Saturday, November 6, 2010

எல்லோரையும் கவரும் புதிய தொலைக்காட்சி பெட்டிகள்

http://www.unicom.com/files/20081229-LN40A450.jpg
முன்பெல்லாம் வசதியானவர்கள் மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருப்பார் . தெருவுக்கு ஒருவர், இருவர் வைத்திருப்பார்கள் . இப்போது அப்படியா ? இல்லையே . வீட்டுக்கு ஒவ்வொன்று வந்து விட்டது . தொலைக்காட்சி பெட்டியை தான் நாம் டிவி என்றும் , டெலிவிசன் பெட்டி என்றும் அழைக்கின்றோம் .

புதிய புதிய தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய வசதிகளை கொண்ட பல நவீன சாதனங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன . அது போல் டிவி ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய வடிவங்களில் வெளிவருகின்றன . முன்பெல்லாம் டிவி பாரமானதாகவும் , பெரிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பெரியதாகவும் இருக்கும் . இப்போதெல்லாம் புதிய வடிவங்களில் பாரம் இல்லாமல் தட்டையானதாக வருகின்றன .
http://www.eduinreview.com/blog/wp-content/uploads/2009/01/old-tv.jpg
தொழில்நுட்பத்தில் புதியபுதிய கண்டுபிடிப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளன. குறிப்பாக டி.வி யை பொறுத்தவரை எல்.சி.டி தொழில் நுட்பத்தை தொடர்ந்து அதன் அடுத்தகட்ட தொழில் நுட்பமான எல்.ஈ.டி டி.விக்கள் சந்தையில் களமிறங்குகின்றன.
http://www.boston.com/ae/music/blog/television.jpg
இன்று டிவி இல்லாத வீடுகள் ஏதும் உண்டா . எல்லா வீடுகளிலும் உண்டு . கிராமங்களில் கூட எல்லோரினதும் வீடுகளில் டிவி உண்டு . படங்கள் , நாடகங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் . ஒரு செய்தியை எல்லோரிடமும் பரப்பும் ஒரு சாதனமாக இந்த தொலைக்காட்சி பெட்டிகள் காணப்படுகின்றன . அதற்க்கு ஏற்றாற்போல் பல தொலைக்காட்சி அலைவரிசைகளும் உண்டு . உடனுக்குடன் செய்திகளை வழங்குகின்றன . மக்களுக்கு உடனடியாக தகவல்கள் பரப்பபடுகின்றன.

அதில் முதலில் ''பிளாட் வகை'' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டது.இதன் மூலம் தொலைக்காட்சியின் முன்பக்கம், உள்ள திரை சமதளமாக காட்சியளித்தது. அது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக இருந்தது, அடுத்தது, ''ஸ்லிம் பிட்''தொழில்நுட்பம் இந்த தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சியின் பின்பகுதி சிறியதாக்கப்பட்டது. இதன் மூலம் எடை குறைவான தொலைக்காட்சி பெட்டிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. இன்னும் எப்படி மக்களை கவர முடியும் என முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாரித்து விற்பனைக்கு விடுகின்றனர்.
http://www.i-marco.nl/weblog/images/sony-kds-55a2000.jpg
இப்போதெல்லாம் வசதி வாய்ந்தோர் , நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் எல் .சி .டி டிவி பிரபல்யம் . இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் தெளிவான புள்ளிகள்,கோடுகள் இல்லாத கண்களை உறுத்தாத காட்சிகளை நாம் திரையில் காண முடியும் . போக போக எல்லா வீடுகளிலும் இந்த வகை டிவி கள் எல்லோரையும் கவரும் . எல்லா வீடுகளிலும் இருக்கும் .

தொழில் நுட்ப வளர்ச்சியினால் நாம் எவ்வளவு சிறப்பம்சங்களை எல்லாம் அனுபவிக்கின்றோம் . போட்டிகள் பலமாக இருக்கும் போது தான் பொருட்களின் விலைகளும் கொஞ்சமாவது வீழ்ச்சி அடையும் . அப்போது தான் எல்லோரும் வாங்க கூடிய விலைக்கும் பொருட்கள் இருக்கும் . கையையும் கடிக்காத அளவுக்கு விலையும் இருக்கும் . அதைதானே நாம் எதிர்பார்ப்போம் .












6 comments:

Muruganandan M.K. said...

இயல்பான நல்ல பதிவு.

Sivatharisan said...

நல்ல பதிவு ஆனால் திரட்டி எதிலும் சேர்க்க இல்லையே .

Anonymous said...

nalla pakirvu. pathivu.


mano

Pavi said...

நன்றி முருகானந்தன் ஐயா அவர்களே

Pavi said...

நன்றி சிவதர்சிகன்
நான் திரட்டிகளில் சேர்க்கவில்லை

Pavi said...

நன்றி மனோ