Sunday, October 3, 2010

எந்திரன் எனக்கு பிடிச்சிருக்கு

Enthiran – The Robot

எந்திரன் பார்த்திட்டோமல்லோ ...............ரஜனியின் நடிப்பும் , ஐஸின் அழகும் , சங்கரின் பிரமாண்டமும் அசத்தலோ அசத்தல் . எல்லோரும் பார்க்க வேண்டிய படம் எந்திரன் . தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத புதிய பிரமாண்டம், காட்சிகள் என எல்லாமே அசத்தல் . பாடல்கள் பிரமாண்டம் , கொள்ளை அழகான இடங்களில் படமாக்கப்பட்ட இடங்களும், விதமும் அருமை . இப்படி புகழ்ந்து கொண்டே போகலாம் .

ஒரே புளித்த கதைகளையும் , மசாலாத்தனங்களையும் ரசித்த எமக்கு , தமிழ் ரசிகர்களுக்கு எந்திரன் ஒரு வரப்பிரசாதம் . தமிழ் சினிமா இதுவரை காணாத பிரமாண்ட படம் என்றும் அதில் மிரட்டிவிட்டார் ரஜினி என்றும் முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார் என்றால் பாருங்களேன் .

கடந்த 3 ஆண்டுகளாக எந்திரனுக்காக காத்திருந்த ரசிகர்களின் காத்திருப்பு . ரூ. 150 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள எந்திரன் உலகம் முழுவதும்  திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது அல்லவா . உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறது . இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜனிடா ......

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரபலங்களின் கூட்டணியுடன் பிரமாண்டமாக வெளிவந்திருக்கிறது எந்திரன். எதிர்பார்ப்புகளை ஈடு கட்டும் வகையிலும் , ரசிகர்கள் எல்லோரும் பார்க்க கூடிய விதத்திலும் , எல்லோருக்கும் புரியும் படியும் இருக்கிறது எந்திரன் படம் .

Enthiran – The Robot

டாக்டர் வசீகரன் 10 வருடம் முயன்று ஒரு மனித ரோபோவை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். சில காலம் கழித்து உணர்வையும் கொடுக்கிறார். மனிதனாகவே மாறிய ரோபோ அடுத்து மனித இனத்தின் ஒட்டுமொத்த தீய குணங்களையும் சுவீகாரம் எடுத்துக் கொள்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரிந்த முடிவுதான் என்றாலும், யாரும் அத்தனை சுலபத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத க்ளைமாக்ஸ். சிட்டி என்ற ரோபோ செய்யும் அட்டகாசங்கள் அருமை . ரசிக்கும் படி உள்ளது . அது நல்லசெயளுக்கும் பயன்படுத்தலாம் , தீய செயல்களுக்கும் பயன்படுத்தலாம் . அதை இயக்குபவரின் கையில் தான் உள்ளது .

Enthiran – The Robot

நாட்டை காப்பாற்ற வேண்டும். கெட்டவர்களை ஒழிக்க வேண்டும் என்பது விஞ்ஞானி ரஜினியின் இலட்சியம். தனி மனிதனாக தன்னால் வில்லன்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் தன்னை போலவே உருவ அமைப்பு கொண்ட ஒரு ரோபோவை விஞ்ஞானி ரஜினி உருவாக்குகிறார். ஐஸ்வர்யாராயை பார்த்ததுமே காதலிப்பது, இவரைப்போலவே ரோபோவும் ஐஸ்வர்யாராயை ஜொள்ளுவிடுவது போன்ற காட்சிகளில் ரஜினியின் இளமை ஊஞ்சலாடுகிறது.

ரஜனி ரொம்பவும் அழகாக இருக்கிறார் . நடிக்கிறார் . தான் எப்பவுமே ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்பதை நீருபித்து உள்ளார் . அவரின் புகழ் இன்னும் மங்கவில்லை . வைரம் எப்போதும் ஜொலித்து கொண்டு தானே இருக்கும் . அதுபோல் தான் ரஜனியும்

Enthiran – The Robot

ஐஸ்வர்யா ராய். அழகின் மொத்த உருவமாய் வந்து மனதை அள்ளிக் கொண்டு விட்டார். இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜனிக்கு  கண்டுபிடிக்கவே முடியாது. கோபம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல், நடனம் என அனைத்திலும் ரஜினிக்கு இணையாக அசத்தியிருக்கிறார். அழகோ அழகு . எப்படிப்பா.........இப்படி ......அன்று போல் இன்றும் .

சிட்டி ரஜனி செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் குதூகலப்படுத்தக்கூடியது. பாடல் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் அற்புதமாகத் தான் இருக்கும். இதில் கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் வியப்பூட்டுகிறார். ஹனீபாவும் கலாபவன் மணியும் ரசிக்க வைக்கிறார்கள். படம் முழுக்க ரஜினியும் ஐஸ்வர்யா ராயுமே இருப்பதால் படத்தில் வில்லனுக்கு வேலை இல்லை என்றே சொல்லலாம்

Enthiran – The Robot

சிட்டி ஐஸ்வர்யாவை விரும்புவதாக கூறுமிடத்தில் சிட்டியும் வசீகரனும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்கள், இறுதியாக சிட்டி பேசும் வசனங்கள், கடைசியில் படம் முடியும்போது “சிந்தித்ததால்” எனவரும் ஒருவரி வசனம் உட்பட வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம்.

ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் சூப்பர்ஸ்டார் ஷங்கர்தான், இதை யாராலும் மறுக்க முடியாது  நிச்சயமாக இது ஒரு ஷங்கர் பாடம்தான்,  ஷங்கருக்குள் இருந்த அத்தனை கனவுகளையும் நனவாக்கி இருக்கிறார்.  தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை  கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்.  அவரின் உழைப்பு ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது.

இரும்பிலே ஒரு இதயம் துடிக்கும் பாடலில் ரோபோவின் சில்வர் க்ரே ட்ரெஸ்ஸில் ஆடும் போது இரும்புத் தாமரைகளும்., கோல்டன் கலர் ட்ரெஸ்ஸில் ஆடும் போது தங்க மீன் தொட்டியும் அழகு.. கிளிமாஞ்சாரோ பாடலில் இயற்கைஅழகும் ரஜனி ஐஸின் அழகும் போட்டி போட்டுக்கொண்டு ஜொலிக்கிறது.

Enthiran – The Robot

எல்லோரும் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய படம் எந்திரன் . எந்திரன் உங்களை ஏமாற்ற மாட்டான் ..........பாருங்கோ .

படத்திற்கான அதிகபட்ச ஒத்துழைப்பை ரஹ்மான் கொடுத்துவிட்டார். பின்னணி இசை  படத்திற்கு பெரும் பலம். வைரமுத்து , பா. விஜயின் பாடல் வரிகள் அருமை .

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு


காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ.....
சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா 



அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு





















13 comments:

'பரிவை' சே.குமார் said...

vimarsanam Nalla irukku.

Pavi said...

நன்றி ....நன்றி குமார்
நீங்க எந்திரன் பார்க்கவில்லையா ?

Anonymous said...

சிட்டி ரஜனி செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் குதூகலப்படுத்தக்கூடியது//
உண்மைதான் சூப்பர் விமர்சனம்

r.v.saravanan said...

நானும் பார்த்திட்டேன் பவி ரொம்ப நல்லா இருக்கு
சிட்டி ரஜினி செய்யும் சாகசங்கள் வில்லன் ரஜினியின் நடிப்பு அமர்க்களம்
என் தளத்தில் விமர்சனமும் செய்து விட்டேன்

Subankan said...

படம் கலக்கல்! எனக்கும் பிடித்திருக்கிறது :)

Anonymous said...

supera irukku padam............



vaasu

'பரிவை' சே.குமார் said...

illainga... viruppam illai...
inga veklaikku poyittu vara iravaguthu... pinna padamavathu...?

ama eththanai murai parthinga... rajini rasigaithaney neenga?

Pavi said...

நன்றி சதீஷ்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி சுபாங்கன்

Pavi said...

நன்றி வாசு

Pavi said...

ஒரு தடவை தான் பார்த்தேன்.
நல்ல படங்களை ரசிக்கும் ஒரு சராசரி ரசிகை .
நன்றி குமார்

பிரகாஷ் சேதுராமன் said...

நல்ல விமர்சனம்.

என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்