Sunday, February 21, 2010

என்னுயிர் பாடல்

மனிதா மனிதா பாடல் .
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ? , உயரத்தை குறைத்தால், இமயம் ஏது? துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?,மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம். எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும். என்ன அருமையான வரிகள் .ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் .





மனிதா! மனிதா!
இதுதான் நீதியோ?
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ?

சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்.
வான் வீழ்வதோ!!!

பயணிகள் நடப்பார் நிழலில் நிழலில்!!!
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்!!!
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்!!!
கடத்திய படகோ அலையில் அலையில்!!!

உன் மேல் பிழையில்லை, இதில் வருத்தம் உதவாது.
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது.
விதி வெல்லவோ!!!

உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?

மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம்.
எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும்.
சிரித்தால் என்ன?
 
http://namt.org/images/misc/A%20GOOD%20MAN-The%20Wedding%20pic-Web%20Version.jpg

2 comments:

நித்தி said...

அருமையான வலைப்பக்கம்........சதா கணினியையும் அதை சார்ந்த பணிகளையுமே செய்துகொண்டிருக்கும் எனது இயந்திர வாழ்க்கையில் உங்களின் வலைப்பபக்கம் சற்று இளைப்பாற வைத்தது.....தொடரட்டும் உங்களின் சேவை....வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
நித்தி
Administrator
www.pudhuvai.com

Pavi said...

நன்றி உங்கள் வருகைக்கு நித்தியானந்தம் .
தொடர்ந்து எனது தளத்தை பார்வை இடுங்கள் .