Monday, October 4, 2010

வானொலிகளும் ரசிகர்களும்

http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f3/Radio.jpg
படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை எல்லோரும் கேட்பது வானொலி தான் . எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளை கால நேரத்துக்கு ஏற்ப திறம்பட செய்து ரசிகர்களை கவர்கின்றன வானொலி நிகழ்ச்சிகள் என்பதில் ஐயமில்லை .
http://www.norcalblogs.com/watts/images/net_radio.jpg
உலகளாவிய ரீதியில் பல வானொலிகள் இருக்கின்றன . ஒன்லைன் மூலமும் நிகழ்ச்சிகளை உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டாலும் கேட்டு மகிழலாம் . தமிழ் வானொலிகளும் பல உண்டு உலகளாவிய ரீதியில் . மலேசியா , சிங்கப்பூர் , இங்கிலாந்து , இந்தியா , இலங்கை , நெதர்லாந்து , கனடா , சுவிஸ் என்று பல நாடுகளிலும் தமிழ் வானொலி அலைவரிசைகள் இருக்கின்றன .
http://www.crrc.org.my/crrc/images/stories/pictures/radio_30-9-09.jpg
தமிழர்களின் கலாசாரம் , நடைமுறைகள் , சிறப்பு விசேஷங்கள் போன்ற விடயங்களை அறியத்தருவதுடன் விசேட  கோவில் திருவிழாக்கள் நேரடி ஒலிபரப்பும் இடம்பெறுகின்றன . இலங்கையிலும் பல வானொலி அலைவரிசைகள் உள்ளன .

தமிழில் சக்தி , வெற்றி , வசந்தம் , சூரியன் வானொலி அலைவரிசைகள் உள்ளன . விளையாட்டு செய்திகள், நாட்டு நடப்புகள், உலக நடப்புகள் என்பனவற்றை உடனுக்குடன் கேட்டு மகிழலாம் . புத்தம் புதிய திரைப்பட பாடல்களை எல்லாம் கேட்டு மகிழ்வதோடு காலத்தால் அழியாத இடைக்கால, பழைய பாடல்களை இரவு வேளைகளில் கேட்க கூடியதாக உள்ளது .
http://wifinetnews.com/images/reciva_net_radio.jpg
சிலர் வாசித்து அறிவதை விட கேட்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் . வானொலியில் அவர்கள் பல தகவல்களையும் கேட்டறிந்து கொள்கிறார்கள் . சிலர் படிக்கும் போதே வானொலி கேட்டுக்கொண்டே படிப்பார்கள் . வேறு சிலர் வானொலியை காலையில் போட்டால் இரவு படுக்கும் போதுதான் பூட்டுவார்கள் . அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்பார்கள் . இப்போது கைத்தொலைபேசிகளிலும்  வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழலாம்

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் சிலர் ஒரு வானொலி அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியை கேட்க மாட்டார்கள் . பல தடவை மாற்றி மாற்றி எந்த அலைவரிசையில் தங்களுக்கு பிடித்த பாட்டு போகுதோ அந்த அலைவரிசைக்கு திருப்பி தங்களுக்கு பிடித்த பாட்டை கேட்பார்கள் .அது போல தான் நானும் . சிலர் காலை நேரத்தில் ஒரு அலைவரிசையிலும் , இரவு நேரத்தில் இன்னொரு அலைவரிசையிலும் திருப்பி நிகழ்ச்சிகளை கேட்பார்கள்.
http://www.kitchencontraptions.com/images/eyemax_blue_radio(1)%5Bekm%5D321x300%5Bekm%5D.jpg
சிலர் தமக்கு பிடித்த அலைவரிசை ஏதோ அதில் மட்டுமே போடுவார்கள் . வேறு அலைவரிசை நிகழ்ச்சிகளை கேட்பதே இல்லை . சிலர் தமக்கு பிடித்த அறிவிப்பாளர் எந்த நிகழ்ச்சி செய்கிறாரோ அந்த நிகழ்ச்சியை விரும்பி கேட்பர்.

மாறி மாறி வானொலி அறிவிப்பாளர்களும் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் ஆதரவை பெறுகிறார்கள் . நிகழ்ச்சிகளும் அருமையாக இருக்கின்றன. அறிவிப்பாளர்கள் தமது குரல் வளத்தாலும் , நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாங்கும் அருமை .

7 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னதான் முனேற்றம் அடைந்தாலும்.. பழைய வானொலிகளும் தொகுப்பாளர்களும் மறக்க முடியாதவர்கள்...

Anonymous said...

enrum sila arivippalarkal em manathai viddu neenkaatha vannam iruppar.

naanum oru vaanoli rasikan thaan.


mano

santhanakrishnan said...

இப்போதெல்லாம் வானொலி
வீட்டில் இருக்கும் பெரியவ்ர்கள்
போல் ஆய்டுச்சு. விருப்பம்
குறைந்து கொண்டிருக்கும்
நேரத்தில் உங்கள் பதிவு
புத்துயிர் கொடுக்கிறது.
உண்மை பவி.

r.v.saravanan said...

எனக்கு இப்பவும் ரேடியோ கேட்கிறது ரொம்ப பிடிக்கும்

Pavi said...

அது உண்மைதான்
நன்றி வெறும்பய

Pavi said...

உண்மைதான்
நன்றி கிருஷ்ணன்

Pavi said...

நன்றி சரவணன்