இருபாலார்க்கும் முடி கொட்டுவது இயல்பான விடயம் எனினும் எல்லா முடிகளும் கொட்டினால் என்னாவது ? பிரச்சனை தானே . முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். பல முடிகள் கொட்டுவதும் , முளைப்பதுமாக இருக்கிறது .
பலருக்கு பிரச்சனை நான் எல்லா எண்ணையும் வைத்து பார்த்து விட்டேன் . ஒன்றும் பயன் இல்லை . முடி கொட்டி கொண்டே தான் இருக்கிறது என்கிறார்கள் . சிலர் கண்ட கண்ட சம்போ பாவிப்பார்கள் . ஒரே பாவனையில் ஒரு வகை சம்போவை பயன்படுத்த மாட்டார்கள் . இப்படி மாறி மாறி பாவித்தால் முடிகள் உதிரும் . ஒவ்வொரு நாளும் தலையில் சம்போ வைத்து முழுகினாலும் பிரச்சனை தான் . முடிகான்களில் எண்ணை தன்மை இல்லாமல் முடிகள் அறும். சிக்கு ஆகி கொட்டிண்டு விடும் .
தேவையான சத்தான உணவுகளையும் உண்ண வேண்டும் . போதிய அளவு ஓய்வு, அமைதி, உற்சாகம் போன்ற தேவை . நெடுகலும் யோசித்து யோசித்து கொண்டு இருந்தால் எல்லாம் தலைக்கு வேலை தானே . உடட்பயிட்சியும் மிகவும் முக்கியம் .
தலையை சிலர் சுத்தம் செய்ய மாட்டார்கள் . தலை முடியை அவிட்டால் துர்நாற்றம் வீசும் . தலையில் பேன்களும், பொடுகுகள் காணப்படும் . பொடுகு அதிகம் இருந்தால் தலை முடி உதிரும் . தலைமுடிகள் சுத்தமாக இருக்க வேண்டும் . பேன்கள் இருந்தால் தலையில் கடி , புண் என்பன ஏற்படும் .
முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. இதனாலும் முடிகள் தலை இழுத்தவுடன் கையோடு தலை முடிகள் வருகின்றன . இவர்கள் தமது தலை முடிகளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும் .
உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது.
இயற்கை மூலிகைகளை கொண்டு ஆதிகாலத்தில் எண்ணைகளை பயன்படுத்தினார்கள் . அதே போல் செம்பரத்தம் இலையை அரைத்து தலை குளிர்மையாக இருக்க தலைக்கு வைத்து குளித்தார்கள் . வெந்தயம் , சீகைக்காய் எல்லாம் சேர்த்து அரைத்து தலையில் வைத்து முழுகினார்கள் . அவர்களுக்கு எல்லாம் முடிகள் நீண்டும் , அடர்த்தியாகவும் இருந்தன . கரு கரு என தலை முடிகள் இருந்தன .
இப்போதைய நவநாகரிக உலகில் இளம் வயதில் தலை முடிகள் நரைத்து விடுகின்றன. தலை முடிகள் கொட்ட ஆரம்பிக்கின்றன . இளம் வயதினருக்கு தலை முடி அடர்த்தியும் இல்லை . உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டுகிறது . தேவையான அளவு சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் .
தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலவீனத்தை போக்கும். இதனால் முடிகள் கொட்டுவது குறையும் . தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.
இன்னும் கூடுதலாக தலை முடி உதிர்ந்தால் தோல் மருத்துவரை நாடுவது மிகவும் சிறந்தது . அவர் அதற்கான தீர்வுகளை கூறுவார். தலை முடி எல்லோருக்கும் அவசியம். வடிவாக பேணி பாதுகாத்து கொள்வது அவரவர் கைகளில் தான் உள்ளது .
9 comments:
நல்லது
நன்றி பிரபு
நல்ல கருத்து பயனுள்ள தகவல். தலை முடி எல்லோருக்கும் அவசியம். வடிவாக பேணி பாதுகாத்து கொள்வது அவரவர் கைகளில் தான் உள்ளது
பயனுள்ள நல்ல பகிர்வு.
ம்ம்ம்ம்
நன்றி சிவதர்சன்
நன்றி குமார்
பயனுள்ள பதிவு நன்றி சகோதரி
நன்றி மகாதேவன்
Post a Comment