Tuesday, September 28, 2010

சாதனை பாடகி லதா மங்கேஸ்கர்

http://www.dinamani.com/Images/article/2009/9/29/29lata.jpg
சாதனைகள் படைக்கும் பெண்களிலே பாடகியாக சாதனை நாட்டியவர்களில் ஒருவர் லதா மங்கேஸ்கர் ஆவார் . புரட்டாதி மாதம் 28 ஆம் திகதி 1929 ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்தார் . இன்று இவருக்கு 81 வயது .இருபது மொழிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிப் புகழ் பெற்றவரான லதா மங்கேஸ்கர்.

இவரது தந்தை பெயர் தீனாநாத் மங்கேஸ்கர். லதா மங்கேஸ்கர், தன் ஐந்து வயதிலேயே, தந்தையிடம் இசை பயில ஆரம்பித்தார். அதன் பின், புகழ் பெற்றவர்களான அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரிடமும் இசை பயின்றுள்ளார். இவர், 1942ல் சினிமா துறையில் நுழைந்தார். இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்

http://thatstamil.oneindia.in/img/2010/03/01-lata-mangeshkar200.jpg
பாடகியாக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் பரிமளித்துள்ள லதா மங்கேஸ்கர், 5 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் சாதி மனசே என்ற படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான மகாராஸ்டிர அரசின் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 திரைப்படங்களையும் லதா மங்கேஸ்கர் தயாரித்துள்ளார்.  1948 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் 20 இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய சாதனை பாடகி .
http://img.dinamalar.com/data/images_piraithal/mangaiyarmalarnews_30569094420.jpg
 பத்ம பூசண், பத்ம விபுசண், தாதாசாகேப் பால்கே விருது, என்.டி.ஆர்., தேசிய விருது, பாரத் ரத்னா, மூன்று முறை சினிமாவுக்கான தேசிய விருதுகள் மற்றும் நான்கு முறை சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர் கைடு, ஆராதனா, தார், தில் டூ பாகல் ஹை உட்பட பல படங்களில் பாடிய பின்னணி பாடல்கள் இறவாத தன்மை கொண்டவை.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் ஆஸ்தான பாடகியாக இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர் இருந்து வருகிறார் .  இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சினிமா பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர்க்கு பிரான்சின் மிக உயர்ந்த விருதான 'ஆபிசர் ஆப் த லிஜன் ஆப் ஹானர்' என்ற விருதையும் வென்று உள்ளார் . வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதும் இவருக்கு கிடைத்துள்ளது . இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார்.

http://www.gtbc.fm/upload/GTBCFM2063188956.jpg
முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்தி பாடலை பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.

இளைஜராஜாவின் இசையில் பல பாடல்களை பாடி உள்ளார் .
இங்கே பொன் , எங்கிருந்தோ அழைக்கும்,  எந்தன் கண்ணாலன் கரை நோக்கி  ,  என் உள்ளம் விட்டு ஓடாதே,  வலை ஓசை கல கல போன்ற பல தமிழ் பாடல்களையும் பாடி உள்ளார் . மங்காப் புகழ் கொண்ட பாடகி லதா மங்கேஸ்கர் அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் .




































































8 comments:

'பரிவை' சே.குமார் said...

Arumaiyana pakirvu Pavi.
neraminmaiyal munraiya katturaiyavum ippothan vasiththean. nanru.

Subankan said...

எனக்குப் பிடித்தமான ஒரு குரலுக்குச் சொந்தக்காரர். ஆனால் அவரைப்பற்றி தெரியாத பல விடயங்களை இங்குதான் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

உங்களைப்பார்த்துப் பொறாமைப்படும் ஒரு விடயம், இவ்வளவு பதிவுகளை எப்படி எழுதமுடிகிறது?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபலபாடகி ஆஷா போஸ்லே இவர் சகோதரி. இவர் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். மொழிபுரியாவிடிலும் குரலினிமை. இலங்கையில் இவருக்கு கோடிக்கணக்கான சிங்கள
ரசிகர்கள் உண்டு.
என்னுடன் வேலை செய்யும் பிரஞ்சுக்காரர் இந்திய இசையெனில் அவர் உச்சரிக்கும் பெயர்
லதா மங்கேஸ்கர்; ஒரு நத்தார் பரிசாக டிவிடி லைவ் சோ அவருக்குப் பரிசாகக் கொடுத்தேன்.
ஆனாலும் எனக்கு இவர் மேல் ஒரு வருத்தம் உண்டு.
இந்தியில் வாணி ஜெயராம் பாடிப் புகழ் பெற்ற காலத்தில் , அடியாள் வைத்து வாணியை
இந்தி இசைத் துறையில் இருந்து விரட்டியது இவரென...வாணி தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.அதற்கு எந்த மறுப்புமே வரவில்லை.
எது எப்படியோ இவர் பெருஞ் சாதனையாளர். இந்தியாவின் பெருமையில் ஒன்று.

thiyaa said...

தெரியாத பல விடயங்களை அறிந்துகொண்டேன்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

எல்லாம் விடயங்களை பற்றியும் எல்லோருக்கும் தெரிவதில்லை . அதுபோல தான் நானும் . ஆனால், எல்லா விடயங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு . பல விடயங்களை வாசித்தும் ,அவரை பற்றி பல விடயங்களை தேடி படித்து தான் எனது பதிவில் இடுகிறேன் . எனக்குரிய பாணியில் . என்னென அம்சம்கள் தேவையோ அவற்றை எல்லாம் சேர்த்தும் வருகிறேன் . சிலருக்கு பாடகியை தெரியும் . அவர் யார் என்று தெரியாது . அதனால் பல படங்களை தேடி எடுத்து போடுகிறேன் . எனது தளம்த்துக்கு எல்லோரும் வர வேண்டும், பதிவுகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலும் தான் காரணம் .
நன்றி சுபாங்கன் .
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் .

Pavi said...

நன்றி யோகன்

Pavi said...

நன்றி தியா