தனுஷ் நடித்து விரைவில் தீபாவளி வெளியீடாக வெளிவர இருக்கிறது உத்தமபுத்திரன் திரைப்படம் . செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் மித்ரன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது . யாரடி நீ மோகனி, குட்டி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி இப்படத்திலும் அசத்தும் என நம்பபடுகிறது .
தீபாவளி ரேசில் இறங்க இருக்கும் இந்த படம் எல்லோர் மத்தியிலும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது . தெலுங்கிலும், கன்னடத்திலும் வெற்றி பெற்ற "ரெடி', தற்போது "உத்தமபுத்திரன்' என்ற பெயரில் தமிழில் தயாராகி உள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பாலாஜி ஸ்டியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தனுஷுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், கருணாஸ், அம்பிகா, வித்யார்தி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். "யாரடி நீ மோகினி,' "குட்டி' ஆகிய படங்களைத் தொடர்ந்து மித்ரன் ஆர்.ஜவஹர் திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
படத்தில் சிவா என்ற கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். பூஜா என்ற கேரக்டரில் ஜெனிலியா நடித்து இருக்கிறார் .படத்தில் மொத்தம் 32க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாக்யராஜ், அம்பிகா, ரேகா, கருணாஸ், ஸ்ரீநாத், ஆர்த்தி, மயில்சாமி உள்ளிட்டவர்கள் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.திருநெல்வேலி, பழனி, குற்றாலம், சென்னையில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். சுவிஸ் மற்றும் இத்தாலியில் பாடல்காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும். கூட்டுக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைக் கொண்ட இப்படத்தின் திரைக்கதை ஜனரஞ்சகமாக அமைத்து உள்ளார்களாம் . கூட்டுக்குடும்ப வாழ்க்கை குறைந்து போன நிலையில், அண்ணன், தம்பி, சொந்த பந்தங்களோடு எப்படி வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை இழை ஓட, குடும்ப கதையாக, அழகாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றார் இயக்குனர் .
உறவுகளை உணர்வோம் என்று இந்தப் படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். கூட்டுக் குடும்ப வாழ்க்கை பற்றிய கதை எனும் போது அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதில் நிறைய கஷ்டம் இருக்கும் என்று நினைத்தோம். அது மிகச் சுலபமாக இருந்தது'' என்று கூறும் இயக்குனர் படம் அருமையாக வந்து இருக்கிறது என்கிறார் .
பாப்போம் தனுஷுக்கு இன்னுமொரு வெற்றி காத்து இருக்கிறதா என்று ? தீபாவளிக்கு ஜெயிக்குதா என்று ?
குடும்ப கதை என்ற படியால் எல்லோரும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பார்கள் . ரசிகர்களின் ஆவலை இந்த படம் பூர்த்தி செய்கிறதா என்று பொறுத்திருந்து பாப்போம் .
8 comments:
உத்தம புத்திரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நிச்சயம் வெற்றி பெறும். ஒரு பெரிய நட்திர பட்டாளமே உள்ளது போல... பகிர்வுக்கு நன்றி..! (பதிவு லோட் ஆக தாமதமாகிறது.)
நன்றி குமார் .
நானும் படம் வெற்றி பெரும் என்றுதான் நினைக்கிறேன்
நன்றி பிரவீன்
நான் ஜெனிலியாவிக்காக கண்டிப்பா பார்ப்பேன்
நன்றி பவி தகவல்களுக்கு
உத்தம புத்திரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ம்ம்ம்ம் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும்.
நன்றி மணிவண்ணன்
நன்றி சரவணன்
Post a Comment