Saturday, March 20, 2010

நிம்மதி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibHfdS7K9fttYb92hgoueGOxCLju0y33FQbgOUsPNEedU8dRP5ZTf9nljSG4BceW4XCaDOu6_QgAsQrnlrz-v3zDw8Uq6mACqKUntXKX1Yh_UutiLQFXUWkh_U5KOQIFBaSelmW7hAIUke/s320/crying-man.jpg

நிம்மதி என்றால் என்ன என்றே தெரியவில்லை இப்போது. எல்லோரும் சந்தோசமாகவும் , நிம்மதி ஆகவுமா வாழ்க்கை வாழ்கிறார்கள் ? எவ்வளவு கஷ்டம் , துன்பம் என்று வருகின்றதே தவிர நிம்மதியாய் இன்று தான் இருந்தோம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் ?

மனதில் சந்தோசமாகவும் , வாழ்வில் மகிழ்ச்சியாகவும் , குடும்பம் அன்பாகவும் இருக்கும் போது நிம்மதி அங்கே கிடைக்கும் . அப்படி எத்தனை வீடுகளில் நடக்கிறது ?
இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடுகிறது . இருப்பதை கொண்டு வாழ்ந்தால் போதும். அளவுக்கு மிஞ்சிய  செலவு கூடாது . ஆடம்பரம் கூடாது . மற்றவர்களை போல் நானும்  சாப்பிட வேண்டும், செலவழிக்க வேண்டும் , அவர்கள் போடும் உடுப்புகள் போல போட  வேண்டும் என்றால் என்ன செய்வது . அவர்களிடம் பணம் இருக்கிறது . எதனையும் செய்கிறார்கள் . எம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை வைத்து சமாளித்து குடும்பம் நடத்த வேண்டும்  . மற்றவர்களிடம் போய் கை ஏந்தும் நிலைக்கு செல்லாதீர்கள் .
http://www.wcg.org/lit/gospel/man%20crying.jpg
நிம்மதி இல்லாதபொழுது நிதானம் இல்லை , நிதானம் இல்லாத பொழுது நிம்மதி இல்லை இதுதான் இன்றைய நிலைமை . பல செயல்களில் ஆராயாமல் அவசரப்பட்டு ஈடுபட்டுவிட்டு, பின்னர் நிம்மதியை இழந்து தவிக்கிறோம்.பின்பு யோசித்து என்னபலன் ?
woman_crying_1.jpg used image by beautifulwonder3

நம்முடைய ஒவ்வொரு செயலும் ஒரு தராசுத் தட்டில் வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்ட பிறகே நிகழ்த்தப்பட வேண்டும். அது நாம் செய்யப் போகும் இந்தச் செயல் நமக்கு நிம்மதியை அளிக்கக் கூடியதா அல்லது நம் நிம்மதியைப் பறிக்கக் கூடியதா? 
ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? இந்தச் செயலால் நமக்கு இலாபமா நஷ்டமா என்றே கணக்குப் போட்டுப் பார்க்கிறோம். அங்குதான் தவறு செய்கின்றோம் . சிலர் சொல்வார்கள் எனக்கு சாகும் வரைக்கும் நிம்மதி இல்லை என்று .
http://fc03.deviantart.net/fs13/f/2007/019/1/f/So_Sad_by_UnUmBreLLa.jpg
உறங்கிக் கொண்டிருக்கும் நினைவுகளை தட்டிபெயழுப்ப வேண்டாம் இப்படியிருப்பதே அவற்றிற்கும் நிம்மதி ஆகும் .  பணம், சொத்து அதிகமாக சேர்ந்தால் சுகம் கிடைக்கும். ஆனால் சந்தோஷம், திருப்தி கிடைக்காது. சமூக சேவை மூலம்தான் உண்மையான திருப்தி கிடைக்கிறது. நிம்மதி கிடைக்கிறது .

உலகில் மக்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, மிகக் குறைந்த அளவு பிரச்சினைகளுடன் இருக்கும் நாடுகள் என்று பார்த்தால் கைவிட்டு எண்ணலாம்.  பெரும்பாலும் வன்முறை, போர், அணு ஆயுதத் தயாரிப்பு, அணி சேர்ந்து கொண்டு அரசியலுக்காக ஒரு இனத்தையே அழிப்பது…. இப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்? இதில் நிம்மதியான சூழல் எங்கே, எப்போது நிலவப் போகிறது?
http://lamanouche.com/Designs/fantasy2/so_sad.jpg
திருப்தியுடன் இருந்து , சந்தோசமாக வாழ்ந்து மன நிம்மதியை அடையுங்கள் . ஒவ்வொரு நாளும் மனதை ஒரு நிலை படுத்தி தியானம் செய்யுங்கள் .























8 comments:

Anonymous said...

thiyaanam ellorukkum siranthathu.



kopi

Anonymous said...

nimmathi ellorukkum kidaippathillai.



suba.

ரவிசாந் said...

இப்ப எங்கே பார்த்தாலும் நிம்மதி என்ன விலை என்று தான் கேட்பார்கள்? அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா.தொடர்ந்து எழுதுங்கள்.

Pavi said...

நன்றி கோபி

Pavi said...

நன்றி சுபா

Pavi said...

நன்றி ரவிசாந்.

SShathiesh-சதீஷ். said...

முதல் முறையாக் உங்கள் தளம் வந்தேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான சிந்தனை . அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் !