Thursday, September 16, 2010

தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா

 http://3.bp.blogspot.com/_fPiYV98KdAI/SbOxIDc1iAI/AAAAAAAACVY/H6hV-6ZDgmU/s400/arya-11.jpeg
தமிழ் சினிமாவில் முன்னேறி வெற்றி கொடி கட்டும் நாயகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் ஆர்யா. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் திரை துறைக்கு வந்து தனது இடைவிடாத முயற்சியாலும் , கடின உழைப்பாலும் , சிறந்த நடிப்பாலும் முன்னேறி வருகிறார் ஆர்யா .
http://www.behindwoods.com/features/News/News28/1-9-05/images/tamil-movies-news-actor-arya.jpg
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பு , வேறு வேறு இயக்குனர்கள் , வேறு வேறு கதையம்சம் என ஒவ்வொரு படத்தையும் தேர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார் . ஒரே அரைத்த மாவை அரைக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தான் பெரிதும் விரும்புகிறார்கள் ரசிகர்கள் . அதனை உணர்ந்து கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் ஆர்யா .
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/08/boss-engira-baskaran-aarya-nayanthara-santhanam-4.jpg
ரசிகர்கள் எதிர்பார்க்கும்படியான நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கொடி கட்டிக்கொண்டு இருக்கிறார் ஆர்யா . சில புகார்கள் இடைக்கிடை ஆர்யாவை பற்றி வந்தாலும் அவற்றையும் சமாளித்து கொண்டு நடிகைகளுடன் கிசுகிசுக்க பட்டாலும் அவர் முன்னேறி  கொண்டே வருகிறார் .
http://i177.photobucket.com/albums/w218/seeucom/actress9/actor_arya_is_arya.jpg
சிறந்த நடிப்பு , அழகு , உயரம் என ஒரு கதாநாயகனுக்கு உரித்தான அத்தனை அம்சமும் ஆர்யாவிடம் உண்டு .
பெரிய வெற்றிகளுக்காக காத்து கொண்டு இருந்த ஆர்யா இப்போது மிகவும் குசியாக , சந்தோசமாக இருக்கிறார் . ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுத்துள்ளேன் , ரசிகர்கள் அவற்றை வெற்றி படமாக மாற்றி உள்ளார்கள் என்றதுதான் காரணம் .ஆர்யாவின் குசிக்கு காரணம் அதுதான் .
http://www.southdreamz.com/wp-content/uploads/2009/01/naan-kadavul-arya.jpg
கலாபக்காதலன் படத்தில் ஆர்யாவின் நடிப்பை பாராட்டலாம் . அதே போல நான் கடவுள் படத்திலும் சிறப்பாக நடித்து இருந்தார் . மதராசப்படினம் படமும் ஆர்யாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது . வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது . அதைவிட தற்போது வெளிவந்து ஓடி கொண்டு இருக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது திரை அரங்குகளில் .

அடுத்து சிக்கு புக்கு. மணிகண்டன் இயக்கியிருக்கிறார். ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . மீடியா ஒன் குளோபல் தயாரித்திருக்கின்றனர். இது ஓரு ரொமான்டிக் காமெடி படம். பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான காமெடி படம் கிடையாது. இது வேறொரு மாதிரியான படம் என்று சொல்கிறார் ஆர்யா .
http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/actors/Arya/arya-new-images4.jpg
இதுவரை பதினொரு படங்களில் நடித்து இருக்கிறார் ஆர்யா . பத்தாவது படம் தான் மதராசபட்டினம். மதராசபட்டினம் படம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்று உள்ளது. இந்த படம் சுதந்திரத்துக்கு முந்தைய கதை. அதாவது 1946-ம் ஆண்டு வெள்ளைக்கார பெண் ஒரு கூலித்தொழிலாளியை காதலித்த கதை என்பதால் ரசிகர்கள் படத்தை ரசனையோடு பார்க்கிறார்கள். பாராட்டிய வண்ணம் உள்ளனர் . பாடல்களும் அருமை . சண்டைக் காட்சி உள்பட அனைத்து காட்சிகளும் ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டு உள்ளது.
http://www.cinefundas.com/wp-content/uploads/2010/08/Boss-Engira-Baskaran1-300x168.jpg
இன்னும் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வெற்றிப்பட நாயகர்களின் வரிசையில் இணைய வேண்டும் . உங்களிடம் இருந்து இன்னும் பல வித்தியாசமான படங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள் .













6 comments:

'பரிவை' சே.குமார் said...

True.

Pavi said...

உண்மை உண்மை
நன்றி குமார்

ம.தி.சுதா said...

இவர் நடித்த செட் விளம்பரத்தை இலங்கையர் மறப்போமா...? பதிவுக்க வாழ்த்தக்கள்..

Pavi said...

மறக்க மாட்டோம் அல்லவா.
நன்றி சுதா

r.v.saravanan said...

உண்மை


நல்ல அலசல் பவி

Pavi said...

நன்றி சரவணன்