Tuesday, November 2, 2010

கார்த்தியின் சிறுத்தை

 http://4.bp.blogspot.com/_DJJXB9E5QBA/TJe1ncV5_UI/AAAAAAAAB9A/-I8uaz8qkeo/s1600/Siruthai%5BTamilmp3corner%5D.jpg
இளம் நாயகர்களில் , படிப்படியாக முன்னேறி கொண்டு வெற்றி நடை போடும் நாயகர்களில் ஒருவராக மாறி விட்டார் கார்த்தி . பருத்திவீரன்' கார்த்தி, பின்பு 'பையா' கார்த்தியானர், தற்பொழுது 'நான் மகான் அல்ல' கார்த்தியாகிவிட்டார்.  இப்படி படத்துக்கு படம் எல்லா ரசிகர்களையும் கொள்ளை கொண்டு வருகிறார் கார்த்தி . கூடுதலாக கார்த்திக்கு ரசிகைகள் அதிகம் ஆகி விட்டனர் .

சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறி விட்டார் . அதேபோல் கார்த்தியும் உயர்ந்து கொண்டு வருகிறார் . நிச்சயம் முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடிப்பார் . தன்னை தானே வளர்த்துக்கொள்வதே கார்த்தியின் சிறந்த பண்பாக கருதப்படுகிறது. இதுதான் அவரின் வெற்றியின் ரகசியம் .
http://www.cinefundas.com/wp-content/uploads/2010/08/Karthi.jpg
ஸ்டூடியோ ஸ்க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படம் சிறுத்தை. கார்த்தி, தமன்னா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கில் தயாரான விக்ரமார்க்குடு படத்தின் ரீமேக் ஆகும். கார்த்தி முத‌ல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமும் இதுவாகும். படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுத்து வருகிறாராம் இயக்குநர் சிவா.
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/tamanna.jpg
'பருத்தி வீரன்', 'நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவதாக ஸ்டுடியோ ஸ்க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் 'சிறுத்தை'. இதில் முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கும் கார்த்தி பிக்பாக்கெட் மற்றும் படித்த இளைஞன் என இரண்டு வேடத்திலும் வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறாராம். ஒரு சாதாரண இளைஞனுக்கு அசாதாரண கடமையை முடிக்க வேண்டிய சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை எப்படி முடித்துக் காட்டுகிறான் என்பதே இப்படத்தின் கதை .
 http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-10-01/images/karthi-siruthai-tamannah-04-09-10.jpg
"பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான். அதன் வேகம் இணையில்லாதது. இப்படத்தின் நாயகனின் கதாபாத்திரமும் இதே குணம் கொண்டதுதான், அதனால்தான் இந்தப் பெயரை படத்தின் தலைப்பாக வைத்தேன்" என்று தலைப்பின் காரணத்தை கூறிய இயக்குநர் சிவா, நடிகர் பாலாவின் சகோதரர் ஆவார் . 

சிறுத்தை படத்தின் நகைச்சுவைப் பகுதிகள், ரசிகர்களின் வயிறுகளைப் புண்ணாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் வரும் நகைச்சுவை களைகட்டும் விதத்தில் அமைந்திருக்க, அதே சமயம் படம் முழுக்க தொடரும் சஸ்பென்ஸ் திரைக்கதையின் விறுவிறுப்பை கூட்டுமாம். முன்னணி நாயகனாக வேகமாக வளர்ந்து வரும் 'கார்த்தி', புதிய முயற்சிகளில் ஈடுபட இதுவே சரியான தருணம் என உணர்ந்துள்ளார். 
 http://www.filmmy.com/images/pai.jpeg
இப்படத்தின் சண்டைக்காட்சியில் 150 அடி உயரத்திலிருந்து குதித்து படப்பிடிப்புக் குழுவை திகைக்க வைத்தாராம். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றோரின் சோதனை முயற்சிகள் சில நேரங்களில் பாக்ஸ் ஆபிஸில் பலனளிக்கத் தவறினாலும், பெரும்பாலும் வெற்றியையே பெற்று தந்திருக்கிறது.

பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பாடல் காட்சியில் எப்படி பல கெட்டப் போட்டாரோ அதுபோல இதில் கார்த்தி ஒரு பாடலுக்காக 9 கெட்டப் போட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சிவா 9 வேடங்களில் நடிக்கும்படி கார்த்திக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிவாவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கார்த்தி, அவர் விருப்பம் போல நடந்து கொள்ளத் தயாராகிவிட்டார். 

கார்த்தியின் வழக்கமான படங்களைப் போல 'சிறுத்தை' படமும் மசாலா அம்சங்கள் நிறைந்ததாக உருவாகவுள்ளது. 'சிறுத்தை'யின் எழுபது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.
 http://goob.mobi/slide/Siruthai_to_be_roar_from_December_Onwards-4c3ebc5e68891f82c696c3e6e39dedd8.jpg
கார்த்தியின் வெற்றிக்கு, சந்தோசத்துக்கு பல காரணம் உண்டு . 'நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தியின் நடிப்பை சிவகுமார் வெகுவாக ரசித்திருக்கிறார். கதாப்பாத்திரங்களை கவனமாக தேர்வு செய்யும்படி கார்த்திக்கு சிவக்குமார் அடிக்கடி ஆலோசனை வழங்கி வருகிறார். ஜோதிகாவும், கார்த்தியை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகிறார். கார்த்தியின் நகைச்சுவை உணர்வும், நடன அசைவுகளும் அவரது தாயை வெகுவாக கவர்ந்திருக்கிறதாம். நடிப்பிலும், ஒப்பனையிலும் முன்னேற்றம் காண்பது குறித்து சூர்யா ஆலோசனை வழங்கி வருகிறாராம். இப்படி கார்த்தியின் மொத்த குடும்பமும் கார்த்தி வெற்றிக்காக உழைத்து, அவரது வெற்றியால் மகிழ்ந்து, அவரது வெற்றியின் ரகசியமாக விளங்கி வருகிறது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdJ0G-X_Xt1-jtniRzgRbBan4Cu0rkV48E-KseEosoY3ANawJGmi1pFJF0dWrdjIDvX0qSf9_SxY0DK2-lBfXZ7HCQiq4_zTGkOh1BZOEzirvlXFoTwlIFPfNU4xlb5IhGZfh1H9Icl0Gl/s1600/karthi11.jpg
அசத்துங்க கார்த்தி அசத்துங்க ...... சிறுத்தையை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் கார்த்தி . நானும் கார்த்தியின் ரசிகை தானுங்கோ...........

2 comments:

Anonymous said...

kaarththi is super..........


mano

Pavi said...

நன்றி மனோ