எனது முந்தய பதிவில் "உலக கிண்ணம் ஸ்பெயின் அணிக்கே " என தலைப்பு இட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன் . எனது கணிப்பு சரியாகி விட்டது . எனக்கு மிகவும் சந்தோசம் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது . நெதர்லாந்து அணி இரண்டாம் இடத்தை பிடித்தது .
உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஐரோப்பிய அணிகளான நெதர்லாந்தும், ஸ்பெயினும் மோதின. ஸ்பெயின் அணி சம்பியன் பட்டம் பெற்றது.
இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது.
ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கிண்ண கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது. கடந்த 1974, 78 இறுதியில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக கிண்ணத்தை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.
உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது. கோல்டன் ஷீ விருதை தாமஸ் முல்லர் (ஜெர்மனி) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார். இவரே உலக கால்பந்து போட்டியின் இளம் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கோல்டன் பால் விருதை டீகோ போர்லன் (உருகுவே) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார்.
6 comments:
Congrats Spain.
pakirvukku nanri.
naanum ninaichen spain win pannum enru.
vino
நன்றி குமார்
நன்றி வினோ
கருத்துக்கணிப்பு நாயகியே!எப்படி நம்ம பட்டம்?
ஐயோடா ...............
சாமி எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம் .
நன்றி செந்தில் குமார்
Post a Comment