Friday, July 23, 2010

முரளியின் உலக சாதனை

http://www.sport.co.uk/public/images_news/2010/7/06/400x400_1196594566_spt_ai_srilankavengland_06.jpg
எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த உலக நாயகன் முரளி நேற்றைய இறுதி போட்டியில் உலக சாதனையை நிகழ்த்தி தனது  டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .

கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார். இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வோர்ன்  தெரிவித்துள்ளார். 
http://images.cricket365.com/09/12/247/Muttiah-Muralitharan-top-wicket-taker_2394048.jpg
முரளிதரன் ஒரு "ஜீனியஸ்'. தூஸ்ரா வகை பந்துவீச்சில் கைதேர்ந்தவர். கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை துணிச்சலாக சமாளித்தவர். இவரது 800 விக்கெட் சாதனையை யாரும் நெருங்க முடியாது. இவரது மனஉறுதியை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்று கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார் .

முரளிதரனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம். 8 விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் சிறப்பாக பந்துவீசினார். டெஸ்ட் அரங்கில் இவர் 800 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தோனி குறிப்பிட்டுள்ளார் .
http://i2.cdn.turner.com/cnn/2009/SPORT/football/07/30/cricket.muralitharan.srilanka.retirement/art.murali.jpg
8 விக்கட்டுகள் தேவையான நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய முரளி தனது தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி , தனது சுழல் யாலத்தினால் இந்த 8 விக்கட்டுகளையும் கைப்பற்றி உள்ளார் .

முரளியை முன் மாதிரியாக கொண்டு பல இளம் வீரர்கள் முன்னேற  வேண்டும் . நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்க்க வேண்டும் . பல சவால்களை சந்தித்து வெற்றி பெற வேண்டும் .

உலக சாதனை வீரர் முரளிக்கு எல்லோரினது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .


2 comments:

ஸ்ரீ.... said...

சிறிய, ஆனால் சிறப்பான கட்டுரை. முரளியின் சாதனைகளை முறியடிக்கத் தற்போது யாருமில்லை. இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று தோன்றுகிறது.

ஸ்ரீ....

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் சிறிய பதிவு தான் .
"சுழல் மன்னன் முரளி "என்ற பதிவு மூன்று தினம்களுக்கு முன் இட்டேன் . அதனால் தான் சிறிய பதிவு .
நீங்கள் சொல்வது உண்மைதான் .
நன்றி ஸ்ரீ உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் .
உங்களை நீண்ட நாட்களுக்கு காணவில்லை . எங்கே ???