இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களை மதித்து நடக்கும் பிள்ளைகளை விரல் விட்டுத்தான் எண்ண முடிகிறது . ஏனெனில் அவ்வளவு குறைவு . பிள்ளைகள் எல்லோரும் தமது பெற்றோர்களை மதித்துநடக்க வேண்டும் . தற்காலத்தில் பேச்சளவில் மட்டுமே மதித்து நடத்தல் இருக்கிறதே தவிர செயலளவில் பிள்ளைகள் பெற்றோரை மதித்து நடப்பதில்லை .
பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் . பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள் . படிப்பிக்கிறார்கள் . பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மற்றவர்கள் மாதிரி நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் , நல்ல பிரஜையாக. வர வேண்டும் , படித்து நல்ல உத்தியோகம் பார்க்க வேண்டும் , நாலுபேர் போற்றும் படி எனது பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வளர்க்கிறார்கள் .
பிள்ளைகள் அவற்றை சிந்திப்பதில்லை . நாலுபேர் தூற்றும் படி நடந்து கொள்கிறார்கள் . அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு எம்மை படிப்பிக்கிறார் என்பதனை உணர்வதில்லை . ஊர் சுற்றுவது , நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவுக்கு போவது , மது அருந்துவது என பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள் .
மாதா, பிதா , குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள் . இங்கு மாத, பிதாவுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது . அவர்களை மதித்து நடந்தாலே உங்களது வாழ்வு வளம் பெறும். இந்த உலகத்தை சுற்றி வருபவர் யார் என்று சிவன் சொல்ல மாம்பழத்தை பெறுவதற்காக பிள்ளையாரும், முருகனும் போட்டி போட்டனர் . அதில் பிள்ளையார் அம்மனையும் , அப்பனையும் சுற்றி வந்தார் . முருகன் மயிலில் உலகை சுற்றினார் . பிள்ளையார் அப்பனையும், அம்மனையும் சுற்றி வந்து மாம்பழத்தை பெற்று கொண்டார் .
இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் தாய் , தந்தை தான் நமது உலகம். எமக்கு நடக்க கற்று கொடுத்ததில் இருந்து ஒவ்வொரு கட்டத்திலும் தாயினதும், தந்தையினதும் பங்கு அளப்பெரியது . அவர்களை போற்றி வழிபட வேண்டுமே தவிர தூற்றி நடக்க கூடாது . அவர்களை கெட்ட வார்த்தைகளால் பேச கூடாது . அவர்களின் மனம் நோகும் படி பேச கூடாது .
எல்லோரும் பெற்றோர்களை மதித்து நடந்து சமுதாயத்தில் ஒரு நல்ல பிரயையாக வர வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பு . அவா . ஆசை . இதுதான் எல்லோருக்கும் சந்தோசம் .
2 comments:
காலையிலேயே அட்வைஸ் பதிவு..!
என்னாச்சு... ?
வூட்ல எதாவது பிரச்சினையா பவி?
சும்மா ஜாலிக்காக கேட்டேன்.
நல்ல பதிவு.
எல்லாரும் புரிந்து கொண்டால் நல்லதுதான்.
எழுத்துப் பிழைகள் அதிகம் இருக்கிறது.
ஒருமுறை பாருங்கள்.
//நல்ல பிறையாக // நல்ல பிள்ளையாக என்று வர வேண்டும.
//துலைத்து // - தொலைத்து
//பிரயையாக // - பிரஜையாக.
சரி செய்யுங்கள்.
எனக்கு ஒன்றும் ஆகவில்லை .
ஹி...............ஹி .............
ஜாலிக்காக சொன்னேன் .
பட படவென தட்டச்சு செய்வதால் பிழைகள் வருகின்றன . சரி செய்து கொள்கிறேன்
நன்றி குமார்
Post a Comment