Tuesday, September 21, 2010

வேட்டைக்கு தயாராகும் ஆர்யா


வெற்றிநாயகனாக ஜொலித்து கொண்டிருக்கும் ஆர்யா அடுத்து நடிக்க இருக்கும் படம் வேட்டை . பாஸ் என்கிற பாஸ்கரன் அமோக கரகோசத்துடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரை அரங்குகளில் . 

பாஸ் என்கிற பாஸ்கரன் என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து வரும் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் .லிங்குசாமி. அந்த படத்துக்கு வேட்டை என பெயர் இட்டுள்ளனர் . ஆர்யா நாயகனாக வேட்டைக்கு தயாராகி விட்டார் . படத்துக்கு கோல்டு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்க யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, பிருந்தாசாரதி வசனம் எழுதுகிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆன்டணி எடிட்டிங் செய்கிறார்.  கதை ரெடி . தொழில் நுட்ப கலையர்கள் ரெடி . எல்லாம் ரெடி . ஆர்யாவுக்கு யாரை ஜோடியாக போடலாம் என சிந்தித்து கொண்டு இருக்கிறார் இயக்குனர் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU8lNOzicNZJZoz7rkRjIIlfwloDUL14tK1abyeeYNJvUemMiDuHFT4JL3I7bMc7LmhoaHG3vBtuv5bFAwqDU90jdr_oCoMAsedcWcQEYIA1tX1iaefjHJCu475uv5hEiYfK_5S0-iBFhn/s1600/actor_arya_photoshoot_wallpapers_photos_01.jpg
சண்டைக்கோழி' படம் விஷாலுக்கு எப்படி அமைந்ததோ, 'ரன்' படம் எப்படி மாதவனுக்கு அமைந்ததோ, அதே போல இந்தப் படம் ஆர்யாவுக்கு சரியான ஆக்ஷன் படமாக அமையும். ஆர்யா நடித்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமையும். அவர் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நடித்திருந்தார். அதில் நகைச்சுவையிலும் பாஸ் ஆகியிருந்தார். படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாஸ் எப்படி பாஸோ.. அதைப்போல இந்தப் படம் மாஸ் படமாக அமையும் என கூறியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1fmbaTnb2DvZyqX7TDdFAoob1Md5oCTVF6baoWcJ9EDVkVbN1c7W6pfPxjJEsROby5K259OtIEeKQR8ccFVExkmaerA6y-uLZvH2vpJIufPToAjqlYxPFmITu7gRaT2SbwKnv4u3wv9ZY/s1600/actor_arya_photoshoot_wallpapers_photos_02.jpg
எப்படியோ அடுத்த படமும் நல்ல படமாகவும் , ரசிகர்கள் ரசிக்கும் படியும் அமையட்டும் . ஆர்யாவுக்கு இன்னுமொரு வெற்றி கிடைக்க வேண்டும் . ஆர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் . ஆர்யா இப்போதெல்லாம் சிறந்த கதையம்சம் கொண்டதும் , வித்தியாசமான கதைக்களம் , காட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் .  

1 comment:

Anonymous said...

ippothu aaryaa kaaddil adai malai poola...........



mano