Sunday, July 18, 2010

ருசியான மங்குஸ்தான் பழம்

http://2.bp.blogspot.com/_olhzL-oEec4/SWd8dwM9NJI/AAAAAAAAAIk/COE3ZwrRsAU/s400/mangosteen.jpg
பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது . சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர் . பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம் .
http://nastja.klevze.si/wp-content/uploads/2009/10/Mangosteen_Fruit_Cut_Open.gif

இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக  இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.
http://www.mangostanpower.eu/images/bk_mangosteen.jpg
மங்குஸ்தான் பழம் மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தமிழில் இந்த பழத்தை மங்குஸ்தான் என்று அழைக்கிறோம் . ஆங்கிலத்தில் மங்குஸ்தீன் என்று அழைக்கிறார்கள் .
http://beingplants.com/zen/images/mangosteen.jpg
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் ருசித்து உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் இந்த மங்குஸ்தான் . இந்த பழத்திலும் பல நன்மைகள் உண்டு .  பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது . உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
http://euforia-nuverus.com/wp-content/uploads/2009/08/euforia-nuverus-mangosteen.jpg
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
http://en.academic.ru/pictures/enwiki/77/Mangosteen.jpeg
கணனியில்  வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
திகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு  நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 http://www.islandteashop.com/images/mangosteen_tree.jpg
மங்குஸ்தான் பழச்சாறு பருகினால்,  சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும்.  உடல் எடை குறையும்.  நீண்ட ஆயுளும் கைகூடும்.
http://s1.hubimg.com/u/188584_f260.jpghttp://www.myzreality.com/images/1180321477/Mangosteen_Rind.jpg
சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.  இருமலை தடுக்கும்,  சூதக வலியை குணமாக்கும்,  தலைவலியை போக்கும்,  நாவறட்சியை தணிக்கும்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Mangosteen3.jpg
இவ்வாறான பல அரிய குணங்களை  கொண்ட பழம் இந்த மங்குஸ்தான் பழம் . எல்லோரும் சாப்பிட்டு பயம் பெறுங்கள் . இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் வாங்கி சாப்பிட்டு பாருங்கள் . எல்லா நாட்களும் கடைகளில் கிடைக்காது . ஒரு பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும் . மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு பாருங்கள் . அதன் ருசியை அனுபவியுங்கள் .

http://www.simplemalaysian.com/fruits/mangosteen/images/mangosteen4_rz.jpg









5 comments:

'பரிவை' சே.குமார் said...

mmmmmmmm.... thinamum oru pazhamaa...
oreay palangalin anivaguppa irukku.

Anonymous said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பழம். இங்க சீசன்ல தான் கிடைக்கும். ரெண்டு வாங்கி கண்டிப்பா சாப்பிடுவேன்

Pavi said...

ம்ம்ம்ம் எல்லோருக்கும் பயனுள்ள தகவல்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் தானே . அதனால் தான் .
எல்லா நல்ல விசயங்களும் எனது தளத்தில் வரும் . எதிர்பார்க்கலாம் நீங்கள் .
நன்றி குமார் . தொடர்ந்து எனது தளத்துக்கு வந்து உங்கள் ஆதரவை தருவதற்க்கு

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் வாங்கி சாப்பிடுங்கோ . ருசியானது தானே
நன்றி அம்மணி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

உபயோகமான தகவல்.லே அவுட்டும்,படங்களும் அழகு