெல்லாம் சொல்லமுடியும் . அதனால் தெரியாத விசயங்களுக்கு போக விரும்புவதில்லை .
நன்றி உங்கள் வருகைக்கும் . என்னுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களுக்கும் ரவி .

Pavi said...

பதிவு போட்டதன் பின்பு தான் மனோவின் நினைவு வந்தது . அவரும் ஒரு சிறந்த பாடகர் .