காதலா, நட்பா எது சிறந்தது என்று எல்லோருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அபிபிராயங்கள் இருக்கும் . நானும் எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் . இரண்டும் அன்பு சம்பத்தப்பட்ட விடயம் . ஒருவர் காதல் என்பர் , மற்றவர் நட்பு என்பர் . சிலர் இரண்டும் சிறந்தது என்பர் .
நட்பு காதலாக மாறுவதும் உண்டு . காதலர்கள் பின்பு நட்பாக இருப்பதும் உண்டு. இது எல்லோருக்கும் பொருந்துவதும் இல்லை . நண்பர்களாக இருந்து பின்பு காதலில் முடிந்து கல்யாணம் செய்த தம்பதியினர் பிரிந்து வாழும்நிலையும் உண்டு. இது அவரவர் மனம் , சூழல் , குடும்ப பின்னணி போன்ற காரணங்களில் தங்கி உள்ளது .
உருவத்தை கண்டு வரும் காதல் தவறு. அது நீண்டகாலம் நிலைப்பதில்லை . மனம் சம்பந்தப்பட வேண்டும். இரு மனங்கள் சேர்ந்து ஒரு மனம் ஆவது தான் திருமணம் . இதயத்தை கண்டு வரும் காதல் சிறந்தது . தத்தமது விருப்பு, வெறுப்பு , அன்பு என்று பல விடயங்களில் ஒத்து போய் நான் இவளை கல்யாணம் செய்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும் . அது மனங்களின் சங்கமம் ஆக இருக்க வேண்டும் . பார்த்ததும் காதல், நொடிப்பொழுதில் காதல் இதெல்லாம் படங்களில் மட்டும் தான் . நியத்தில் ஒத்து வராது . காமம் அழித்த காதல் உண்மையான நட்பாக பரிணமிக்கிறது.
சிறுவனும் சிறுமியுமாக பழகும் போது நட்பு. பல விடயங்களை பேசுவார்கள் . உணவை பரிமாறி கொள்வது , இருவரும் சேர்ந்து விளையாடுவது , சேர்ந்து கோவில்களுக்கு போய் வருவது என்று இப்படி பழகுவது நட்பு. அதே ஆட்கள் வயது வந்து பழகும் போது காதல். அவர்களுக்குள் இருக்கும் அன்பு இன்னும் அதிகரிக்கிறது . அவர்கள் திருமணம் செய்யும் போது காதல் என்ற சொல் அன்பாக மாறுகிறது.
ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆண்மகனை பார்த்து, பேசி, பழகி, புரிந்து கொண்டு , இவனோ/ இவளோ நமது வாழ்க்கையில் வந்தா இவ்வளவு நன்றாக இருக்கும், அப்படினு நாம் நினைச்சு அதுக்கப்பறம் வருவதே உண்மையான காதல், அது தெய்வீக காதல் . எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள தைரியமுள்ளவர்கள் காதலித்து கரம் பிடித்தால் அவர்கள் வாழ்க்கைதான் சொர்க்கம். காதலும் நட்பு, பாசம் என்பதுபோல் அன்பில் ஒரு வகைதான்.ஒரு நட்பில், பாசத்தில் இருக்கும் அதே புனிதமும், கற்பும்தான் காதலிலும் இருக்கிறது.
பூமியில் விழுகின்ற மழைத்துளி மண்ணில் கலக்கிறது. காதலில் விழுகின்ற கண்ணீர்த்துளி நட்பில் கலக்கிறது . ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிந்துணர்வும், விட்டு கொடுத்தலும் இருக்கும் போது தான் அது காதல் முழுமையானதா மாறுகிறது .
நட்பு என்பது எந்த வித சொந்த, பந்தமோ ஒன்றும் இல்லாமல் வருவது . அது நீண்ட நாட்களுக்கு பழகி நட்புக்காக எதையும் செய்யும் அளவுக்கு இருப்பது . என்றும் அழியா நட்பு கல்லறை போன்றது . உறுதியான நட்பு கருங்கல் போன்றது . ஒருவன் நல்லவனாக மாறவோ, தீய வழி போகவோ நட்பு துணை போகிறது . நல்ல நட்பு என்றும் பேசப்படும் . எங்கு இருந்தாலும் நண்பர்கள் அதே சந்தோசத்துடன் இருப்பார்கள் . நட்புக்கு எல்லை இல்லை . கடல் கடந்தும் தொடரும் . நண்பன் இல்லாத வாழ்வு சோக வாழ்வு . நண்பனுடன் இருக்கும் பொழுதுகள் ஜாலியானவை . இப்படி இருக்கும் நட்புத்தான் நின்று நிலைக்கும் .
காதல் காதல் என்று எத்தனை பேர் அலைகிறார்கள் . எத்தனை பேரின் காதல் கைகூடுகிறது இன்று . பல காதல்கள் தோல்வியில் தான் முடிகிறது . மனம் சம்பந்தப்படுவதில்லை இப்போதைய காதல் எல்லாம் எப்படி தெய்வீக காதல் என்பது ? பணம், பொருள் பண்டம் , சொத்து , சுகபோக வாழ்க்கை பார்த்து வருவது காதல் அல்ல . உனக்காக நான், எனக்காக நீ என்று வாழ வேண்டும் . அதுதான் உண்மையான காதல் . வசதி , அந்தஸ்து பார்த்து வர கூடாது .
என்னை பொறுத்த வரையில் நண்பர்கள் காதலர்கள் ஆகலாம் . எனினும் என்றும் நமக்கு நட்பு தான் சிறந்தது . இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள கூடாது . நட்பு தான் சிறந்தது என்பேன் நான் . இன்றும் ,என்றும் ,எப்போதும் .
8 comments:
எனது கருத்தில் நட்புதான் சிறந்தது.
ஸ்ரீ....
ரொம்ப அருமையா அலசியிருக்கீங்க ..
இவனோ/ இவளோ நமது வாழ்க்கையில் வந்தா இவ்வளவு நன்றாக இருக்கும், அப்படினு நாம் நினைச்சு அதுக்கப்பறம் வருவதே உண்மையான காதல்
///
உண்மை தான்... ஆனால் அப்படி நினைத்து மனதில ஆசைகளை வளர்த்து.. சூழ்நிலைகளுக்காக அதனை உதறி விட்டு உண்மையான நட்பு என்ற ஒரு போர்வையை நானும் ஏன் தோழியும் போத்தியிருக்கிறோம்..அதை பற்றி ஏன் பதிவில் எழுதியிருக்கிறேன்.. முடிந்தால் படிக்கவும்..http://verumpaye.blogspot.com/2010/08/blog-post_19.html
உங்களது அலசல் பட்டிமன்றத்தில் என் மனதில் தோன்றிய நட்பே சிறந்தது என்ற தீர்ப்பே முடிவாய் வந்துள்ளது.
நல்ல பகிர்வு.
நன்றி ஸ்ரீ
நன்றி வெறும்பய
வாசித்தேன் . அருமையான உணர்வு . நன்றாக இருந்தது .
நன்றி குமார்
Post a Comment